சந்திரனில் மோதியது 'நாசா' ராக்கெட்

சந்திரனில் மறைந்திருக்கும் "ஐஸ்' துகளை கண்டறியும் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, நாசா நேற்று ராக்கெட் ஒன்றை, அதன் மீது வெற்றிகரமாக மோதச் செய்தது.

சந்திரனில் நேற்று காலை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த மோதல், பெரியளவில் திட்டமிடப்பட்ட முதல் மோதல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டிற்கு, "எல்-கிராஸ்' என்று பெயர்.

லூனார் கிராட்டர் அப்சர்வேசன் அண்ட் சென்சிங் சாட்டிலைட் என்பதன் சுருக்கமே, "எல்-கிராஸ்.' இதில், ஐந்து கேமராக்கள் மற்றும் நான்கு அறிவியல் சாதனங்கள் ஆகியவை இருந்தன.

ராக்கெட் சந்திரனில் மோதிய சில நிமிடங்களில், இவை வேகமாக புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி விட்டு நொறுங்கி விழுந்தன. சந்திரனில் நடத்தப்பட்ட இந்த மோதலை, நாசா நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பியது.

இந்த மோதலின் மூலம், சந்திரனின் மேற்பரப்பிற்கு அடியில் ஐஸ் ஏதேனும் உள்ளதா என்பதை நாசா கண்டறியும்

கருத்துரையிடுக