நமக்குரிய கோப்புகளாகிய படங்களையோ வேறு சில கோப்புகளையோ வன்தட்டிலும் , பாதுகாப்பிற்காக குறுந்தகடுகளிலும் பதிந்து வைத்து இருப்போம்.
ஏதோ சில சிக்கலால் அவை காணாமல் பொய் விட்டாலோ அல்லது வேலை செய்யாமல் விட்டாலோ திண்டாட்டம் தான்.
எனவே இணையத்தில் நமது கோப்புகளை சேமித்து வைப்பது பிற்காலத்தில் எப்போதாவது உதவும். மேலும் அதை எந்த கணினியிலிருந்தும் பெற முடியும், இணைய இணைப்பு இருந்தால்.
நிறைய இணைய சேமிப்பு கொடுக்கும் வலைத்தளங்கள் இருந்தாலும், நான் இப்போது சொல்லப்போவது ஒன்றே.
உங்களுக்கு Hotmail/Live கணக்கு இருந்தால் மிகவும் சுலபம் தான். இல்லையென்றால் உருவாக்கிக் கொள்ளவும்.
உலாவியின் பக்கத்திற்கு மேல் சென்று More/Skydrive Option ஐ திறக்கவும்.
இப்போது நீங்கள் 25 GB சேமிக்கலாம். மேலும் அதிகம் வேண்டுமென்றால் இன்னொரு கணக்கை உருவாக்கலாம்.
கோப்புகளை மேல் ஏற்றுவதற்கு IE உலாவி தான் சிறந்தது. ஏன் என்றால் ஒரே நேரத்தில் பல கோப்புகளை ஏற்றுவதற்கு ActiveX control ஐ பயன் படுத்தி அது சுலபமாக செய்கிறது. இல்லை நீங்கள் நெருப்பு நரி ( Firefox ) பயனாளராக இருந்தால் IETab addon ஐ பயன் படுத்தலாம்.
படங்களை பார்ப்பதற்கு Slide show வும் உள்ளது.
பல இணைய சேமிப்புகள் இருந்தாலும் எனக்கு பிடித்து இது ஒன்றே, இது வரை.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக