மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரப் பிரச்சனை- சுதந்திர மென்பொருள் தரும் தீர்வு (Version 2)




EVM- Electronic Voting Machine - மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்.

இதன் நம்பகத்தன்மையைப் பற்றி நீதிமன்றங்களில் பல வழக்குகள் போடப்பட்டன.

ஆனால் இதுவரை அனைவரும் ஒத்துக்கொள்ளுமாறு தீர்வு எட்டப்படவில்லை என்றே தோன்றுகிறது.

லட்சக்கணக்கில்/கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் வக்கீல்கள் நீதிமன்றத்தில் ஒரே ஒரு வலுவான கருத்தை சொல்லி, பிரச்சனையை தீர்த்து இருக்கலாம்.

அவர்கள் என்ன சொல்லி இருக்க வேண்டும் என்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சம்பந்தமான ஹார்ட்வேர், சாஃப்ட்வேர், புரோகிராம் (Specification / Electronic Circuit Diagram அனைத்தையும் வெளிப்படையாக வெளியிட்டு, ஓப்பன் சோர்ஸ் (சுதந்திர மென்பொருள்/கட்டற்ற மென்பொருள்) ஆக்கிவிடுங்கள்.

ஏனென்றால் இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. மறைப்பதும் நல்லதில்லை.

அப்படி ஆக்கி விட்டால் புரோகிராம்/ஹார்ட்வேர்/சிப்/ Electronic Circuit Diagram எப்படி இயங்குகிறது என்று அனைவரும் அறிவார்கள். அதில் ஏதாவது குறை இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் சொல்லி புரோகிராமை /ஹார்ட்வேரை/ சிப்பை மாற்றி சரி செய்து அந்த குறையை தீர்த்துவிடலாம்.

குறை கூறுபவர்களிடம் எதில் குறை என்று கேட்டறிந்து சரி செய்துவிடலாம்.

”புரோகிராமை மாற்றி மோசடி செய்தால்?” என்று கேள்வி எழுப்புபவர்களிடம் அப்படி மாற்றாமல் இருக்க/ மாற்றினால் கண்டுபிடிக்க எளிதான, வேகமான, நம்பகமான வழிமுறை இருந்தால் சொல்லுங்கள். செயல்படுத்துகிறோம் என்று கேட்டு அதன்படி பாதுகாப்பை பலப்படுத்தலாம்.

அப்படி செய்தால் புரோகிராமை மாற்றி தில்லுமுல்லு முடியுமா? என்ற கேள்வி போய்விடும். ஏனென்றால் எல்லாருக்கும் அறிவித்த புரோகிராம்தான் அந்த இயந்திரத்தில் இருக்கும்/இருக்கவேண்டும்.

ஓட்டு எண்ணிக்கையை ஒருவருக்கு மட்டுமே சாதகமாக காட்ட புரோகிராமை/எலக்ட்ரானிக் சர்க்யூட்டை மாற்ற முடியும் என்று பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், அதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

ஏனென்றால் லேட்டஸ்ட் ஒரிஜினல் புரோகிராம்/Circuit என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்குமே! ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

110 கோடி மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர வேண்டும்.

இந்த யோசனையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நல்ல முடிவு எடுத்தால் அனைத்து மக்களும் பயன்பெறுவார்கள்.

தேர்தல் ஓட்டு இயந்திரத்தை சுதந்திர மென்பொருள் ஆக்கினால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. லாபம்தான். (We have everything to gain and nothing to lose).

இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாவின் கடமை.

ஓட்டுப்போட்டு இந்த விலைமதிப்பற்ற யோசனையை அனைவருக்கும் தெரிய வைக்கலாம்.

கருத்துரையிடுக