எச்சரிக்கை! எச்சரிக்கை! புதிய வைரஸ் எச்சரிக்கை!!!

மனிதனாப் பிறந்தவர்கள் அனைவரும் இறைவனின் படைப்பில் பல வித்தியாசமான நடத்தைகளைப் பண்புகளை கொண்டிருப்பதும் இயல்பு தான். மற்றவரின் துன்பத்தில் சந்தோஷப்படுவது, அவர்களின் இன்பத்தில் துக்கப்படுவது இயல்பு தான் இது போல் இன்று எங்களை இலவாக கவரக்கூடிய விதத்தில் மடக்கி எங்களுடைய துன்பத்தில் சந்தோஷப்படும் செயல்தான் இந்த வைரஸ் பிரச்சினையும்.

பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் பல்வேறு பட்ட நோக்கங்களுக்காக எழுதப்படும் இந்த வைரஸ் புறோக்கிறாம் பல பெறுமதியான தரவுகளையும், தகவல்களை இழக்கச் செய்கின்றது என்பதும் நாங்கள் அறிந்து உண்மையே!

திரை ”செக்ஸ் படங்கள் இங்கே இலவசம்” என்னும் தலைப்புடன் வலம் வரும் இந்த வைரஸானது உலகில் உள்ள சகல சொப்வெயார் உலகத்தையை கதிகலங்க வைத்துள்ளது எனலாம்.

இதே போல் நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒர வைரஸ் வந்தது அது ஐ லவ் யு. என்ற வைரஸாகும். அந்த வைரஸ் பல ஆயிரம் கணினிகளை சுவைத்துப் பார்த்தது என்பதில் ஐயமில்லை எனலாம்.

இதே போன்று மாதிரியை ஒத்த வைரஸ் ஒன்று ஊடுருவி தாக்கத் தயாராகவுள்ளது என இந்த உலகத்தில் உள்ள பல்வேறுபட்ட நாடுகளில் காணப்படும் சொப்வெயார், அமெரிக்க விண்வெளி ஆராச்சி, நிறுவனம், டிஸ்னி, காம்காஸ்ட், ஏ.ஐ. ஜி, கொம்காஸ்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களுடைய மண்டையை ஒடைத்துக் கொண்டு துண்டக் கானோம், துனியைக் காணவில்லை என பயத்தில் தங்களுடைய கணினிகளின் வேலைகளை நிறுத்தி வைத்துள்ளார்கள் என்றால் சுற்றி சிந்தித்துபாருங்கள்



"செக்ஸ் காட்சிகள் இங்கே இலவசம்" என்ற, அறிவிப்புடன் வலம் வரும் புதிய வைரஸ் சாப்ட்வேரால், கம்ப்யூட்டர் உலகம் கதிகலங்கி நிற்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஐ லவ் யூ" என்ற பெயரில் அனுப்பப்பட்ட வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்தது.

அதே பாணியில் தற்போது "ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன், அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் புரோக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன.

செக்ஸ் காட்சிகளை இலவசமாக டவுண்லோடு செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் சாப்ட்வேருக்கு "ட்ரோஜான்" என பெயரிடப்பட்டுள்ளது.இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள ட்ரோஜான் வைரசை கிளிக் செய்தவுடன் கம்ப்யூட்டருக்குள் புகுந்து,சேமிப்பு கலன்களுக்குள் பல்கி பெருகும்.பின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் பைல்களை அழித்துவிடும்.மேலும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களுக்கு இது கட்டுப்படாது.



இதேபோன்று செக்ஸ் காட்சிகளை இலவசமாக டவுண்லோடு செய்யலாம் என்ற அறிவிப்புடன்"ஜஸ்ட் பார் யூ"என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள வைரஸ் சாப்ட்வேரும், கம்ப்யூட்டர்களை தாக்கி வருவதாக பிரபல ஆண்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான மெக்ஃபி எச்சரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவை தலையிடமாக கொண்ட காஸ்பெர்க்ஸ்கி ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர் ராம் ஹெர்க்கநாயுடு கூறியதாவது: "ட்ரோஜான் வைரஸ் சாப்ட்வேர்,ஏற்கனவே வந்த ஐ லவ் யூ வைரசை ஒத்துள்ளது.புதிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக,அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.

இதில் ஆச்சரியமான விஷயம்,ட்ரோஜான் வைரஸ் பழைய தொழில்நுட்ப அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. கம்ப்யூட்டருக்குள் புகும் ட்ரோஜன் சாப்ட்வேரின் ஒரு பிரதி,பின் பல்வேறு பிரதிகளாக பல்கி பெருகுகிறது.எனவே, இது பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது தெரிகிறது.எனவே, செக்ஸ் காட்சிகளை இணையதளங்களிலிருந்து டவுண்லோடு செய்யும்போது எச்சரிக்கை தேவை". இவ்வாறு ராம் ஹெர்க்கநாயுடு கூறினார்.

கருத்துரையிடுக