அறிவே பெறினும் - அவை
கடலில் சென்மின் கைத்தேல் காண் .
சரசே ! கேளும - எம்ம
மனம் கிணற்றில் தவழும் குடுவை யாம் .
தொழுதே உன்னை பூசை செய்தேன்
தீர்த்தக் கல்வி தெளித்தே ! - குரவி !
என்னே இது மந்திரித்து விட்டுதியோ ?
நன்று செய்தனை ! - நாளும்
இனிவில் நனைத்து மயக்கம் தந்தனை !
ஆயினும் ஒரு குறை உண்டினை கேளுதி கன்னி !
நிழல் அடி ஆறும் சோம்பலன்ன - இவ்வனே மதியில்
கொள்ளு இருளை கொன்பதை மறந்தே
கூறடி சரசே ! - என்னை
சேறிடை கிடப்ப என்றினையோ ?
பிச்சையும் உன் கொடை - இற்றை
இச்சையும் உன் பிழை
பிடிங்கி எடுக்கும் அரிப்பு - நீ
நெஞ்சில் தந்த குறுகுறுப்பு
வினை செய்தனை ; விளைவும் உமக்கே !
துணிந்தேன் இங்கொரு கவி செயும் துணிவே
பணிந்தேன் கை கொடுத்தெனை மீட்பையோ ?
சொன்மே !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக