கூகிள் தேடுபொறியில் மாற்றம் செய்ய..,


கூகிள் தேடு பொறியில் சர்ச் பாக்ஸில் நாம் டைப் செய்யும்பொழுது, அதுவாகவே சில வார்த்தைகளை நிரலில் காண்பிக்கும். உதாரணமாக சர்ச் பாக்ஸில் 'Y' என டைப் செய்தால், நிரலில் Yahoomail, Yahoo, Youtube போன்று சிலவற்றை காண்பிக்கும். இந்த வசதி சில சமயங்களில் உதவியாக இருந்தாலும், பல நேரங்களில், நாம் எதைக்குறித்து தேட வந்தோம் என்பதையே மறந்துவிட்டு, வேறு ஏதாவது வலைப்பக்கங்களில் ஆழ்ந்து விடுவோம்.

இது மட்டுமல்லாமல் கூகிள் சர்ச் பாக்ஸில் எதாவது தேட முற்படுகையில், நமக்கு தேவையில்லாத சில ஆபாசமான தளங்களுக்கான சிபாரிசும் தரும். உதாரணமாக நாம் Tamil Songs என டைப் செய்ய முற்படும்பொழுது Tamil S என்று டைப் செய்த உடனே, என்ன வருகிறது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


   
இது போன்ற சங்கடங்களை தவிர்க்க என்ன செய்யலாம்.

கூகிள் தளத்திற்கு சென்று வலது மேல்புற மூலையில் உள்ள Settings என்ற லிங்கை  கிளிக் செய்து Search Settings செல்லுங்கள். அங்கு Query Suggestions பகுதிக்கு சென்று Do not provide query suggestions in the search box என்பதை தேர்வு செய்து, Save Preferences பொத்தானை சொடுக்கி சேமித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.



சிறுவர்கள் உபயோகிக்கும் கணினிகளில், கூகிள் தளத்தில் Search Settings சென்று Safe search Filtering என்ற பகுதிக்கு நேராக உள்ள Use strict filtering (Filter both explicit text and explicit images) என்பதை தேர்வு செய்து சேமித்துக் கொண்டால், சிறுவர்கள் கூகிள் தளத்தில் தேடும் பொழுது Adult content களை தவிர்க்க முடியும்.


 

.

கருத்துரையிடுக