Philosophy in Tamil

தத்துவவியல் :
சமூகம் என்பதை வரைவிலக்கணப்படுத்துக? RJ கெலன்வூட் என்பவரின் கருத்துக்கு அமைய சமூகமென்பது பரந்த சமூதாயத்தில் சமூக விழுமியங்கள், பொறுப்புக்கள், கடமைகள் ஆகியன தொடர்பான பூரணவிளக்கத்தினைக் கொண்டாலும் சமூக உணர்வினைக் கொண்ட பிரிவினைரையும் சமூகம் எனக் கொள்ளலாம்.
சமூகம் என்பது ஒரு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொது இலக்குகளையும். விழுமியங்களையும் கொண்ட ஒரு அமைப்புக்கு உரிமை பாராட்டும் மக்கள் கூட்டம் சமூகம் எனப்படும்.
பாடசாலை சமூகம் என்பதை தெளிவுபடுத்துக? கல்வி தொடர்பான பாரிய பொறுப்பினை ஆற்றுவதற்காக சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமே பாடசாலையாகும். இப்பாடசாலை சமூகத்தில் 01. பாடசாலை அங்கத்தவர்கள் காணப்படுவர். 02. நோக்கத்தை அடைவதற்காக அதிபர், ஆசிரியர் குழுவினர் உள்ளனர், 03. ஒழுக்க நெறிக்கோவை, சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன. 04. பாடசாலைக்கும் புறச்சமூதாயத்திற்கும் இடைத்தொடர்பு காணப்படுகின்றது. புறச் சமூதாயத்திற்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை பாடசாலை வழங்குகின்றது. எனவே பாடசாலையை நிறுவனம் என்பதை விட பாடசாலை சமூகம் என்பது பொருத்தமான கூற்றாகும்.
பாடசாலையில் வளரந்தோர் இளம் அங்கத்தவர்கள், மாணவர்கள் கற்பிப்போர் கல்வி அதிகாரிகள், பெற்றோர். உணவுக்குழு, பாடசாலை அபிவிருத்;தி சங்கக்குழு ஆகியோரைக் கொண்டு பல்வேறு விதத்தில் ஒத்துழைப்புக்காட்டப்படும் ஒழுங்கமைப்பு கொண்ட சமூக அலகாகும்.
ஒரு மாணவனின் வாழ்வில் தான் சார்ந்த சமூகம், பண்பாடு, கலாசார விழுமியங்கள், ஒழுக்க நெறிகளை ஊட்டி சமூகத்தி;ற்கான அறிவு, திறன், மனப்பாங்குகளை வளர்க்க நற்பிரஜைகளை உருவாக்கிறது. எனவே, பாடசாலை ஒரு சமூகமாகும்.
பாடசாலை ஒரு சமூக கட்டமைப்பாகும் : குறித்த நோக்கங்களை எய்துவதற்காக தனியாள் ஒருவர் அல்லது பல தனியாள்கள் ஒன்று சேர்ந்து ஆற்றும் பல கருமத் தொடர்களினை ஒன்றிணைத்த கூட்டு மொத்தமான கோலம் கட்டமைப்பாகும்.
பாடசாலை கட்டமைப்பு என்பது பரந்த சமூகத்தின் நோக்கங்களை எய்துவதற்காக கருமமாற்றுகையில் பாடசாலையினால் பின்பற்ற வேண்டிய பல கருமத்தொடர்களை உள்ளடக்கிய அமைப்பு பாடசாலை கட்டமைப்பாகும்.
பரந்த சமூகத்தில் நோக்கங்களை எய்துவதற்காக பாடசாலை ஒரு சமூகக் குழுவாக கருமமாற்றுகின்ற அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம். நலன்விரும்பிகள் என்போரை ஒரு முறையான நிர்வாக அமைப்பின் கீழ் ஈடுபடுத்தி செயற்படும் ஒரு சமூக அமைப்பு பாடசாலை சமூக அமைப்பு எனப்படும்.
04. பாடசாலையின் வினைத்திறனையும், விளைதிறனையும் உயர்த்துவதில் நடைமுறையில் உள்ள முறைசார் ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு செல்வாக்குச் செலுத்தும் முறையை உங்களது பாடசாலையின் ஊடாக விளக்குக. பாடசாலையின் முறையான கட்டமைப்பு
கல்வி அமைச்சுஃகல்வி செயலாளர், பிராந்திய கல்வி அலுவலகம் - பிராந்திய கல்விப்பணிப்பாளர் - பிரதம கல்வி அதிகாரி, அதிபர், உபஅதிபர், பிரிவுத்தலைவர்கள், பாடத்தலைவர்கள், தரத்தலைவர்கள், வகுப்பு பொறுப்பாசிரியர்கள், மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள், மாணவர்கள் 
1. கல்விச் செயலாளர் இவர்கள் தேவையான போது தேவையான ஆலோசனைகளையும் தேவையான பௌதீக வளங்களையும், மனிதவளங்களையும் வழங்கும் போது பாடசாலையின் வினைத்திறனையும், விளை திறனையும் அதிகரிக்க முடியும். 2. அதிபர் : ஆசிரியர்களினதும் உயர் அதிகாரிகளினதும் ஆலோசனைகளை செவிமடுத்து பாடசாலையை நடாத்துகின்ற போது பாடசாலை சிறப்பாக அமையும். பாடசாலைப் பொறுப்புக்களையும், கடமைகளையும் பகிரந்தளிப்பதன் மூலம் பாடசாலையை சிறப்பாக நடாத்த முடியும். பாடசாலைப் பெற்றோர் நலன்விரும்பிகளின் உதவியைப் பெறுவதன் மூலமும் சிறப்பாக நடாத்தலாம். 3. பிரிவுத்தலைவர்கள் : தங்கள் பிரிவுக்குரிய வளங்களை அதிபரிடம் பெறுவதன் மூலமும் பிரிவுக்குள் காணப்படுகின்ற ஆசிரியர் கருத்துக்களையும் ஒத்துழைப்புக்களைப் பெறுவதன் மூலமும் மாணவர்களை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதன் மூலமும் பாட ஆசிரியர் வராதபோது ஏனைய ஒழுங்கமைப்புக்களை செய்வதன் மூலமும் பாடசாலையின் வினைத்திறனை உயர்த்தலாம். பாடத்தலைவர்கள் :தங்களுக்குரிய பாடத்தின் அடைவுகளையும் அதன் மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் ஏற்பாடு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பாடத்தில் சிறப்பான பெறுபேறுகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பாடசாலையின் வினைத்திறனையும், விளைதிறனையும் அதிகரிக்கும்.  தரத்தலைவர்கள் : தங்களுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுத்தல், மாணவர்களை வகுப்பறையில் ஒழுங்குபடுத்தல்..... வகுப்பாசிரியர்கள்: அன்றாட நடவடிக்கை சிறப்பாக ஒழுங்கமைத்தல், சரியான முறையில் வகுப்பை ஒழுங்கமைத்தல், சிறப்பான முறையில் நடாத்திச் செல்லுதல் ... மாணவத்தலைவர்கள் : அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று தங்கள் செயற்பாடுகளை சிறப்பாக செய்வதன் மூலம் பாடசாலை ஒழுங்கமைப்பைப் பேணி .....
05. கல்வி, சமூகப் பெயர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. பல குடும்பங்கள் ஒன்றிணைந்த அமைப்பு சமூகம் எனப்படும். சமூகப் பெயர்ச்சி என்பது சமூகத்தில் அங்கம் வகிக்கும் தனியாள் இடத்தே இடையாறாது ஏற்படுகின்ற மாற்றமாகும். இது 2 வகையில் இடம்பெறுகிறது. அதாவது ஆரம்ப காலத்தில் கல்வியானது வளர்ச்சி குறைவாகவும் சமூகப் பெயர்ச்சி மந்தமாகவும் வளர்ச்சியடைந்தது. பின்னர் கல்வியினால் சமூகத்தில் துரிதமாக ஏற்பட்ட மாற்றத்தினால் சமூகப் பெயர்ச்சியடைந்தது. உதாரணம் - பிரான்ஸ் புரட்சி
கல்வியானது சமூகப் பெயர்ச்சியில் பின்வரும் விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  தனியாள் விழுமியங்கள், அறநெறிகள், பழக்கவழக்கங்கள், மனப்பாங்கு, மொழி, ஆடை அனிகலம், அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு.
சமூகப் பெயர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தனியாள் விழுமியங்கள் என்பது மூதாதையினரால் செம்மைப்படுத்தப்பட்ட நற்பழக்கவழக்கங்கள் தனியாளின் விரும்பத்தக்க மாற்றத்தை கொண்டுவருதல் தனியாள் விழுமியங்கள் எனப்படும். அதாவது ஒரு தனிநபர் கல்வி கற்பதால் அது சமூகப் பெயர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது.
அறநெறி பழக்கவழங்கங்கள் சமூகப்பெயரச்சி காரணமாக அமைகின்றது. அதாவது பாடசாலையில் சமயப்பாடத்தில் அறநெறி பழக்கவழங்கள் கற்பிக்கப்படுவதால் ஒருவர் இன்னொருவரின் மதம், மொழி, கலாசார பண்பாடுகளுக்கு மதிப்பளிப்பதன் ஊடாக சமூகப் பெயர்ச்சி அடைகின்றது. 
மனப்பாங்கு கல்வி சமூகப் பெயர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. உதாரணமாக ஒருவர் கல்வி கற்பதால் கல்வி கற்ற சமுதாயம் கல்வி கற்காத சமுதாயம் என பாகுபடுத்தப்பட்டு சமூகப் பெயர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது.
மொழி ஆடை அணிகலம், தற்போது ஆங்கிலக்கல்வி மிகமுக்கியமாகக் காணப்படுவதால் சர்வதேச பாடசாலைகளில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு போதிக்கப்படுவதால் நகரம், தலைநகரங்களில் மக்கள் குடியேறுவதால் சமூதாயத்தில் ஆடை அணிகலங்களை அணிந்து மாற்றம் அடைவதால் கல்வி சமூகப் பெயர்ச்சிக்கு காரணமாகின்றது.
அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு : மேலத்தேய நாடுகளிடம், கீழைத்தேய நாடுகளிடம் அரசியல் பொருளாதாரம் வேலைவாய்ப்பு போன்ற துறைகள் மூலம் கல்வி சமூகப் பெயர்ச்சிக் காரணமாக அமைகின்றது.
06. தற்கால பாடசாலை முறைமை சமூக சமமின்மையை அதே நிiலையில் நிலைபேறடையச் செய்யும் வகையில் செயற்படுகின்றது. எனும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. இக்கூற்று தொடர்பாக உங்கள் கருத்து யாது?
இலங்கையில் இலவசக்கல்வி அடிப்படையில் பாடசாலையில் கல்வி புகட்டப்படுகின்றது. கல்வியை வழங்குவதில் இனம், மொழி, பால், வகுப்பு போன்ற பேதங்கள் சமத்துவமான கல்வியினை நடைமுறைப்படுத்தி அரசாங்கம் பல்வேறுபட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் நடைமுறையில் தற்கால பாடசாலை முறைமையானது சமூக சமமின்மையை அதே நிலையை நிலைபேறடையச் செய்யும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அதற்கான காரணங்கள் வருமாறு
- சம சந்தர்ப்பத்தில் சமத்துவமின்னைம : பாடசாலை அனுமதிக்கும் போது தரம் ஒன்றிக்கு அனுமதிக்கும் போது குடும்பம், பொருளாதார நிலை, சமூக வகுப்பு போன்றவை நகர்புற பாடசாலைகளில் கவனத்தில் கொள்ளப்டுகின்றது. இதனால் கீழ்வகுப்பு சமூகத்தில் உள்ள பிள்ளைகள் நகர்புற பாடசாலைகளில் கல்வியைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.
- வளப்பங்கீடு சமத்துவமின்மை : பௌதீக வளங்களைப் பொறுத்தவரையில் நகர்புற பாடசாலைகளில் கூடுதலான வளங்களும் கிராமப்புற பாடசாலைகளில் குறைந்தளவான வளங்களும் பங்கீடு செய்யப்படுகின்றது. மனித வளத்தைப் பொறுத்தவரை பாடரீதியான ஆசிரியர்கள் ஒதுக்கீட்டில் நகர்புறப்பாடசாலைக்கு முக்கியத்துவமும், கிராமப்புற பாடசாலைக்கு முக்கியத்துவமின்மையும் வழங்கப்படுகின்றது.
- பாடசாலை வளம் : இலங்கைப்பாடசாலை முறைக்கேற்ப பாடசாலைகள் பிரதேச ரீதியாக வைக்கப்பட்டுள்ள தேசிய பாடசாலைகள் 1யுடீஇ1ஊஇ வுஐஐஇ வுஐஐஐஇ  ஒரு ஆசிரியர் பாடசாலை போன்றன. இதனால் நகர்புற பாடசாலைக்கும் கிராமப்புற பாடசாலைக்கும் இடையில் கல்வி வழங்குவதிலும் பெறுவதிலும் வேறுபாடு உள்ளது.
- தொழிலைப் பெற்றுக் கொள்வதில் பாகுபாடு நகர்ப் பாடசாலைப் பிள்ளைகள் தொழிலைப் பெறுவதற்கான அறிவுடன் தயார்படுத்தப்படுகின்றனர்.
- பாடப்பிரிவுகளைத் தெரிவு செய்வதில் பாகுபாடு : கீழ்வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் கலைப்பிரிவையே தெரிவு செய்கிறது.
- ஆசிரியர் பிள்ளைகளை வழிநடாத்துவதில் உள்ள பாகுபாடு : ஆசிரியர் சமூக வகுப்பு அடிப்படையிலும் திறமை அடிப்படையிலும் மாணவர்கள் அனுகுவதால் கீழ் சமூக வகுப்பு மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
07. சமூக வகுப்பைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை? ஒவ்வொரு சமூகத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு தனியாளும் அங்கத்துவம் வகிக்கின்ற வௌ;வேறு விடயங்களின் செயர்க்கையிலான ஒரு வாழ்க்கை முறையாகும். இதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் , - வார்ணனின் கருத்துப்படி  (தொழில், வீட்டுவகை, அங்கத்துவம் வகிக்கும் சமூகம், வருமானம், கல்வி மட்டம் என்பவை தீர்மானிக்கின்றது.
மஸ்கிறயோவின் கருத்துப்படி தொழில், வருமான, போசனை மட்டம் ஆகும்.
பொதுவாக நோக்கினால் : தொழில், வீட்டு வகை, வருமானம், கல்வி மட்டம், சமூகத்தின் தன்மை, வாழ்க்கைப் பழக்கவழக்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
08.சமூக வகுப்பு கல்வியில் ஏற்படுத்தும் பாதகமான செல்வாக்கு? நான்கு காரணி ஊடாக விளக்குக? 1. மாணவர் அடைவில் 2. பாடசாலை வகைகளை தெரிவு செய்வதில் 3. பாடப்பிரிவை தெரிவு செய்வதில் 4. தொழிலைத் தெரிவு செய்வதில்
அ) மாணவர் அடைவில் செலுத்துகின்ற தாக்கம் : மேல், நடுத்தர வகுப்புப் பெற்றோர் மற்றும் குடும்ப சூழல் தொழில், வருமானம் என்பவற்றில் கீழ்வகுப்புக் குடும்பங்களை விட உயர்வான தன்மையைப் பேணுவதன் காரணமாக பிள்ளைக்கு வழங்கப்படும் கல்வி ஊக்குவிப்பில் வித்தியாசம் காணப்படுகின்றது.
அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் விதம், உபகரணப்பயன்பாடு, ஆடை அணிகலன், பழக்கவழங்கள் மனவெழுச்சிகள், சமூக வகிபங்குகளை ஆற்றும் திறன் என்பவை உயர், நடுத்தர மட்டத்தில் போதுமான அளவு காணப்படும். ஆனால் கீழ் மட்டக்குடும்பங்களின் இவை தாழ்வாகக் காணப்படுகின்றன.
அதே போல் கீழ்மட்டக்குடும்பங்களில் குறைபோசனை மொழித்திறன் விருத்திக்குறைவு என்பன காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் கல்வி அடைவிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பாடசாலைகளில் நடுத்தர வர்க்கத்திற்கு பொருத்தான விழுமிய, அறிவு, கலாச்சார பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுவதால் கீழ்மட்ட மாணவர்களது உயிர்ப்பான கல்விச் செயற்பாடுகளும் குறைய காரணமாக அமைகின்றது.
ஆ. பாடசாலை வகையைத் தெரிவு செய்தல் :  இலங்கையில் பலவகையான பல தரங்களாகப்பிரிக்கப்பட்ட பாடசாலை முறைமை காணப்படுகின்றது. இது மாணவரின் கல்வியில் பொதுவாக தாக்கம் செலுத்தும்
உயர்மட்டப்பாடசாலையில் மேல்வர்க்கத்தினரும், நடுத்தர வர்க்கத்தினரும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். கீழ் மட்ட மாணவர்கள் பிரபல்யம் குறைந்த கிராமப்பாடசாலைகளையே தெரிவு செய்கின்றனர். தற்சமயம் உயர்மட்டப்பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் விழுமியப் பண்பாடுகள் காரணமாக இடைவிலகுகின்றனர்.
இ. பாடப்பிரிவுகளை தெரிவு செய்தல் : சரியான ஆலோசனை வழிகாட்டல் இன்மையாலும் பொருளாதார வசதியின்மை காரணமாகவும், பாடசாலைகளில்  விஞ்ஞான, கணித பாட ஆசிரியர் இன்மையாலும் கீழ் மட்ட மாணவர்கள் பெரும்பாலும் கலைப்பிரிவை தெரிவு செய்கின்றனர்.
ஈ தொழிலைத் தெரிவு செய்வதில் : பாடத் தெரிவின் ஊடாக தொழில் தீர்மாணிக்கப்படுவதாலும் தனியாள் பல்வேறு ஆதிக்கங்களின் துணையுடன் தொழில்கள் வழங்கப்படுவதாலும், கீழ்மட்ட மாணவர்கள் உயர் தொழிலில் ஈடுபடுவது குறைவு.



தத்துவவியல் - வாழ்நாள் கல்வி (ஆயுள் கல்வி)
யுனோஸ்கோ நிறுவனத்தினால் எக்கா வோறே அவர்களது தலைமைத்துவத்தில் நியமிக்கப்பட்ட ஏழாவது சர்வேதச கமிட்டியின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட  வாழ்க்கைக்காக கல்வி - இன்றைக்கும் நாளைக்கும் பொருத்தமான கல்வியாகும்.
இதன் எண்ணக்கருவில் விரிவான அர்த்தம் பொதிந்துள்ளது.
1. மனிதனுக்குப் பிறப்புத் தொட்டு இறப்பு வரை கல்வியை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல் 2. நாட்டின் மக்கள் ஒவ்வொருவருக்கும் கல்வியை  புகட்டுதல் 3. கல்வியை பாடசாலைக்கும் முறைமையான கல்வி நிறுவனங்களுக்கும் மாத்திரம் வரையறைப்படுத்தியிருத்தல். 4. அனுபவங்களில் ஊடாக கல்வி பெறல்.  5. மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் கற்றோம் என்ற உணர்வுடனே கற்றோம் என்ற உணர்வு இன்றியே கற்றுக் கொள்ளல்.
வாழ்நாள்நீடித்த கல்வியின் நோக்கங்கள் : 1. வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் உச்சபயனைப் பெற்றுக் கொள்ளல். 2. தனியாருக்கு பொருத்தமான திறனைப் பெறவசதி செய்தல். 3. தனியாளுக்கு உயர்ச்சி அடைய அவருக்கு தேவையான உதவி வழங்குதல். 4. எதிர்காலப்பிரச்சினை எதிர்கொள்ளக் கூடிய திறனை, ஆயத்த நிலையையும் உருவாக்குதல். 5. தனியாள் ஆளுமையை வளர்த்து இயன்றளவு முழுமையான வாழ்க்கையை நடாத்துவதற்கான வாய்ப்பைக் பெற்றுக் கொடுப்பதாகும். 6. இக்கல்வியான முன்னேற்றத்தை விரிவுபடுத்தி அதன் ஊடாக சுய வெற்றி ஈட்டித்தருகின்ற தொடர்ச்சியான செயல்முறையாகும்.
கல்விமையச்சமூகம் : - கற்றலில் ஈடுபடும் சமூகத்தை இது குறிக்கிறது. இவ்வாறான சமூகத்தை தோற்றுவிக்க வேண்டியதன் தேவை ஆயுள்கால கல்வி எண்ணக்கருவின் ஊடாக உறுதிப்படுத்ப்படுகின்றது, - இச்சமூகத்தில் காணப்படவேண்டிய தன்மையானது, கல்வித்துறையில் காணப்பட்ட தன்மையை விட நெகிழ்ச்சியானது, எளிதானதுமாக இருத்தல் வேண்டும். தற்போது கல்வித்துறையில் காணப்படும் உறுதியான சட்டதிட்டங்கள் நெகிழ்வுத்தன்மையற்ற கருமத் தொடர்கள் ஆகியன காரணமாக பெருந்தொகையான மாணவர்கள் பாடசாலைக்கல்வியை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.  - கல்வி மையச்சமூகத்தில் முறைசார், முறைசாரா, முறையற்ற ஆகிய மூன்று அம்சங்களையும் கல்விக்கருமத்தொடரில் பங்கெடுக்கச் செய்வதன் மூலம் ஒவ்வொருவரும் தான் விரும்பிய வேளை தான் விரும்பும் இடத்திற்குச் சென்று தேவையான அளவு கல்வியைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்தல். - கல்விச் மையச் சமூகத்தில் கற்றல் கருமம் முழுநேரக்கருமம் ஒன்று மாத்திரமல்ல அது குறைவுநேர, ஓய்வு நேர கருமமாகவும் செயற்படும். ஆயுள்காலக்கல்வியில் மனதைச் செலுத்தியதன் பின்னர் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் கல்விக்காக செலவு செய்யக்கூடிய சமூகமொன்று தோன்றும். - கல்விமையச் சமூகத்தில் வளர்கின்ற ஆயுள்கால கல்வியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் உயிர்ப்பற்ற செயற்படாத கலாச்சாரத்திலிருந்து வெளியேறி, செயற்பாடு தன்மை கொண்ட கற்றுக் கொள்ளும் ஒரு கூட்டத்தினராக மாறுபவர் என்பது திண்ணம். - கல்விமையச் சமூகத்தில் நிலவுகின்ற முற்று முழுதான சமூகம் அவனது பாடசாலையாகும்.  - கல்விக்கு வேலை செய்வதற்கும் இடையில் உள்ள இரட்டைப் பிரிப்பு நிலை அற்றுப்போகும். அவை இரண்டும் சமாந்தரமாகவும் செல்லும் கற்றபடி செய்கின்ற வேலை செய்தவாறு கற்கின்ற சமூகமொன்று தோன்றும்.
திறந்த கல்வி: இக்கல்வியை வழங்கும் நிறுவன அமைப்பு திறந்த பாடசாலை அல்லது திறந்த பல்கலைக்கழகமாகும். கல்வியைச் சகலரும் திறந்து விடுதல் என்பதே இதன் கருத்தாகும். அதாவது பல்வேறு தடைகள், குறைபாடுகள், பிரச்சினைகள் காரணமாக சம்பிரதாயப்பாடசாலை கல்வியைத் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் இலகுவான வழிகளில் தாம்விரும்பும் கல்வியை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்தலே திறந்த கல்வியாகும். வாழ்க்கை நீடித்த கல்வியை திறந்த கல்வி  வசதிகளை வழங்குவதன் ஊடாக வெற்றிகரமாக்கிக் கொள்ள முடியும். - சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பகுதி நேர விடுமுறைகாலப் பாடநெறிகள், தொலைக்கல்விப் பாடநெறிகள், தபால்மூல, வானொலி, தொலைக்காட்சிப்பாடங்கள் ஆகிய பல்வேறு நுட்ப முறைகள் திறந்த கல்வி எண்ணக்கருவுடன் தொடர்புபடுத்தி விருத்தி செய்து கொள்ள முடியும். தேவையான சகலருக்கும், முயுமான கல்வியைப் பெற்றுக் கொள்ள வழிவகுப்பதே திறந்தகல்வியின் எதிர்பார்ப்பாகும். - மாணவர்கள் சுதந்திரமாக மேற்பார்வை எதுவுமின்றி தனியாக கல்வி பயில வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. திறந்த வகுப்பறையில் மாணவர்கள் நேரத்தில் பல்வேறுபட்ட பணிகளில் ஈடுபட்டிருப்பர். முறைசார்ந்த வகுப்பைப் போன்று சகல மாணவர்களும் ஒரே கற்றல் பணியைச் செய்யவதில்லை, மாணவர்களுக்கு பல்வேறு வகைப்பட்ட பணிகளுக்கு ஏற்ப வகுப்பறைகளில் மாணவர் அமரும் ஒழுங்கும் மாற்றப்பட்டிருக்கும். - திறந்த பாடசாலையில் மாணவர் சுதந்திரம் வலியுறுத்தப்படுகின்றது.
கல்வியின் புதிய போக்கு :
முறையில் கல்வி - குழந்தை பிறந்திலிருந்து மரணம் வரை முறைசார் அமைப்பாகவன்றி பெற்றுக் கொள்ளும் சகல கற்றல்களையும் முறையில் கல்வி, விசேட ஆயத்தமின்றியும், வெளிக்காட்டப்படாத நிலையிலும் தான் கற்றுக்கொள்கின்றா? கற்றுக் கொள்ள வில்லையா? என்பதை அறியாமலும் ஒருவர் பெற்றுக் கொள்ளும் கற்றல், அன்றாடம் சமூதாயச் சூழலினால் கிடைக்கும் அறிவும் கற்றலும் இதில் அடங்கும். - பாடசாலை கல்வியோடு தொடர்படுவதற்கு முன்னுள்ள 5 வருடக்காலத்திலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் கற்றல், முறையில் கல்வியாகவே காணப்படுகின்றது. குழந்தை குறிப்பிட்ட சூழலில் வாழும் போது அச்சூழலின் பௌதீக நிலமைகளினால் பலவற்றையும் கற்றுக் கொள்கின்றது. குடும்ப சமய வழிபாட்டுத்தலங்கள், அயலவர்கள் ஊடகத்துறைகள், சமவயதுக்குழுவினர், நாடகங்கள், நூல் நிலையங்கள் ஆகியன முறையில் கல்வி காரணிகளாகக் கருதப்படுகின்றன.
- முறைசார்கல்வி குறிப்பிட்ட கால கிரமமுறையில் திட்டமிடப்பட்தும் படிமுறையான தரங்களைக் கொண்டதும் ஆரம்பப் பாடசாலைத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை செல்லும் பல்வேறுபட்ட விசேட திட்டங்களுடையதுமான கைத்தொழில், தொழில்சார் துறைகளை உள்ளடக்கிய முழுநேர கல்வி முறையாகும் இதற்கு நீண்ட கலைத்திட்டம் உண்டு. அங்கு குறிப்பிட்ட சட்டதிட்டங்கள் உண்டு பாடசாலையில் கிரமமான தலைமுறையொன்றும் காணப்படுகின்றது. ஆண்டு 1-13 வரை மேல்மட்டத்தில் பரீட்சைகளுக்காக தரமுறையொன்று செயற்படுத்தப்படுகின்றது. பாடசாலை அனுமதித்தல், தரஉயரச்சி வழங்குதல், நீக்குதல் போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பு முறையொன்று உண்டு. முறைசார் கல்வியின் விசேட பண்புகளும் அதன் நன்மைகளும், தீமைகளும் : 1. சாஸ்தீரக் கோட்பாடு அறிவினை வழங்குவதற்கும் முழுச்சமூதாயத்திற்கும் பொருத்தமான நுட்பவியலாளர்களையும் கற்றவர்களையும் உருவாக்குவதற்கு பாடசாலை அடிப்படையாக அமைகின்றது. - முறைசார்கல்வி: நூற்கல்விக்கு முதலிடமளிக்கும் நகர கலாசாரத்திற்கு பயிற்சியளிக்கும் ஒரு சிலருக்கும் மேல்மட்டதிற்கு செல்வதற்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையாகும்.  முறைசாரக்கல்வி : குறிப்பிட்ட ஒரு குழுவினருக்காக இனங்காணப்பட்டகற்றல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முறைசார் கல்விக்குப் புறம்பாகச் செயற்படும் ஒரு ஒழுங்கமைப்பட்ட கல்விச் செயல்முறை முறைசாரக்கல்வியைச் சாரந்தது. (பிளிப்ஸ் கம்பஸ்)

இதன் இலட்சனங்கள் - 1. பாடசாலை அமைப்பிற்கு வெளியே செயற்படுத்தப்படுகின்றது. 2. பாடசாலை அமைப்பின் அனுமதி பெறுவதற்கு முன்னுள்ளவர்களும், பாடசாலை அமைப்பிலிருந்து வெளியேறிவர்களும் முறைசாரக்கல்வி பெறமுடியும்.  3. தெரிவு குழுவினருக்கு கல்வி வழங்கப்படும், 4. குறிப்பிட்ட ஒழுங்கமைப்புடனான பண்புகளுடன் செயற்படுகின்றது. 5. சமூதாயத்தின் முக்கிய பிரச்சினைகளை தீர்;த்துக் கொள்வதற்கு மக்கள் திறன்களை பெற்றுக் கொடுப்பதற்கும் பொருத்தமான மாற்றுவழியாக முறைசார் கல்வி காணப்படுகின்றது. 6. குழந்தைப் பராமரிப்பு நிலையங்களிலும் (முன்பாடசாலை கல்வி நிலையமும்) முறைசாராகல்விமுறையின் விசேட பண்புகள் : 1. முறைசாரக்கல்வி முறையில் மாணவர்களே முக்கியத்துவம் பெறுகின்றனர். கற்றுக் கொள்வது என்ன? எப்போது? எவ்வாறு? எந்தளவில்? யாரிடமிருந்து? எங்கே? ஆகிய சகலவற்றையும் மாணவர்களே தீர்மானிப்பர். இம்முறையில் விடயங்களை விளக்குவதற்கு ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்கள் முறைசார் பாடசாலைகள் ஆசிரியர்கள் போன்று செயற்படமாட்டார்கள், அவர்கள் வழிகாட்டுபவர்களாக இருப்பர். உதவுபவர்களாகவும், அறிவுறுத்தல்கள் வழங்குபவர்களாகவும் இருப்பர். முறைசார் கல்வி பெரும்பாலும் நுட்பத்தை மையமாகக் கொண்டது. தனியாக அறிவை மட்டும் வழங்கும் சார்பற்றது. கோட்பாட்டு அறிவையையும் பெற்றுக் கொள்ளக்கூடியது. - முறைசார Niலைத்திட்டங்கள் கல்வி பெறுபவர்களின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன. அவை குறுகிய காலத்திற்குரியனவாக இருப்பதாலும், பேறுகளை துரிதமாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதாலும் பங்குபற்றல்கள் விருப்பமுடன் உட்சாகத்துடன் பாடநெறிக்கு சமூகமளிப்பார்கள். - நிகழ்ச்சியான ஒரு இயல்பு காணப்படுகின்றது. பாடநெறிகள், தொழில் முக்கியத்துவம் வாய்ந்தாக இருப்பதாலும் பயன்படுத்தக் கூடிய திறன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாலும் துரிதமாக ஒரு தொழிலைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதாலும் வயது எல்லைக்கு ஏற்ப வகுப்புகள் காணப்படுகின்றன.
தொலைக்கல்வி: தொலைக்கல்வி ஏற்பாடுகளின் படி ஆசிரியர்களும், மாணவர்களும் பெறுமளவிற்கு விலகியே நிற்கின்றனர் ஒழுங்குற தயாரிக்கப்பட்ட பாடங்கள் மாணவர்களுடைய இருப்பிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற தொடர்பு சாதனங்களின் மூலம் பாடங்களுக்கு விளக்கமளிக்கப்படுகின்றது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களும் ஆசிரியர்களும் சந்தித்து மாணவர்கள் மூலம் விளக்கம் பெறும் ஏற்பாடுகளும் உண்டு. தொடர்பு சாதனங்களை அடிப்படையாகக் கொண்ட தொலைக்கல்வி வழிமுறைகளை பயன்படுத்தி தனியாட்கள் வீட்டில் இருந்து கொண்டு தொழில் செய்து கொண்டும் கல்வி பயில முடியும். தொலைக்கல்வி ஏற்பாடுகள் இரு அம்சங்களைக் கொண்டிருந்தன.
1. தொலைக்கல்வி அணுகுமுறைகள்- கற்பித்தலை மக்கள் மத்தியில் நன்கு விரிவுபடுத்த உதவின. 2. தொலைக்கல்வி முறைகள் கற்பித்தலை விடுத்து கற்றலை வலியுறுத்தின. தொலைக்;கல்வி முறைகள் இன்று பாடசாலைக்கல்வி, உயர்கல்வி, விவசாயம், சுகாதாரம் தொழில்கல்வி அரசியல் போன்ற முறைசாரக்கல்வி நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் செயல்முறைக்கல்வி, நூற்கல்வி, கோட்பாடுகள், தொலைக்கல்வி மூலம் சிறப்பாக கற்பிக்கப்படுகின்றன. - பாடசாலைக்கும், கல்லூரிகளுக்கும் செல்லமுடியாத மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. பாடசாலைகளில் கற்பித்தல் தராதரங்கள் மேம்படுத்த உதவுகின்றன. - ஆசிரியர்கள் போன்ற தொழில் வல்லுனர்களுக்கு சேவைக்காலப் பயிற்சியையும் சேவைக்கு முன்னைய பயிற்சியையும் வழங்கப்படுகின்றனர். அரசாங்கம் நாடெங்கும் பரவிக்காணப்படும் தமது ஊழியர்களை பயிற்ற முடிகின்றது. - இன்று பலரும் பகுதிநேர கல்வியை விரும்புகின்றனர். குடும்பப் பொறுப்புள்ள வளர்ந்தோர் உழைத்துக் கொண்டே தமது கல்வித் தகுதிகளை மேம்படுத்த விரும்புகின்றனர். ஒரு நிறுவனத்தில் முழுநேர மாணவர்களாக சேர்ந்து நாள்தோறும் பயணம் செய்து படிப்பதை விட வீட்டில் இருந்து கொண்டே பயில பலர் விரும்புகின்றனர். இது செலவை ஏற்படுத்தவதுதில்லை. - ஆசிரியர் மற்றும் வகுப்பறை, தளபாட பற்றாக்குறைகளை எதிர்நோக்க தொலைக்கல்வி, ஒரு சிறந்த வழிமுறையாகும். ஒரு ஆசிரியரின் நன்கு திட்டமிடப்பட்ட விரிவுரை அச்சடிக்கப்பட்டு எண்ணற்றோரால் பயன்படுத்த முடியும்.
சமூகமயமாக்கல் என்றால் என்ன? ஒரு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொது இலக்குகளையும், விழுமியங்களையும் கொண்ட அமைப்புக்கு உரிமை பாராட்டும் ஒரு மக்கள் கூட்டம். இக்கூட்டம் சரியென ஏற்றுக் கொண்டுள்ள இலக்குகளையும் ஒழுக்கவியல் தொகுதிகளையும் தமது இளைய தலைமுறையினருக்கு உரித்தாகுதல் சமூகமயமாக்கலாகும்.
சமூகமயமாக்கல் கருவிகள்:  குடும்பம், சமவயதுக்குழு, பாடசாலை, நிறுவனம், இளைஞர்கழகங்கள், தனியார் வகுப்புக்கள், அரசியல் பொருளாதார பண்பாட்டியல்; குழுக்கள், குடியியல் நிறுவனங்கள், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி செய்தித்தாள் முதலான பொதுசன தொடர்பு சாதனங்காகும்.
சமூதாய மயமாக்கலுக்குரிய நுற்பமுறைகள் : 1. பரிசு,தண்டனை, 2. நுற்பமுறைப் போதனை அல்லது கற்பித்தலாகும், 3. முன்மாதிரியும் பின்பற்றலுமாகும். சமூகமயமாக்களுக்கு உட்படும் தனியாள் அச்சமூகச் சூழலில் சந்தர்ப்பங்களில் அடிபணிதல், வரவேற்றல், அனுமதித்தல், சார்தல், பின்பற்றல், கடைப்பிடித்தல், ஒத்திசைவு பெறல், இணங்குதல், முதலாம் முறைகள் சமூகமயமாக்கலுக்கு உட்படுகின்றான்.
குடும்பத்தின் கடமைகளும் பொறுப்புக்களும் : 1.சமூகத்திலிருந்து நீங்கிச் செல்வோருக்கு பதிலாக புதிய அங்கத்வர்களை உருவாக்குதல். 2. குடும்ப உறுப்பினர்களுக்கு  சேவையையும் பொருளும் வழங்கல். 3. உளஃவெளிப்பிரச்சினையிலிருந்து குடும்பத்தின் அமைதியைப் பாதுகாத்துக் கொள்ளல், 4. சமூகத்தின் முன்னேற்றமான உறுப்பினராய் அமைவதற்குத் தேவையான உறுப்பினர்களை பழக்குதலும். - தனது பிள்ளைகளது கல்வி, பொருளியல், பாதுகாப்பு, அரசியல், சமயக்காரியங்கள் பலவும் மனவெழுச்சிக்கட்டும், குடும்பத்தின் கடமைப் பொறுப்புக்களும் அடங்கும். தமது பிள்ளைக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தலும், சமூக அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தலும், சுயாதீனம்ஃஆளுமை விருத்திக்கு வழிவகுத்தலும், நெருங்கிய உறவுகளை வளர்;த்துக் கொள்வதும் குடும்பத்தின் கடமையாகும். 
குடும்பத்தின் கடமைகள், பொறுப்புக்கள், எல்லைகள்,கருவுக்குரிய குடும்பமுறை: 1. சமூகவகுப்பு 2. முன்பாடசாலை 3. பிள்ளை பாராமரிப்பு நிலையங்கள், 4. தாய் தொழிலில் ஈடுபடுதல் 5. வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுதல் 6. பெற்றோரின் மனமாற்றம், விவாகரத்து பிள்ளைகளை பேணிப்பாதுகாக்காது தவறான வழியில் இட்டுச்செல்லல் போன்ற காரணிகளும் குடும்பத்தின் சமூகமயமாக்கலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 



காலம்    கல்விமுறை    சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம்
1.பௌத்த கல்விக்கு முற்பட்ட காலம்     புரபணக் கதைகளையும் மக்களின் நம்பிக்கை    சுயதேவைகளபை; பூர்த்தி செய்யக்கூடிய மானிய முறை சமூதாய அமைப்பைப் பேணி சுயதேச பாரம்பரியத்தை கட்டிக்கார்த்து வாழ்வதற்கு அவர்களது கல்வி முறை உதவியது .
பௌத்த மதத்தின் வருகiயின் பின் அன்னியர் வருகையின் முன்    முறைசார் முறைசார கல்வி அமைப்புக்கள் காணப்பட்டன. சமயசார் கல்வியே பிரதானம்    சமயக்கல்வியானது ஈருலக வாழ்க்கையிலும் பெற்றுபெறுவதறகான ஒரு தனியாளை உருவாக்கின்ற எளிமையான வாழ்க்கைக் போக்கை பேணுகின்றாதாயும், தன்னிறைவு பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான அறிவு, திறன, மனப்பாங்கை கையளிக்கும் பொறுப்பை முறைசாரக்கல்வியும் ஆற்றி வந்ததது.
ஏகாதிபத்திய ஆட்சி 1505-1948 வரை    ஏகாதிபத்திய அரசியல், பொருளாதார, கலாசார மையமாகக் கொண்ட மேலத்தேய கல்வி முறை    கல்வியின் ஊடாக பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்ட அவர்களது பொருளாகதார ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக வைட்கலர் ஜோப் உருவாக்கினார்கள், சுதேசிகளை அவற்றிக்கு பயிற்றுவித்தார்கள்
4. சுதந்திரத்திற்குப் பின் 1731-1972    கண்ணங்கர முயற்சியால் இலவசக்கல்வி அறிமுகம் (சமகல்விவாய்ப்புக்கு) அத்துடன் ஆரம்ப கட்டாய கல்வி முறை, இரட்டைக்கல்வி முறை காணப்படல்.
சுதேச பாடசாலையும் ஆங்கில மொழிப்பாடசாலை அத்துடன் சுதேச பொருளாதாரத்திற்கு ஏற்ற ஹேந்தஸ் கல்வி முறை     சமூக வகுப்பை எளிமையாக பேணிவராத இலங்கை சமூதாயத்தில் அன்னிய கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் மேலேத்தேய அறிவு என்பவற்றை ஏற்றுக் கொண்ட சமூதாய வகுப்பினரை உருவாக்கியதுடன் தாள்வகுப்பிற்கும் உயர்வகுப்பிற்மிடையிலான தெளிவான வித்தியாசத்தை பிரநிதித்துப்படுத்திக் கொண்டு சமூதாயப் பெயர்ச்சி இடம்பெற்றது. தாழ்மட்ட வகுப்பினருக்கும் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் காரணமாக ஒப்பீட்ளவில் அனைவருக்கும் கிராமம் தோறும் கல்வி வாய்ப்பு பெற்றுக் கொள்ளப்படுவதற்கான முயற்சியை சமூக  அசையளவில் சமூகம் காண்ப்பட்டது.  அத்துடன் சுதேச பொருளாதார தன்னிறைவை நோக்கி நகர்வு
1972- புதிய சீர்திருத்தம் வரை    கல்விக்கும் தொழில் வாய்ப்புக்கும் இடையிலான சமநிலையைப் பேண தொழில் முன்னிலைப்பாடங்கள் அறிமுகமானது     சமூகத்திலே கற்ற மாணவர்களுக்கு பிரவேசத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு
1977 முதல்     நவீன உலகிற்குத் தேவையான வாழ்க்கைச் தேரச்சிகனை மாணவர் மட்டத்தில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபட்டது.    இது வரைகாலமும் அறிவு, திறன்களில் மட்டும் கவனம் செலுத்திய கல்வி முறை மனப்பாண்மையையும் , ஆளிடைத் தொடர்பு மாற்றங்களையும் சமூகத்திடம் விதைத்து தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார இருப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் சமூகத்தை மாற்றி அமைத்துள்ளது.

இம்மாற்றத்தை பின்வரும் அம்சங்கள் பிரதிபலிப்பதைக்காணலாம்.
கல்வி வாய்ப்புக்களின் விரிவு உதாரணம் : திறந்த கல்வி வாய்ப்பு - ஆங்கிலக்கல்வி,  தொழில்நுட்பக்கல்வி, தொழில் கல்வி வாய்ப்புக்கள், தொலைக்கல்வி, தபால்கல்வி, நடைமுறைக்கல்வி என்பனவாகும்.

ஒப்பீட்டளவில் அனைவருக்கும் கல்வி கற்றல் மையச் சமூகம், தொழில்நுட்பச் சமூகத்திற்கான அடித்தளமிடப்பட்டுள்ளமை, சர்வதேச பாடசாலைகளின் அதிகரிப்பு, ஆங்கில மொழி, கற்றல், கற்பித்தல் ஊடகம், இணையக்கல்வி, புதிய தொழில் கல்வியும் தொழில் வாய்ப்புக்களும்.
10. 1948ன் பின்னர் இலங்கை சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இசைவாக கல்வியில் செய்யப்பட்டுள்ள பிரதான மாற்றங்கள் 4 தருக?
1948ன் முன்னர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழ் இலங்கை காணப்பட்டதால் கல்வியில் பாரியளவான மாற்றங்கள் இடம்பெறவில்லை. சுதேச மொழி மறுக்கப்பட்டு ஆங்கிலக்கல்விக்கும், அவர்களது சமயத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்ட அதே வேளை மக்கள்; அடிமைகளாகக்ப்பட்டு, சமூகத் தொடர்புகள் குறைக்கப்பட்டு இருந்தது. 1948ன் பின்னர் இலங்கைச் சமூகத்தில் சுதேச மொழியும் விரும்பிய சமயக்கல்வியும், சுதந்திர முறைமையும் காணப்பட்டதனால் இது மக்களுடைய சிந்தனையில் வாழ்க்கை அமைப்பில் பல்வேறு பிரதான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அவை : 01. சுதேச கல்வி, 02. கட்டாயக்கல்வி 03. இலவசக்கல்வி 04. நிர்வாகக்கட்டமைப்பு 05. கலைத்திட்ட மாற்றம்.
சுதேசக்கல்வி : 1943ல் (கண்ணங்கர யுகம்) சுயமொழி மூலமான கல்வி என்ற எண்ணக்கரு முன்வைக்கப்பட்டு ஆரம்ப வகுப்புகளில் போதிக்கப்பட்டது. 1948ன் பின்னர் உயர்தரம் வரையும் சுயமொழி மூலமான கல்வி வழங்கப்பட்டது. இதனால் சமூகம் திறன்படக்கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 
இலவசக்கல்வி : கண்ணகங்கரவினால் அனைவருக்கும் கல்வி என்ற அமைப்பு  உருவாக்கப்பட்டது. இவரின் நோக்கம் யாதெனில் இலங்கையில் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்வாங்கும் வகையில் இலவசமாக கல்வி வழங்கப்பட்டது. இதனால் பல மாற்றங்கள் இடம்பெற்றது. பல்கலைக்கழகம் வரையும் இலவசமாகக் கல்வி கிடைப்பதால் சமூகத்திற்குத் தேவையான கல்வி அறிஞர்கள் உருவாகினர்.
கட்டாயக்கல்வி: இலவசக்கல்வி  அறிமுகப்படுத்தப்பட்டாலும் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் எண்ணிக்கை அதிகரி;த்தன் காரணமாக 1972ல் கல்வி சீர்திருத்தத்தின் கீழ் கட்டாயக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6-14 வயதுவரை அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்ற சட்டம் வந்தது. இதனால் இடைவிலகுவோரின் எண்ணிக்கை குறைந்து கட்டாயக்கல்வியினைப் பெறுவதன் ஊடாக சமூகத்;தில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.
நிருவாகக்கட்டமைப்பு : கல்வி அமைச்சு 1948க்கு முன்னர் மத்திய அரசின் கீழ் இயங்கியது. பின்பு இது கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம், வலயக்கல்வி அலுவலகம், கோட்டக்கல்வி அலுவலகம், அதிபர், இவ்வாறாக நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டதால் குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைச் சமூகத்தின் தேவைகள் மேலிடத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு கல்வித் தேவைகள் நிறைவேற்றப்பட்டது.
கலைத்திட்ட மாற்றம் : சுதந்திரத்தி;ற்கு முன்னர் ஆங்கில மொழியில் கல்வி கற்பதிலிருந்த சிரமத்தைத் தவிர்ப்பதற்காக கலைத்திட்ட மாற்றத்தின் ஊடாக சுதந்திரத்தின் பின் சுதேச மொழியில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது. கலைதிட்ட மாற்றங்களாக 1.பொதுக்கல்வித்திட்டம் அறிமுகம் (தரம் 01-11), 02. பாடமாற்றங்கள் 03. கற்பித்தல் துறையில் மாற்றங்களஃ; விளையாட்டு செயற்பாடு 04. விஞ்ஞானம், ஆங்கிலக்கல்வியில் முன்னுரிமை 05. பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 06. ஆசிரியர் சமமின்மை நீக்கப்படல் 07. தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படல் 08. சர்வதேச பாடசாலைக்கு மறைமுக அனுமதி 09. பிள்ளை நேயப்பாடசாலை உருவாக்கம் 10. இணைப்பாடவிதான செயற்பாடுகள்-தொகுதிப்பாடங்கள் 11. தர உள்ளீட்டுப் பொருட்கள் வழங்கல் 12. மாணவர் உரிமை பேணப்படல், தண்டனை குறைக்கப்படல் 13. பரீட்சை அமைப்பு முறை 14. ஆசிரியர், மாணவர், அதிகாரிகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் 15. சுகாதாரக்கல்வியிலும் தொழில் முறைக்கல்வியிலும் பலமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.   

சுகாதாரக்கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் : 1948க்கு முன்னர் சுகாதார சீர்கேடுகள் குறிப்பாக மலேரியா நோயால் அதிகமக்கள் இறந்தமையால் கல்வியில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டது. இதனை நிவர்த்திக்க 1948ன் பின்னர் சுகாதார போசாக்கு நலன் திட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதில் 1. சுகாதாரப்பாடம் அறிமுகம் 2. ஒவ்வொரு பாடசாலையிலும் சுகாதார கழகங்கள் உருவாக்கப்பட்டன. 3. இலவச உணவு அறிமுகம் செய்யப்பட்டது. 4. விசேட தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது-போலியோ. 5. வெளிநாட்டு நிறுவனங்களின் சுகாதார உதவிகள் 6. சுகாதார தினங்கள் ஏற்படுத்தப்பட்டது- டெங்கு ஒழிப்புத் தினம், கைகழுவும் தினம்.
தொழில் முன்னிலைக்கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் : சுதந்திரத்திற்கு முன் கல்வி அமைப்பில் தொழிலுக்கும் கல்விக்கும் இடையில் தொடர்பு காணப்படாமையால் சுதந்திரத்திற்குப் பின் கல்வி அமைப்பில் தொழில் நுட்பக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. 1. தொழில் முன்னிலைப்பாடம் அறிமுகம் 2. தொழில் நுட்பக்கல்லூரி அறிமுகம் 3. ஐவு டுயடி; உருவாக்கம் 4. தொழில்சார் பயிற்சி 5. பாடசாலைகளில் இணைத்தள வசதி.
சமூகத்தேவைகளை நிறைவேற்ற பாடசாலை தவறியுள்ளது? அவ்வாறெனின் சமூகம் பாடசாலை மூலம் நிறைவேற்ற எதிர்பார்க்கும் அடிப்படைப்பணிகள் எவை? 01. வேலை உலகிற்கு பொருத்தமான பிரஜைகளை உருவாக்குதல் 02. போட்டித்தன்மை மிகக் நவீன உலகிற்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலான சிறந்த சமூகத்தை உருவாக்குதல் 03. சமூக வகுப்புக்களை இல்லாமல் செய்தல் 4. சமூகமயமாக்கல் 5. சமூகத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியவர்களை உருவாக்குதல்
12. பாடசாலை சமூக எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத்தவறியுள்ளது? என்று கூறுவதற்கு முன்வைக்கப்படும் காரணங்கள்? 1.வேலை உலகிற்கு பொருத்தமான கலைத்திட்டம் பின்பற்றப்படாமை 2. இன, மொழி அடைப்படையிலான பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளமையினால் சமூக இணக்கப்பாட்டு நிலைமையை உருவாக்க முடியாதுள்ளது. 3. பாடசாலைகளுக்கிடையிலான பௌதீக, மனிதவளப்பங்கீட்டில் சமமின்மை காணப்படுகின்றமை. 4. அடைவு மட்டத்தை மாத்திரம் எதிர்பார்க்கின்ற கல்வி அமைப்பு முறை காணப்படுகின்றது.
13. பாடசாலை மீதான சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்த பாடசாலையில் செய்ய வேண்டிய மாற்றங்களை குறிப்பிடுக? 1. பாடசாலைக்கும், சமூதாயத்திற்கும் இடையில் நெருக்கமான உறவைப் பேணல்-சமூதாயத்தின் வளங்கள், உதவி, ஒத்தாசைகளை பாடசாலைக்காக பெற்றுக் கொள்வதுடன் சமூதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சமூதாயத்திற்கும் இடையிலான தொடர்பினைப் பேணவும் வேண்டும். 2. சமூதாயத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக பாடசாலைகளில் மாறாக்கலைத்திட்டத்தை அமைத்தல். 3. பாடசாலை தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தி;ன் இயல்புகளையும், தேவைகளையும் கருத்திற்கொண்டு இயங்குவதன் ஊடாக சமூதாயத்தின் நன்னம்பிக்கையை உறுதி செய்து கொள்ளல். 4 பாடசாலை வளங்களை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தல். - விளையாட்டு மைதானம், பாடசாலை மைதானம். 5. வளர்ந்தோர் கல்வியை நடைமுறைப்படுத்தல் 6. சமூகத்திற்காக பாடசாலை ஆய்வு கூடம், நூலகம் போன்றன விடப்படல் வேண்டும். 7. பாடசாலையின் குறிக்கோள், இலக்குப் பற்றி சமூதாயத்திற்கு விளக்கமளிக்கப்படல் வேண்டும்.
14. பாடசாலை,சமூகத்திலிருந்து விடுபட்டு தனித்திருக்க முடியாது? எனக்குறிப்பிடுவதற்கு ஆதாரமான 4 காரணிகளைக் குறிப்பிடுக? 1. கலாசாரத்தைப் பேணிக்காக்கும் மத்திய நிலையமாக பாடசாலை அமைவதால் இது ஒரு சமூகத்தின் அங்கமாக தொழிற்படுகின்றது. 2. சமூக உறுப்பினர்கள் பாடசாலை அங்கத்தினராக காணப்படுவதால் பாடசாலை சமூக அங்கமாகக் காணப்படுகின்றது. 3. பாடசாலை சமூக சூழலில் காணப்படுவதாலும், சமூகத்துடன் இணைந்து காணப்படுவதாலும் இது சமூகத்தின் அங்கமாக இருக்கிறது. உ-ம் பாடசாலை அபிவிருத்திக்குழு 4. சமூகத்தின் தேவையை நிறைவு செய்யக்கூய ஒரு அமைப்பாக பாடசாலை காணப்படுவதால் இது ஒரு சமூகத்தின் அங்கமாகக் காணப்படுகின்றது. 5. சமூகத்தினருக்கு உள்ளது போன்று பாடசாலையும் குறித்த ஒரு நோக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் பாடசாலையும் சமூகத்தின் அம்சமாகும்.
15. பாடசாலையானது ஒரு சமூகத் தொகுதியாகும். பொருத்தமானதா இல்லையா என சுருக்கமாக விளக்குக? பொது நோக்கங்களை நிறைவு செய்து கொள்வதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் அல்லது குழுக்கள் ஒன்று சேர்ந்த போது ஏற்படுகின்ற அமைப்பு சமூகமாகும். இது பற்றி மியுரியம் கிளாஷ்டிக் என்பவர் குறித்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கமைப்பைக் கொண்ட மக்கள் தொகுதியினரை சமூதாயம் என்பார். இச்சமூகத்தில் இரண்டு வகையான பண்புகளை குறிப்பிடுகிறார். அ.வரையறுக்க நிர்வாக அலகு, ஆ. மக்களுக்கிடையே காணப்படும் பிணைப்பு, ஆகவே, 1-பாடசாலையில் ஒன்றுக்கு மேற்பட்ட சமூகத்தொகுதிகள் காணப்படுவதாலும். 2- சமூகத்திற்கு இருக்கின்ற பொது நோக்கம் போன்று பாடசாலைக்கு குறித்த நோக்கம் காணப்படுதலாலும், 3-பாடசாலைக்கும் ஒழுங்கமைப்பட்ட நிர்வாக கட்டமைப்பு காணப்பபடுவதாலும், 4-சமூகத்தில் மக்களிடையே காணப்படும் பிணைப்ப போல் பாடசாலை சமூகத்திலும் ஒரு பிணைப்பு காணப்படுவதாலும் இது ஒரு சமூகத்தொகுதியாக இனங்காட்ட முடிகின்றது. இருப்பினும் பாடசாலையானது பரந்தசமூதாயத்தினுள் இயங்குகின்றது எனவும், அதனை சமூதாயத்தின் உபதொகுதி எனவும் குறிப்பிடலாம்.

16.வெற்றிகாரமான பாடசாலையில் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பான உத்தமமட்டத்தில் காணப்படுகிறது விளக்குக?  1. சமூகத்தின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பாடசாலை நிறைவு செய்கிறது. 2. சமூகம் பாடசாலைக்கு மாணவர்களை வழங்குகிறது. 3.பாடசாலைக்கு, வளங்கலை, ஆலோசனைகளை வழங்குதல். 4. பாடசாலையிலிருந்து வெளியேறும் மாணவர்களை சமூதாயம் ஏற்றுக் கொள்கிறது. 5.பெற்றோரிமிருந்து கல்வியும், இணைப்புவிதானம் தொடர்பான அறிவும், ஆசிரியர்களிடம் சமூகத்தேவை தொடர்பான அறிவும் காணப்படுவதால். இவற்றிக்கிடையிலான தொடர்பு உத்தம முறையில் காணப்படுகின்றது. உதாரணம் : 1. பெற்றோர் ஆசிரியர் ஒன்று கூடல், நூலக வசதியை சமூகம் பயன்படுத்துதல். 





கல்வி வரலாறு :
பௌத்த சமயத்திற்கு முற்பட்ட கல்வி அமைப்பு :                                 
- இந்திய செல்வாக்குப் பெற்ற மானிய முறையிலான சமுதாய அமைப்பு. இங்கு சாதி அடிப்படையில் அனைவரும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டனர்   : சிற்பம் செதுக்குதல், சித்திரம் வரைதல், மட்பாண்டத்தொழில், முடிவெட்டும் தொழில் போன்றன.
- புத்த சமயத்தின் வருகையுடன் இம்முறை நலிவுற்ற குரவர்கள், பொதுமக்கள் என்ற ஒரு பிரிவும் ஆண், பெண் அடிப்படையில் பிக்கு, பிக்குனி என்ற அமைப்பும் காணப்பட்டது.
பௌத்த கல்வியின் நோக்கம்: பிராமணக்கல்வி, சம்பிரதாய வணக்கஸ்தலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. பௌத்த கல்வியில் சம்பிரதாயம், பன்சலையைச் சுற்றி உருவாக்கப்பட்டது. பிராமணக்கல்வியின் பாதுகாவலர்கள் -பிராமணர்கள் , பௌத்த கல்வியின் பாதுகாவலர்கள் பிக்குகள். ஆரம்ப காலத்தில் பிரிவெனாக்கள் பிக்குகளுக்கு மட்டும் கல்வி வழங்கின. காலப்போக்கில் பொதுமக்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. பொதுமக்களை பௌத்த கலாச்சாரத்திற்கு ஏற்ப வழிநடாத்துவது இக்கல்வியின் நோக்கம். அரசர்கள், தலைவர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், முதியோர், தொழிலாளருக்கு பௌத்த கலாச்சாரத்திற்கு ஏற்ப வழிநடாத்தலும் இதன் நோக்கம் இதனால் கிராமத்திற்கு ஒரு பன்சலை அவசியமானது. பிராமணர் வசமிருந்த கல்வியின் ஏகபோக உரிமை பிக்குகளின் கைக்கு இடமாறியது.
பண்டைக்கால கல்வி கட்டமைப்பு: சிற்றூர் கல்வி (கிராமப்பாடசாலை அல்லது குருகெத) இங்கு வாசிப்பு, எழுத்து என்றும் பாடங்கள் சார்பான அடிப்படைப் போதனை மட்டும். குருவின் விசேட பாடசாலை மேலத்தேய நாட்டுப்பாடசாலைகளுடன் இலங்iயில் அறிமுகமாகும் வரை பாடசாலைகள் இயங்கின.  - வாசிப்பு : வடங்கவி, பௌத்த நாமப்பொத்த, மகுல்லக்குண, எழுத்து - மணப்பரவிய தட்டுக்கல், கற்பித்தல் முறை : வாய்மொழி மரபுமுறை, பொருள் மனனம் அல்லது உருப்போடுதல்.
தலைமை ஆதிக்கம் - பள்ளி ஆசிரியர்
- ஆரம்ப நிலைக்கல்வியின் பின்னர் கல்வி பயிலாதவர் தமது சாதித் தொழிலை பெற்றோரிலிருந்து கற்றனர். கோவில் பள்ளி : இடைநிலைக்கல்வி வழங்கப்பட்டது. இடைநிலைக்கல்வி பெறவிரும்புவோர் இதில் சேரலாம். அல்லது துறவியர் மட்டத்தில் சேர்ந்தனர். இதில் கற்றோர் துறவியாயினர் அல்லது மருத்துவம் சோதிடம் போன்ற உயர்விழிப்புத் தொழில் பெற்றனர்.
கலைத்திட்டம் : ஏட்டுக் கல்விக்குரிய பாடம் தொழில்கல்விக்குரிய பாடங்கள், சமய, பௌத்த போதனை முக்கியமானது. மேலும் சோதிடம், மருத்துவம், உயர்தொழில்பாடம், ஓவியம், சிற்பம், நுன்கலைப்பாடம், பாளி, சமஸ்கிரதம், மொழித்துறைப்பாடம் ஆசிரியர்கள் பௌத்ததுறவிகள். பள்ளிப்பராமரிப்பு - மன்னர்கள் வழங்கிய நிதி போன்ற நன்கொடைகள்.
பிரிவெனா - உயர்நிலைக்கல்வி : துறவியர், துறவியர் அல்லாதோர் கல்வி கற்றனர். ஆசிரியர்கள் பௌத்த துறவிகள் துறவி அல்லாத கல்விமான்களும் இணைந்தனர்.
கலைத்திட்டம் : ஆரம்பத்தில் சமயம் மட்டும் பின்னர், சமயத்துறை அறிவு, வேதங்கள் காணப்பட்டன. ஒப்பியம் சமயம், மொழி(பாளி, சமஸ்கிருதம்) வரலாறு, இலக்கணம், தர்க்கம் இவை பண்பாட்டுத் துறை அறிவுப்பாடல்கள், 02. உயர் சிறப்புத் தொழிற்பாடங்கள் : சட்டம், வானவியல், மருத்துவம், கட்டிடக்கலை, ஓவியம். - கற்பித்தல் முறை : கலந்துரையாடல், சொல்லாடல், ஓதல், உச்சாடல், விவாதம், சொற்போர். இங்கு வழங்கப்பட்ட கல்வி உயர்தரமானது ஆசிரியர் மாணவர் உறவு சிறந்தது. - பிரிவெனாக்களின் நிர்வாகத்திற்கு முக்கிய காரணி மன்னன், மக்கள் ஆதரவு,
03. ஆரம்பகால பிரிவினா - அனுராதபுரம் : மகாவிகாரை பெருமைமிக்கது. பிறகல்வி நிலையங்கள் அபயகிரி ஜெயதவனராமய அமைதியான காலங்களில் செழித்து விளங்கின. தென்னிந்தியப்படையெடுப்புக்களால் சீர்குலைந்தது.
- பண்டையக் கல்வியின் கற்பித்தல் முறைகள்: பிராமணக்கல்வி - கல்வி வழங்கப்படும் 3 குலத்தினருக்கும் வௌ;வேறான பாடங்கள், பௌத்தகல்வி - பிக்குகளுக்கு வேறு, பொதுமக்களுக்கு வேறு, பொதுமக்களுக்கான சில பாடங்கள் பிக்குகள் கற்கத்தடை. பாடவிதானம்: 18 சாஸ்திரங்கள், 64 கலைப்பாடங்கள்.
பண்டைய கல்வி கற்பித்தல் முறைகள் : பிராமனக்கல்வி, ஓம் பாடலை ஆசிரியர் கூறி ஆரம்பிக்க, மாணவர் பின்கூறி கற்பிக்கும் முறை ஆரம்பம். வீட்டிலிருந்து கற்றல் நிகழ்கிறது. வீடுகளுக்குச் சென்று கற்பித்ததால் பாடத்தை மையமாகக்; கொண்டகுழுவிற்குள் கற்பித்த முறை பிரதானமானது.
பௌத்தகல்வி: வினாவிடை முறை - விரிவுரை, கலந்துரையாடல், பிரச்சினை தீர்;த்தல், தர்க்கித்தல், விவாதங்கள், நடித்தல், சித்திரம் வரைதல்.
ஆசிரியர்கள் : பௌத்த சமயத்திற்கு முன் பிராமணர்கள். பௌத்த கல்வியின் ஆரம்பத்தில் - பிக்குகள். பிரிவெனாக்களின் வளர்ச்சியின் பின் - பொதுமக்களில் பண்டிதர்கள்,
போத்துக்கேயர் கல்வி நோக்கம் : - சுதேசிகளை கத்தோலிக்க மதமாற்றம், சமயத்தைக் கூடுதலாக பரப்பி வியாபாரத்தை அதிகரிக்கச் செய்தல். சமயத்தின் ஊடாக மக்களின் பணியைப் பெறல். மதமாறியோருக்கு வாசிப்பு, எழுத்து எண்கணிதம் கற்றுக் கொடுத்தல். பொறுப்பும் நிர்வாகமும் : கல்வி வழங்கும் பொறுப்பு கத்தோலிக்க மதகுருக்கள், தர்மபாலன் போன்ற மன்னர்கள் நிலங்களை வழங்கி கல்விக்கு உதவினர். கத்தோலிக்க பொது மக்களும் உதவினர். பிரான்ஸ்கன் - 1543, ஜெஸ_யிட்ஸ் - 1602, டொமினிக்கன் - 1606, ஒஸ்டினியன்  - 1606 குழுக்களிடம் கல்வி வழங்கும் பொறுப்பு கையளிக்கப்பட்டது.
கல்விநிறுவனங்கள், பரிஷ்ஃ கோவில் பற்றுப்பாடசாலைகள்: 1543ல் பிரான்சிஸ்கன் குழுவினர் நிறுவினர். கோட்டை இராச்சியம் - 56, யாழ்ப்பாணம் -25,
சுதேச மொழி மட்டும் கற்பிக்கப்பட்டது ஆரம்பப் பாடசாலை பரீஷ் -பாடசாலை சுதேச மொழி மட்டும் கற்பிக்கப்பட்டதால் போத்துக்கீச, அராபிய, கிரேக்க, லத்தின் ஆகிய மொழிகள், கற்பிக்கப்பட்டது. சிலாபம்-1. மாதம்பை-1, உருவாக்கப்பட்டது. பல்வேறு மொழிகளில் சமயப்பிரச்சாரம் மேற்கொள்ளும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. தர்க்கசாஸ்திரம் , பேச்சுவண்மை கற்பிக்கப்பட்டன. கல்லாரிகள் இது பிரான்ஸிஸ்கன் குழுவினரின் உயர் கல்விநிறுவனங்களும். பரீஷ் ஆரம்பப்பாடசாலைகளை விட தரம் கூடியது. கொழும்பு, யாழ்ப்பாணம், கோரளை, போன்றவற்றில் ஜெசுயிட்ஸ் கல்லாரிகள் தோற்றுவிக்கப்பட்டன். இதன் தலைவர்களால் உருவான உயர்கல்வி நிறுவனம் புறக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது. சமய குருமாரை பயிற்றுவித்தல் நோக்கமாகும், பரிஷ் ஆரம்ப பாடசாலைகளில் கற்றவர்களை விட பிரான்ஸிஸ்கன், ஜெசுயிட்ஸ் கல்லூரிகளில் கற்றவர்களின் தரம் கூடியது. போத்துக்கேயர் காலத்தில் இடைநிலைப்பாடசாலைகள் இல்லாமை ஒரு குறையாகும். அனாதைப்பாடசாலை அனாதைகளுக்கு கல்வி வழங்க நிறுவப்பட்டது.   


இம்மாற்றத்தை பின்வரும் அம்சங்கள் பிரதிபலிப்பதைக்காணலாம்.
கல்வி வாய்ப்புக்களின் விரிவு உதாரணம் : திறந்த கல்வி வாய்ப்பு - ஆங்கிலக்கல்வி,  தொழில்நுட்பக்கல்வி, தொழில் கல்வி வாய்ப்புக்கள், தொலைக்கல்வி, தபால்கல்வி, நடைமுறைக்கல்வி என்பனவாகும்.

ஒப்பீட்டளவில் அனைவருக்கும் கல்வி கற்றல் மையச் சமூகம், தொழில்நுட்பச் சமூகத்திற்கான அடித்தளமிடப்பட்டுள்ளமை, சர்வதேச பாடசாலைகளின் அதிகரிப்பு, ஆங்கில மொழி, கற்றல், கற்பித்தல் ஊடகம், இணையக்கல்வி, புதிய தொழில் கல்வியும் தொழில் வாய்ப்புக்களும்.
10. 1948ன் பின்னர் இலங்கை சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இசைவாக கல்வியில் செய்யப்பட்டுள்ள பிரதான மாற்றங்கள் 4 தருக?
1948ன் முன்னர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழ் இலங்கை காணப்பட்டதால் கல்வியில் பாரியளவான மாற்றங்கள் இடம்பெறவில்லை. சுதேச மொழி மறுக்கப்பட்டு ஆங்கிலக்கல்விக்கும், அவர்களது சமயத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்ட அதே வேளை மக்கள்; அடிமைகளாகக்ப்பட்டு, சமூகத் தொடர்புகள் குறைக்கப்பட்டு இருந்தது. 1948ன் பின்னர் இலங்கைச் சமூகத்தில் சுதேச மொழியும் விரும்பிய சமயக்கல்வியும், சுதந்திர முறைமையும் காணப்பட்டதனால் இது மக்களுடைய சிந்தனையில் வாழ்க்கை அமைப்பில் பல்வேறு பிரதான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அவை : 01. சுதேச கல்வி, 02. கட்டாயக்கல்வி 03. இலவசக்கல்வி 04. நிர்வாகக்கட்டமைப்பு 05. கலைத்திட்ட மாற்றம்.
சுதேசக்கல்வி : 1943ல் (கண்ணங்கர யுகம்) சுயமொழி மூலமான கல்வி என்ற எண்ணக்கரு முன்வைக்கப்பட்டு ஆரம்ப வகுப்புகளில் போதிக்கப்பட்டது. 1948ன் பின்னர் உயர்தரம் வரையும் சுயமொழி மூலமான கல்வி வழங்கப்பட்டது. இதனால் சமூகம் திறன்படக்கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 
இலவசக்கல்வி : கண்ணகங்கரவினால் அனைவருக்கும் கல்வி என்ற அமைப்பு  உருவாக்கப்பட்டது. இவரின் நோக்கம் யாதெனில் இலங்கையில் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்வாங்கும் வகையில் இலவசமாக கல்வி வழங்கப்பட்டது. இதனால் பல மாற்றங்கள் இடம்பெற்றது. பல்கலைக்கழகம் வரையும் இலவசமாகக் கல்வி கிடைப்பதால் சமூகத













கல்வி வரலாறு : அமெரிக்கா - பாடசாலை முறை முன்பிள்ளை பருவக்கல்வி பாலர்நிலையம் 0-4 வயது முதலாம் கட்டம் 0-2 இரண்டாம் கட்டம் 2-4 தனியார் ஆதிக்கம் அதிகம், முறைசார்கல்வி : ஆரம்பக்கல்வி : 8 வருடம், இடைநிலைக்கல்வி 3வருடம், மூன்றாம் நிலைக்கல்வி 4வருடம்,
ஆரம்பக்கல்வி 6-11 வரை நோக்கம் : வாசிப்புத்திறனை விருத்தி செய்தல், தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் திறனை விருத்தி செய்தல், நயத்தலுக்கான சந்தர்ப்பத்தை வழங்கல், பாடவிதானம்: உச்சரிப்பு, கணிதம், இயற்கை வளங்கல், உடற்பயிற்சி அழகியல் பாடங்கள், கற்பித்தல் : செயற்பாட்டு முறை, இடைநிலைக்கல்வி : நோக்கம் : சகலமாணவருக்கும் எழுத்து வாசிப்பு, பேச்சு, கேட்டல், கிரகித்தல் திறனைப்பெற்றுக் கொடுத்தல், கணினி உபயோகிக்கும் திறனுக்கு உதவுதல். தொழில்நுற்ப நுன்கலைக்திறனுக்கு அடிப்படைத்திறனைப் பெற்றுக் கொடுத்தல், விமர்சிக்கும் நோக்கம் கொண்ட சிந்திக்கும் திறனை உருவாக்குதல். தொழில் திறனைப் பெற்றுக் கொடுத்தல். சுற்றாடல், இயற்கை வாதம் தொடர்பான, பொருளியல் பற்றிய விளக்கம், பிராஜ உரிமையை விளங்கிக் கொள்ளளல்.
இடைநிலைபாடசாலை அமைப்பு :இவை உயர்பாடசாலைகள் எனப்படும், கனிஷ்ட உயர்பாடசாலைகள், சிரேஷ்ட உயர்பாடசாலைகள், இரண்டிலும் 3 வருடக்கல்வி, தனியார் இடைநிலைப்பாடசாலைகள், 4 வகைப்படும், பிரதேச உயர்பாடசாலை, இலவச உயர்பாடசாலை, தனியார் தொழில்நுற்பம் சார்ந்த இடைநிலைப்பாடசாலை, தனியார் விருப்புக்குரிய பாடசாலை, பாடவிதானம் : இரண்டு வருடம் பொதுப்பாட விதானம் இதில் மனைப்பொருளியல், கைத்தொழில் சார் கலை பொதுப்பாடமாக போதிக்கப்படும், மூன்றாம் விருப்பத்துக்குரிய கைத்தொழில், விவசாயம், வியாபாரம், பரீட்சை : வாய்மொழிமூலம், என புறவயம் கல்வி ஆண்டின் அளவினால் தீர்மானிக்கப்படும், மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் : 1.போதனைப் பரப்பல், 2. ஆய்வு - ஆக்கம், கண்டுபிடித்தல், 3. சேவை அறிவினைப் பிரயோகித்தல், நிறுவனங்கள் : கலை, விஞ்ஞான பட்டப்படிப்பு நிறுவனம், கனிஷ்டகல்லாரிகள், பட்டப் பின்படிப்பு நிறுவனம், பல்கலைக்கழகம், சொந்தப்பாடசாலைகள், திறந்த பல்கலைக்ககழகம்,

பிரித்தானியா : பாடசாலை அமைப்பு முறை - ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, நீடித்தகல்வி, உயர்கல்வி, ஆரம்பக்கல்வி 5-11 - பாலர் பாடசாலை 2-5 கீழ்ப்பிரிவு பாடசாலை 5-7 கனிஷ்ட பாடசாலை 7-11, பெரும்பாலும் தனியார் துறை செல்வாக்கு, ஆக்கத்திறன் செயற்பாடு சிறந்த சமூதாயத்தையை உருவாக்குவது நோக்கமாகும், ஆரம்பக்கல்வி, ஆரம்பப்பாடசாலையிலும், மத்திய பாடசாலையிலும் நிகழும்.
இடைநிலைப்பாடசாலைகள் : பிளஸ் - 2 பரீட்சை சித்தியடைந்தால், 1. இலக்கனப்பாடசாலைக்குச் செல்லலாம், 2. தொழில்நுட்பப்பாடசாலைக்குச் செல்லலாம் தொழில்நுட்ப வழிகாட்டி, நவீன பாடசாலை: இது மூன்றும் ஒருங்கமைந்த பாடசாலை பல்துறை பாடசாலையாகும்.
நீடித்த கல்வியும்,உயர்கல்வியும் : ஆசிரியர் கல்வி தொழிலாளர்கள் நீடித்தகல்வி, பல்கலைக்கழகக் கல்வி, திறந்த பல்கலைக்கழகம், விசேட கல்வியும், விசேட பாடசாலைகளும்.









 

கருத்துரையிடுக