தமிழ் பிடிஎப் கோப்புகளை வேர்டுக்கு மாற்ற.....


தமிழ் நூல்கள் பலவும் இன்று பிடிஎப் வடிவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல்லாயிரம் பக்கங்களை ஒரே புள்ளியில் அடக்கிவிடுவதாலும், எழுத்துருச் சிக்கலின்றி இருப்பதாலும் இம்முறை மிகுதியான பயன்பாட்டுக்கு வந்துள்ளது.


தமிழ் பிடிஎப் கோப்புகளை வேர்டு முறைக்கு மாற்றுவதைப்பற்றி சென்ற இடுகையில் தமிழில் பிடிஎப் செய்யலாம் ( இவ்வலைப்பதிவில் இணையதள தொழில் நுட்பம் என்னும் பிரிவில் உள்ளது)
என்ற தலைப்பில் கண்டோம்.

இந்தக்கட்டுரையில் தமிழ்ப் பிடிஎப் கோப்புகளை வேர்டு வடிவில் மாற்றுவது பற்றி காண்போம்.

வழிமுறை - 1 

கூகுளில் சென்று பிடிஎப் 2 வேர்டு என்று தேடினால் பல இணையதளங்களின் முகவரிகள் கிடைக்கும். அவற்றுள் இலவசமான சேவை வழங்கும் இணையதளங்களைத் தேடிப் பெற வேண்டும். அப்படி ஒரு இலவச சேவை வழங்கும் இணையமாக, 
http://hellopdf.com/download.php/


இவ்விணையத்தைக் குறிப்பிடலாம்.

இவ்விணையதளத்திற்குச் சென்று பதிவிறக்க முற்பட்டால் மூன்று பதிவிறக்க முகவரிகள் கிடைக்கும். மூன்றில் எதில் வேண்டுமானாலும் பதிவிறக்கிக் கொள்ளலாம். பதிவிறக்கிய பின்பு, அதனை நம் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். அப்போது கீழே உள்ளது போல ஒரு பக்கம் தோற்றமளிக்கும்.




இதில் இடது புறமுள்ள பட்டியலில் பிரௌசிங் செய்து நாம் மாற்றம் செய்ய வேண்டிய பிடிஎப் கோப்பினைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு கீழுள்ள பகுதியில் கன்வர்ட் டு வேர்டு என்பதை சொடுக்கினால் நம் கோப்பு மாற்றம் செய்யப்பட்டு திறக்கும். அதனை சேமித்துக் கொள்ளலாம். இம்முறையில் மாற்றம் செய்யும் போது, இன்னொரு சிக்கலும் ஏற்படும். மாற்றம் செய்த வேர்டு கோப்பின் எழுத்துருவில் தான் அக் கோப்பினைப் பயன்படுத்த முடியும். அந்த எழுத்துரு நம்மிடம் இருந்தால் அவ்வெழுத்துரு வாயிலாகவே பயன்படுத்திக் கொள்ளலாம் மாறாக அவ்வெழுத்துரு இல்லாத நிலையில் பொங்குதமிழ் எழுத்துரு 
(http://www.suratha.com/reader.htm) வாயிலாக நமக்குத் தேவையான எழுத்துருவாக மாற்றியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.







வழிமுறை - 2

நாம் வேர்டாக மாற்ற வேண்டிய பிடிஎப் கோப்பினைத் திறந்து கொள்ளவேண்டும். அதில் I போன்ற வடிவத்தில் உள்ள செலக்ட் டூலின் வாயிலாக நாம் வேர்டாக மாற்ற வேண்டிய பக்கங்களைக் காப்பி செய்து கொண்டு அதனை பொங்கு தமிழ்  எழுத்துரு மாற்றி வாயிலாக மாற்றி, பின் அதனைப் புதிய வேர்டு கோப்பாகச் சேமித்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்

கருத்துரையிடுக