நண்பர்களே அனைவருக்கும் இலவசமாகவும் சட்டரீதியாகவும் கணிணிக்கு அதிமுக்கிய தேவையான நல்ல மென்பொருட்கள் கீழே பட்டியலிட்டிருக்கிறேன். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். புதிய கணிணி வாங்குபவர்கள் இந்த மென்பொருள் இருந்தால் போதும் உங்கள் கணிணியில் நிறைய மென்பொருட்கள் தேட வேண்டிய வேலைகள் மிச்சமாகும்.
நெருப்பு நரி வலைஉலாவி மென்பொருள்
இந்த மென்பொருள் மூலம் இணையத்தளங்களை வேகமாக பார்க்க உதவுகிறது. இந்த மென்பொருள் Open Source என்பதால் அடிக்கடி மேம்படுத்தப்படுகிறது. அது இல்லாமல் நிறைய நீட்சிகளை தரவிறக்கி பயன்படுத்த முடிவதால் மிகவும் எளிதாகிறது வேலைகள். இதன் புதிய பதிப்பு 3.5. வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
நீட்சி தரவிறக்க சுட்டி
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
இது மிகவும் முக்கியமானது ஏனென்றால் அநேகம் பேர் புதிய கணிணி வாங்கியவுடன் இணைய இணைப்பு பெற்று விடுகின்றனர். அதன் வழியாக நிறைய மென்பொருள், படங்கள் ஆகியவை தரவிறக்கும் போது வைரஸ் வந்து புதிய கணிணியை பாழ் செய்ய நேரிடுகிறது. அதை தடுக்க இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இணையத்தில் உலாவலாம். மென்பொருள் சுட்டி
டிபிராக் மென்பொருள்
கணிணி வாங்கி மாதம் ஒருமுறை இரு மாதத்திற்கு ஒரு முறை டிபிராக் செய்வது நல்லது இதன் மூலம் கணிணியின் வன்தட்டில் இடம் மாறி அமர்ந்திருக்கும் கோப்புகள் ஒரு ஒழுங்கு வரிசையாக அமர்ந்து நாம் கையாள்வதற்கு சுலபமாக இருக்குமாறு மாற்றியமைக்கப்படுகிறது. மென்பொருள் சுட்டி
சிசிகீளினர் மென்பொருள்
இந்த மென்பொருள் இணையத்தில் உலாவிய பிறகு உள்ள தற்காலிக கோப்புகளை நீக்கலாம். தேவையில்லாத மென்பொருட்களை நீக்க முடியும். மென்பொருள் சுட்டி
ஐஸ் ஆர்க்
இந்த மென்பொருள் விண்ஜிப் போன்ற் ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் மிகவும் பிரபலமான 7-ZIP, A, ACE, ARC, ARJ, B64, BH, BIN, BZ2, BZA, C2D, CAB, CDI, CPIO, DEB, ENC, GCA, GZ, GZA, HA, IMG, ISO, JAR, LHA, LIB, LZH, MDF, MBF, MIM, NRG, PAK, PDI, PK3, RAR, RPM, TAR, TAZ, TBZ, TGZ, TZ, UUE, WAR, XXE, YZ1, Z, ZIP, ZOO போன்ற கோப்புகளை திறமையாக கையாள்கிறது.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
கூகிள் பிகாஸா மென்பொருள்
இந்த மென்பொருள் மூலம் நம் கணிணியில் உள்ள புகைப்படங்களை சுலபமாக தேடி ஒரு ஒழுங்குபடுத்த முடியும். புகைப்படங்களை ஸ்லைடுகளை கோப்பாக உருவாக்க முடியும். புகைப்படங்களை எடிட் செய்ய முடியும்.
மென்பொருள் சுட்டி
பிடிஎப் மாற்றி
பிரிண்டர் இல்லாதவர்கள் தங்கள் கோப்புகளை பென் ட்ரைவில் சேமித்து இணைய நிலையங்களுக்கு சென்று பிரிண்ட் எடுத்து வருவர். அவ்வாறு ஒரு பத்து எம்பி கோப்பை 1 எம்பி கோப்பாக கொண்டு சென்றால் மிகவும் இடம் குறைவாக பிடிக்கும் என்பது நல்ல விஷய்மதானே அதற்கு இந்த மென்பொருள் மூலம் உங்கள் கோப்புகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க முடியும்.
மென்பொருள் சுட்டி
யூட்யூப் தரவிறக்கி/ மாற்றி
யூட்யூப் இணையத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகமாகவும் வேகமாகவும் இருக்கும். தரவிறக்கும் வீடியோக்களை நமக்கு பிடித்த கோப்புகளாக மாற்றி பார்க்க முடியும். சுட்டி
விஎல்சி மீடியா ப்ளேயர்
நாம் வைத்திருக்கும் அனைத்து வகையான வீடியோக்களை பார்க்க இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருளில் பலவகையான உதவிகள் உள்ளன. நீங்கள் பார்க்கும் படத்தை தேவையானதை புகைப்படமாக (ScreenShot) எடுக்கலாம். வீடியோவை தேவையான அளவு கட் செய்து எடுக்கலாம். வீடியோவை கன்வேர்ட் செய்யலாம். மென்பொருள் சுட்டி
பூபார் 2000
இந்த மென்பொருள் ஒரு மியூசிக் ப்ளேயர். இதன் மூலம் பலதரப்பட்ட ஆடியோ கோப்புகளை ப்ளே செய்து கேட்க முடியும். மற்ற மியூசிக் ப்ளேயர் மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் இதன் தரமும் பிரமிக்க வைக்கிறது. அது மட்டும்மல்ல குறைந்த அளவு மெமரி எடுத்துக் கொள்கிறது என்பது இதன் சிறப்பம்சம். மென்பொருள் சுட்டி
டிவிடி சிடி எழுதி
நாம் வைத்திருக்கும் கோப்புகளை டிவிடியில் பிரதியெடுக்க இந்த இலவச மென்பொருள் மிகவும் உபயோகமாகயிருக்கும். மென்பொருள் சுட்டி
இந்த மென்பொருளின் வரிசை என்னுடைய கருத்து மட்டுமல்ல அனைத்து கணிணி உபயோகிப்பவர்களின் கருத்தும் கூட. வேறு என்ன மென்பொருள் சேர்க்கலாம் என்று பின்னூட்டமிடுங்கள் அடுத்த பதிவில் சேர்த்து எழுதிவிடுவோம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்க அதோட உங்கள் ஒட்டினை அனைத்து திரட்டிகளிலும் குத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துரையிடுக
கருத்துரையிடுக