நெருப்பு நரியில் டவுன் லோடு லொகேஷனை மாற்ற...


நெருப்பு நரி உலவியில் வழக்கமாக நாம் டவுன்லோடு செய்யும் பொழுது அந்த கோப்புகள் My Documents\Downloads  அல்லது  Desktop போன்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட லொகேஷனில் சேமிக்கப்படும்.

இந்த லொகேஷனை மாற்றி நாம் உருவாக்கிய ஏதாவது ஒரு ஃபோல்டரில் (உதாரணமாக E:\My Downloads) டவுன்லோடு செய்ய என்ன செய்யலாம்.

மிகவும் எளிதான வழி..,

நெருப்பு நரி உலவியில் Tools மெனுவிற்கு சென்று Options கிளிக் செய்யவும். இனி திறக்கும் Options டயலாக் பாக்ஸில் Main டேபிற்கு செல்லவும்.



இதில் Save Files to என்பதற்கு நேராக உள்ள Browse பொத்தானை கிளிக் செய்து தேவையான லொகேஷனை தேர்வு செய்து (உதாரணமாக E:\My Downloads) OK கொடுக்கவும்.

ஒரு வேளை ஒவ்வொருமுறை டவுன்லோடு செய்யும் பொழுதும், எங்கு சேமிக்க வேண்டும் என கேட்கும் வசதி தேவைப்பட்டால், அதற்கு கீழாக உள்ள Always ask me where to save files என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

அவ்வளவுதான்.

கருத்துரையிடுக