இணையத்தினூடாக 2GB வரை அளவுள்ள கோப்புக்களை இலகுவாக பகிர்ந்து கொள்ள இலவச இணையத்தளம்





மிகப்பெரிய அளவிலானகோப்புக்களை,ஆவணங்களை (Folders and Documents) மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துகொள்வதென்பது முடியாத ஒரு விடயம். ஏனெனில் பெரும்பாலான இலவச மின்னஞ்சல்களை வழங்கும் சேவை வழங்குனர்கள் (Gmail,Yahoomail,Hotmail,AOL,USA@net,lycosmail) 20MB வரையிலான அல்லது அதற்கு குறைவான அளவு கொள்ளளவுடைய கோப்புக்களையே பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இருந்தபோதிலும் சில yousendit போன்ற சில இணையத்தளங்கள் 200MB வரையிலான கோப்புக்களையே பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலே சென்று 2GB அளவுள்ள கோப்புக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் WeTransfer என்னும் இணையத்தளமானது இந்த சேவையை வழங்குகின்றது. இந்த இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் யாருக்கு கோப்புக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களோ அவரின் மின்னஞ்சல் முகவரினையும் உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் வழங்கி கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த இணையத்தளத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கு பயனாளர் கணக்கு தேவையில்லை. இது முற்றிலும் இலவசமான ஒருசேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.









கருத்துரையிடுக