Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

12 ஜன., 2010

PDF இலிருந்து word க்கு கோப்புகளை மாற்றியமைக்க இணையவழியிலான இலவச மென்பொருள்





ஆவணங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் இருகின்றபோதிலும் இணையவழியிலான மென்பொருட்கள் சிறப்பான மென்பொருட்களாக இருக்கின்றன. அவ்வாறன பல இணையவழியிலான மென்பொருட்கள் பற்றிய பதிவுகளை எனது முன்னைய பதிவுகளில் தந்துள்ளேன். இந்த பதிவும் அவ்வாறான ஒரு இணையவழியிலான மென்பொருள் பற்றிய பதிவு.

PDF வடிவில் இருக்கும் ஆவணங்களை word வடிவத்திற்கு மாற்றி கொள்ளவெனhttp://www.pdftoword.com/  என்னும் இணையத்தினூடாக நீங்கள் உங்கள் ஆவணங்களை மாற்றியமைத்து கொள்ளமுடியும்.மேலே குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று கீழேயுள்ள படிமுறைகளின்படி PDF வடிவிலுள்ள கோப்புக்களை மாற்றியமைத்து கொள்ளுங்கள். இதில் மூன்று படிமுறைகள் உள்ளன.





படிமுறை 1:
Step 1 என்ற இடத்தில் PDF கோப்பை தரவேற்றி (Upload) கொள்ளுங்கள்.

படிமுறை 3:
Step 2 என்ற இடத்தில்   கோப்பு வடிவத்தினை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.

படிமுறை 2:
Step 3 என்ற இடத்தில் உங்களின் மின்னச்சல் முகவரியினை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். ( ஏனெனில்  மாற்றியமைக்கப்படும் கோப்புக்கள் யாவும் உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்)
பின்னர் Convert என்பதினை அழுத்தி கோப்புகளை மாற்றி கொள்ளமுடியும்.
இணையச்சுட்டி: http://www.pdftoword.com/

1 கருத்து:

  1. தயவு செய்து மற்றவர்கலின் வலைப்பதிவில் இருன்து பிரதி செய்பவற்றை அவ்ர்களின் இணையச்சுட்டியுடன் வழங்குங்கள்.
    இந்த பதிவானது வன்னி தகவல் தொழில்நுட்பத்திற்கு சொந்தமானது.
    http://vannitec.blogspot.com/2010/01/pdf-word.html

    பதிலளிநீக்கு