இ-மெயில் தவறுகளை அறிய


நாம் இ-மெயில் அனுப்பும் போது அதில் உள்ள பிழைகளை
நீக்கிவிட்டு மெயில் அனுப்புவோம். ஆனால் என்ன என்ன
பிழைகள் செய்தோம். அதை நீக்கி என்ன வார்த்தை சேர்த்தோம்
என இந்த தளம் மூலம் அறியலாம்.

அலுவலக உபயோகம் தவிர சொந்த உபயோகத்திற்கு
-நண்பர்களுக்கு - காதலிக்கு - மனைவிக்கு - என
இ-மெயில் அனுப்பும் போது இதை பயன் படுத்தலாம்.

உதாரணத்திற்கு

அழகான ராட்சஸியே....என தட்டச்சு செய்துவிட்டு
அதை டிலிட் செய்துவிட்டு அதில்
அழகான அன்னமே....என மாற்றுகின்றோம் என வைத்துக்
கொள்ளுவோம் ...இந்த தளத்தில் இது இரண்டுமே
டிஸ்பிளே ஆகும்.வித்தியாசத்தை விரும்புகின்றவர்கள்
இதை முயற்சிசெய்து பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.





இதில் உங்கள்பெயர், இ-மெயில் முகவரி, அதைப்போல் பெறுபவர் முகவரி
அளித்து செய்தியை தவறுதலாகவும், சரியாகவும்தட்டச்சு செய்யுங்கள்.

இறுதியில் Sent கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.


நாம் தட்டச்சு செய்ததை அப்படியே பதிவு செய்து அவர்களுக்கு
லிங்க் அனுப்பி விடுவார்கள். அவர்கள் அந்த லிங்க் கிளிக்
செய்ததும் அவர்களுக்கு நாம் தட்டச்சு செய்த தகவலும் -
திருத்திய தகவலும் டிஸ்பிளே ஆகும்.
அனுப்பிய இ-மெயில் தகவல் அப்படியே படிக்கலாம்.
ஆனால் நாம் சொல்லவிரும்பிய தகவல் - சொல்லிய
தகவல் இவற்றை படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூடும்.
சும்மா ஜாலிக்காக பயன்படுத்திப்பாருங்களேன்.

இன்றைய போட்டோஷாப் பதிவிற்கானPSD படம்:-



டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இந்த படத்திற்கான லிங்க் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.


தீபாவளிக்கான ஸ்பேஷல் போனஸ் இது:-

இதில் உள்ள பட்டாசுக்களை யார் வேண்டுமானாலும்
வெடிக்கலாம். எப்போதும் தீர்ந்து போகாது. தீ காயம் ஏற்படும்
என்கின்ற பயம் இல்லை. தைரியமாக குழுந்தைகளை
வெடிக்க சொல்லிவிட்டு நாம் வேறு வேலைகளை பார்க்கலாம்.

இந்த தளம் சென்று இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்து
கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நடுவில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.



இதில் விதவிதமான பட்டாசுக்கள் இருக்கும். வேண்டியதை
கொளுத்த கிளிக் செய்யுங்கள்.

வெடித்து சிதறுவதை கண்டு களியுங்கள்.

பட்டாசுக்களை மொத்தமாக வாங்க இங்கு கிளிக்-1, ,கிளிக்-2, செய்யுங்கள்.

கருத்துரையிடுக