இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற..

 நீண்ட காலமாக இருந்த சிக்கல் யுனிகோடு முறை வாயிலாக நீங்கியது. விண்டோஸ் 2000, மற்றும் எக்ஸ்.பி இயங்குதளங்களில் யுனிகோடு எவ்வித சிக்கலுமின்றி இயங்குகிறது. இவ்வியங்குதளங்களில் சில நேரங்களில் யுனிகோடு சரியாக இயங்காமல் உள்ளது. இச்சூழலில் லதா எழுத்துருவை 
நிறுவினால் இச்சிக்கல் தீர்ந்து விடுகிறது.

புதிதாக வலைப்பதிவு எழுதுவோர் எந்த எழுத்துருவைப் பயன்படுத்துவது?
எந்த எழுத்துரு மென்பொருளைப் பயன்படுத்துவது
?

என்ற கேள்விக்கு பெரும்பாலோனவர்களின் பதில் என்.எச்.எம் என்பதாகவே இருக்கும்.

ஆம்...
என்.எச்.எம் என்னும் தளத்துக்குச் சென்று என்.எச்.எம் ரைட்டரை பதிவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். கணினியை ரீ ஸ்டார்ட் செய்தவுடன். கணினித் திரையில் வலது கீழ் பகுதியில் மணி போன்ற வடிவம் தோன்றும். அதனை அழுத்தினால் ஐந்து எழுத்துரு முறைகள் தோன்றும். 




இதில் முறையான தட்டச்சுமுறை, தமிங்கில முறை, பாமினி ஒருங்குறி முறை ஆகியனவும் அடங்கும்...
இவற்றில் ஒரு முறையைப் பின்பற்றி வலைப்பதிவில் சுலபமாக எழுதலாம்..



அதில் ஒவ்வொரு எழுத்துரு முறையிலும் எவ்வாறு எழுத்துருக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை திரையின் வலது கீழ்ப்பகுதியில் உள்ள மணியை வலது பக்கம் சொடுக்கினால் ஆன்ஸ்கிரின் கீ போர்டு தெரியும் அதனைப் பின்பற்றினால் எளிய முறையில் தட்டச்சிட்டுப் பழகலாம்.


இதன் தனிப்பட்ட சிறப்பு.........
வலைப்பதிவு எழுதுதல், மின்னஞ்சல், தேடுதல் என எல்லா நிலைகளிலும் இம்மென்பொருள் பேருதவியாக உள்ளது.
இணைய இணைப்பின்றி எழுத்துருக்களை மாற்ற...



• என்.எச்.எம், அழகி போன்ற யுனிகோடு மென்பொருள்கள் வந்த பின்னர் எழுத்துருச் சிக்கல் ஓரளவுக்குத் தீர்ந்தது.
இதற்கு முன்னர் பலரும் பொங்குதமிழ் போன்ற எழுத்துரு மாற்றிகளையே நம்பி வந்தனர்....


சாதாரணமான எழுத்துருக்களில் நம் வேர்டு கோப்புகளை உருவாக்கிய பின்னர், 
அதனைக் காப்பி செய்து பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியில் இட்டு யுனிகோடு முறைக்கு மாற்றி அதனைக் காப்பி செய்து நம் வலைப்பதிவுகளிலும் மின்னஞ்சல்களிலும் பயன்படுத்தி வந்தோம்..... பயன்படுத்தி வருகிறோம்..

• தமிழ்ப் பிடிஎப் கோப்புகளை இணைய இணைப்பின்றி மாற்ற...பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி சாதாரணமான எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றவும் – யுனிகோடு எழுத்துருக்களை சாரணமான எழுத்துருக்களாக மாற்றவும் பயன்பட்டு வருவது யாவரும் அறிந்ததே....

எனது நண்பர் ...............
இணைய இணைப்பின்றி பிடிஎப் கோப்புகளை மாற்ற வேண்டும் என்றார் நானும் இந்த மென்பொருளைக் கூறினேன்...
அவர் பொங்குதமிழையே இணைய இணைப்பின்றிபப் பயன்படுத்தலாமா...?

என்று கேட்டார்.....

நானும் அத்தளத்தில் தேடிப்பார்த்தபோது அதற்கு வழி இருந்தது அறிந்து மகிழ்ந்தேன்.....

மிக எளிய வழியில் பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியை நம் கணினியில் சேமித்துக்கொள்வதால் இது சாத்தியமாகிறது...

வழிமுறை....

முதலில்

பொங்குதமிழ் இணையதளத்துக்குச் செல்லவும்..




படத்தில் உள்ளது போல (பைல் – சென்று சேவ் அஸ்) செய்து சேமித்துக் கொள்ளவும். 
அவ்வளவு தான் இனி இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்க முடியும்...

இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் பிடிஎப் கோப்புக்களை எழுத்துரு மாற்றிக் கொள்ளமுடியும்....

கருத்துரையிடுக