நெருப்புநரி உலவியில் தமிழ்விசை நீட்சி

தமிழ்விசை என்பது அஞ்சல், தமிழ்நெட்99, பாமினி, பழைய மற்றும் புதிய தட்டச்சு, இன்ஸ்கிரிப்ட் மற்றும் அவ்வை விசைப் பலகை வடிவமைப்புகளை உள்ளடக்கிய, தமிழ் பதிவர்களுக்கான மிகவும் உபயோகமான நெருப்புநரி நீட்சியாகும்.

இதை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் குறைந்தபட்சம் ஒரே ஓரு யுனிகோட் தமிழ் எழுத்துரு பதியப் பட்டிருக்கவேண்டும். வழக்கமாக 'லதா' எழுத்துரு விண்டோஸ் உடனே பதியப் பட்டிருக்கும்.

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி தமிழ்விசை நீட்சியை நெருப்புநரி உலவியில் பதிந்துகொண்டு, நெருப்புநரியை மறுபடியும் தொடங்குங்கள்.








பிறகு,
வலைப்பக்கத்தில் எந்த டெக்ஸ்ட் ஃபீல்டில் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டுமோ, அங்கு கர்சரை வைத்து கீழ்கண்ட hot keys களை உபயோகப்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்.

Alt+F6 => Avvai
Alt+F7 => Inscript
Alt+F8 => Anjal
Alt+F9 => Tamil 99
Alt+F10 => Bamini
Alt+F11 => Old Typewriter
Alt+F12 => New Typewriter


மேற்கண்ட ஷார்ட்கட் கீகளை உபயோகிக்காமல், மெளசின் வலது கிளிக் context menu வை பயன்படுத்தியும் தமிழ் தட்டச்சு செய்யலாம்.





தமிழ்விசையிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கும் மாற்ற F9 கீயை உபயோகிக்கவும்.

கருத்துரையிடுக