கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துப் பயன்படுத்தும் பல புரோகிராம்களை, சில வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் நாட்கள் கழித்தும் கூட வேண்டாம் என்று, அன் இன்ஸ்டால் செய்கிறோம். அவ்வாறு அதன் பதிவை நீக்குகையில், ஒரு சில பதிவுகள் அப்படியே அழியாமல் இருந்துவிடுகின்றன. இந்த புரோகிராம்களுடன் வரும் அன் இன்ஸ்டால் பைல் மூலம் நீக்கினாலும் இந்த வரிகள் அப்படியே கம்ப்யூட்டரில் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, ரெஜிஸ்ட்ரியில் சில வரிகள் நீக்கபடுவதில்லை. இது போல இன்னும் சில பதிவுகள் நீக்கப்படுவதில்லை.
இவை எந்தவிதமான தொல்லையும் கொடுப்பதில்லை என்றே வைத்துக் கொண்டாலும், இவை ஏன் ஹார்ட் டிஸ்க்கில் இடம் பிடிக்க வேண்டும். எனவே இவற்றை மொத்தமாக, எந்த சுவடும் இல்லாமல் நீக்குவதற்கென ஏற்படுத்தப்பட்டு இலவசமாகக் கிடைக்கும் புரோகிராமின் பெயர் ரெவோ அன் இன்ஸ்டாலர். இதனை இன்ஸ்டால் செய்து, குறிப்பிட்ட சாப்ட்வேர் அல்லது புரோகிராம்களை நீக்குமாறு கட்டளை கொடுத்தால், எந்த விதமான தங்கும் வரிகள் இன்றி அனைத்தையும் நீக்கிவிடுகிறது.
இந்த புரோகிராமுடன் இன்னொரு வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் பெயர் ஆட்டோ ரன் மேனேஜர் (Autorun Manager) இது என்ன செய்கிறது? உங்களுடைய சிஸ்டம் தொடங்கும் போது, நீங்கள் கட்டளை கொடுக்காமல், தாங்களாக இயங்கிப் பின்னணியில் உள்ள புரோகிராம்களையும் இது பட்டியலிடும். ட்ரேக்ஸ் கிளீனர் (Tracks Cleaner) என்ற ஒரு புரோகிராமும் இதில் தரப்படுகிறது. இந்த புரோகிராம் நீங்கள் மேற்கொண்ட இணைய உலாவில் பார்த்த முகவரி களின் பதிவுகளையும் நீக்குகிறது. அத்துடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷன் புரோகிராம் விட்டுச் செல்லும் வரிகள், பைல்களையும் நீக்குகிறது.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக