ஏழாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடை பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளின் படி- பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
22 தேர்தல் மாவட்டங்களில் 225 உறுபினர்களுக்கான தேர்தல் வியாழனன்று நடத்தப்பட்டது. ஆயினும் 20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளே வெளியிடப்பட்டன. திருகோணமலை, நாவலப்பிட்டி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலமாகவும் 29உறுப்பினர்களை தேசியப் பட்டியல் மூலமாக வும் தெரிவுசெய்வதற்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் வாக்காளர்கள் பதிவாகினர் இதில் 36 அரசியல் கட்சிகள் மற்றும் 301 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7620பேர் தேர்தலில் போட்டியிட்டனர் வாக்காளர்களுக்கு 11875 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்யபட்டிந்தது
அறிவிக்கப்பட்ட 20 மாவட்டங்களிலும் 117க்கும் அதிகமான ஆசனங்களை ஐ.ம.சு.மு வெற்றி பெற்றுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக 46 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது . வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 12 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனநாயக தேசிய முன்னணி ஐந்து ஆசனங்களை பெற்றிருக்கிறது.
கடந்த பாராளுமன்றத்தில் 225 உறுபினர்களில் 25 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தார்கள் 51 கபினட் அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள் கபினட் அமைச்சர்ளாக அங்கம் வகித்தார்கள் , 39 கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சர்களை கொண்ட அவையில் ஐந்து முஸ்லிம்கள் கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சர்களாக அங்கம் வகித்தார்கள் மேலும் 19 பிரதி அமைச்சர்களை கொண்ட அவையில் ஐந்து முஸ்லிம்கள் அங்கம் வகிதுள்ளார்கள் கடந்த பாரளுமன்றத்தின் ஊடாக கிட்டதட்ட 15 அமைச்சர்கள் அங்கம் வகிதுள்ளார்கள் ஆக கடந்த முறை 25 பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தார்கள் அவர்களில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள் இதை வாசிபவர்களுக்கு ஒரு கேள்வி எழும்பும் இவ்ளவு பேர் இருந்து முஸ்லிம் சமுகத்துக்கு எதை செய்தார்கள் ??? அந்த கேள்விக்கு விடையை பின்னர் பார்போம் -
கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த ஐந்து முஸ்லிம் கபினட் அமைச்சர்கள் அவர்களின் விபரம்
1.A.H.M.பௌசி- பெற்றோல் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
2.பேரியல் அஸ்ரப் - வீடு அமைப்பு அமைச்சர்
3.A.L.M.அதவுல்லா- நீர் வழங்கல் வடிகாலமைப்பு
4.ரிஷாத் பதியுதீன்- மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள்
5.M.H.முஹமத்- பாராளுமன்ற விவகாரம்
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த , கபினட் அந்தஸ்து அற்ற ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் அவர்களின் விபரம்
1.M.N.அப்துல் மஜீத் -கூட்டுறவு 2.S.அமீர் அலி - அனர்த்த நிவாரணம்
3.சேகு இஸ்ஸத்தீன்- ஏற்றுமதி அபிவிருத்தி
4.S.நிஜாமுதீன்- புகையிரதம்
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐந்து முஸ்லிம் பிரதி அமைச்சர்கள் அவர்களின் விபரம்
2.M.M.முஸ்தபா-மயோன் முஸ்தபா -உயர்கல்வி
3.A.K பாயிஸ்-கால் நடை அபிவிருத்தி
4.M.C.முஹமத் பைசல் -விஞ்ஞான தொழில்நுட்பம்
5.ஹுசைன் பஹிபிலா-வெளி நாட்டு விவகாரம்
கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 25 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பெற்றனர்
1.A.H.M.பௌஸி
2.பேரியல் அஸ்ரப்
3.A.L.M.அதவுல்லா
4.ரிஷாத் பதியுதீன்
5.M.H.முஹமத்
6.M.N.அப்துல் மஜீத்
7.S.அமீர் அலி
8.சேகு இசத்தீன்
9.S.நிஜாமுதீன்
10.பைசர் முஸ்தபா
11.M.M.முஸ்தபா
12.A.K. பாயிஸ்
13.ஹுசைன் பஹிலா
14.A.R.அஞ்சான் உம்மா
15.A.R.M.அப்துல் காதர்
16.அலி ஹசன்
17.பைசல் காசிம்
18.அப்துல் ஹலீம்
19.ரவுப் ஹகீம்
20.கபீர் ஹாசிம்
21.R.M.இமாம்
22.M.M.மஹ்ரூப்
23.M.முஸாமில்
24.A.M.M.நௌசாத்
25.ரஜாப்தீன் முஹமத்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 'மஹிந்த சிந்தனை ல் குறிப்பிட்டுள்ளது போல் அமைச்சவையை தெரிவு செய்ய நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. அமையவுள்ள அமைச்சரவை மிகச் சிறிய எண்ணிக்கையை கொண்டதாகவே அமையும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முழு தேர்தல் முடிவுகளும் வெளிவந்த பின்னர் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் எத்தனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளார்கள் எத்தனை பேர் தெரிவாக விலை எத்தனை புதிய முகங்கள் தெரிவாகியுள்ளன முஸ்லிம்கள் எத்தனை அமைச்சுகளை பெற போகின்றார்கள் என்பதை பார்போம் நடைமுறை அரசியலை விளங்கி கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டும்தான் இந்த ஆக்கத்தை தருகின்றேன்.
நன்றி லங்காமுஸ்லிம். கொம்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக