6 மே, 2010
மூளையை வளர்க்கும் இணைய தேடல்
இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?
முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை. இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.மூன்றாவது தலைமுறை இண்டெர்நெட் என்றாலே பயந்து ஒதுங்கி கொள்ளும் முத்த தலைமுறை.விதிவிலக்கான ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான தாத்தா பாட்டிகளை இந்த பிரிவில் தான் சேர்க்க வேண்டும்.
இண்டெர்நெட் அறிமுகம் வயதானவர்களுக்கு புதிய உலகை திறந்துவிடும் என்பது ஒருபுறம் இருக்க அது அவர்களின் மூளை செயல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதே விஷயம்.அதாவது இண்டெர்நெட்டில் தகவல்களை தேடுவது மூளைக்கான மிகச்சிறந்த பயிற்சியாக அமையும் என தெரிய வந்துள்ளது.
அதிகம் இல்லை ஒரு வார காலம் கூகுல் தேடலில் எடுபட்டாலே போதும் பெரியவர்களின் மூளை செயல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல் மேம்படுபவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச்சேர்ந்த யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது.55 வயது முதல் 78 வயதானவர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆலசி ஆராயப்பட்டது. ஆய்வில் பங்கேற்றோர் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது அவர்கள் மூலையில் நிகழும் ராசாயண மாறுதல்கள் கவனிக்கப்பட்டன.
அப்போது தேடலில் ஈடுபட்டவர்களின் மூளை செயல்பாடு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.முளையில் முடிவெடுக்க பயன்படும் பகுதியில் இந்த செயல்பாடு அமைந்திருந்ததை ஆய்வாலர்கள் கவனித்துள்ளனர்.
இந்த வகை செயல்பாடு முடிவெடுப்பது மற்றும் புரிந்து கொள்ளுதலில் முக்கிய பாங்காற்றும் என்று கருதப்படுகிறது.எனவே இண்டெர்நெட்டில் தகவல்களை தேடுவது மூளைக்கான பயிற்சியாக அமையும் என்று கருதப்படுகிறது.ஒரு வார காலம் தேடலில் ஈடுபட்டாலே போதுமானது என்றும் தெரிய வந்துள்ளது.
அல்சைமர்ஸ் போன்ற நினைவுத்திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைய தேடல் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்து அவர்கள் இண்டெர்நெட் விஷயத்தில் பயந்தாங்கொலிகளாக இருந்தால் அவர்களுக்கு இண்டெர்நெட்டை கற்றுக்கொடுப்பது மிகச்சிறந்த உதவியாக இருக்கும்.
Recommended Articles
- இணைய தளம்
கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டுJun 30, 2010
கணினியில் சில சிறிய விஷயங்களில் சின்ன மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இனையவேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம் அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்...
- இணைய தளம்
இணையத்தளங்களை விரும்பியவாறு பி.டி.எவ் வடிவில் சேமிக்க அல்லது பிரிண்ட் செய்வதற்குJun 22, 2010
ஒர் இணையத்தளத்தின் குறிப்பிட்ட பக்கமொன்றை சேமிக்கவும் அல்லது பிரிண்ட் செய்யவேண்டிய சந்தர்ப்பம் வரும்போது அந்த பக்கத்தில் இருக்கும் விளம்பரங்கள் படங்கள...
- இணைய தளம்
எச்சரிக்கை -போட்டோ க்குள் இவ்வளவுவிசயம் இருக்க|||||||?May 21, 2010
ஆனால் இணையத்தில் வெளியிடப்படும் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் ரொம்ப நல்லவர்கள் தான் என்பதற்குச் சிறிதும் உத்தரவாதமில்லை. சில வில்ல...
- இணைய தளம்
இணையத்தை உருவாக்கியவர்கள் யார்?May 16, 2010
இணையத்தை உருவாக்கியவர்கள் யார்? எந்த நோக்கில் உருவாக்கப்பட்டது? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம்? போன்றவை உங்களுக்குத் தெரியுமா? 1957 ...
Tagged In:
இணைய தளம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக