வேர்ட்டில் HYPERLINK தர

<span title=

நாம் பதிவுகளில் நிறைய பார்த்திருப்போம். நீங்கள் இந்த தளம்
செல்ல இங்கு கிளிக் செய்யவும் என போட்டிருக்கும். நீங்கள்
உங்கள் கர்சரை அங்கு கொண்டு சென்று கர்சரால் கிளிக்
செய்தால் அந்த குறிப்பிட்ட தளம் கொண்டு செல்வீர்கள்.
அதைப்போல் நாம் வேர்டில் ஒரு டாக்குமென்ட் தயார்
செய்யும் போது குறிப்பிட்ட தளம் செல்ல இங்கு கிளிக்
செய்யவும் எனகுறிப்பிட்டு அந்த தளத்திற்கான லிங்க் கொடுத்தால்
அந்த லிங்க்க்கு கொண்டு செல்லப்படுவீர்கள். இணைய இணைப்பு
இல்லாத சமயம் நாம் நமது கணிணியிலேயே உள்ள
டிரைவின் போல்டருக்கு லிங்க் தரலாம்.அதைப்பற்றி விரிவாக
கீழே பார்க்கலாம்.

முதலில் உங்களிடம் உள்ள வேர்ட் 2007 அல்லது 2003 திறந்து
கொள்ளுங்கள். முதலில் வேர்ட் 2003 பற்றி பார்க்கலாம்.
உங்களுடைய வேர்ட் டாக்குமென்டை தயார் செய்து
கொள்ளுங்கள்.அதில் குறிப்பிட்ட வார்த்தையை மவுஸால் தேர்வு
செய்துகொள்ளுங்கள்.நான் கீழே உள்ள டாக்குமென்டில்
படங்கள் என்கின்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளேன்.


இப்போதுMenu Bar -ல் உள்ள Insert கிளிக் செய்து அதன் கீழ் உள்ளHyperlinkஎன்பதனை
தேர்வு செய்யுங்கள். அல்லது Ctrl+K கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.



இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் எந்த டிரைவ்-போல்டரிலிருந்தும் புகைப்படமோ -
அல்லது டேட்டா விவரமோ -அல்லது வீடியோவோ
எதுவேண்டுமானாலும் லிங்க்காக கொடுக்கலாம்.
இப்போது நீங்கள் தேர்வு செய்த வார்த்தையின் கீழே
கோடு வந்துள்ளதை காணலாம்.


இப்போது அந்த வார்த்தையின் கீழே நீங்கள் கர்சரை
கொண்டு சென்று Ctrl அழுத்தினால் உங்கள் கர்சரானது
கையாக மாறிவிடும்.


இப்போது மவுஸால் கிளி்க் செய்தால் நீங்கள் குறிப்பிட்ட
டிரைவ் - போல்டருக்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.
வேர்ட் 2007 வைத்துள்ளவர்கள் கீழ்கண்ட வாறு
Insert -Hyperlink-தேர்வு செய்துகொள்ளுங்கள்.

இணைய இணைப்பில் லிங்க் கொடுக்கவிரும்புபவர்கள்
URL முகவரியை கொடுக்கவும்.
பதிவினை பாருங்கள்.அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இன்றைய PSD பைலுக்கான படம் கீழே:-


டிசைன் செய்து வந்துள்ள படம் கீ்ழே:-



இதைபதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக