"Freemium" கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அது வேறு ஒன்றும் இல்லீங்க. Free + Premium = Freemium.
இந்த புதிய வார்த்தை Web 2.0 கம்பெனிகளின் தாரக மந்திரமாக திகழ்ந்து வருகிறது.
அடிப்படை வசதிகளை இலவசமாகவும், மற்ற சிறப்பு/அதிக/விரும்பத்தக்க வசதிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தும் நடத்தப்படும் ஒரு Business Model-தான் இந்த Freemium.
இதற்கு பல உதாரணங்களை காட்டலாம். எளிதான ஒன்று இதோ.
Box.net வலைத் தளத்தில் 1 GB வரை இலவசமாக ஃபைல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். 1 GB-க்கு மேல் இடம் தேவை என்றால் பணம் கொடுக்க வேண்டும்.
நண்பர்களோடு அரட்டை அடிக்கும்போது “அது Freemium வெப்சைட்டுன்னு சொன்னாங்களே! ” என்று ஒரு பிட்டு போட்டு அவங்களை குழப்பி, கொஞ்ச நேரம் ரசிக்கலாம். அதுதான் என் ஸ்டைல்.
ஓபெரா (Opera ) இலவச இணைய உலாவியின் Version 10 வெளியாகி உள்ளது. Extension எதுவும் தேவைப்படாத அளவுக்கு நிறைய வசதிகளை உலாவியிலேயே (Browser) சேர்த்து இருக்கிறார்கள். Visual Tabs வசதியை கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இது விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல இயங்குதளங்களுக்கும் (Operating Systems) கிடைக்கிறது. டவுன்லோட் சுட்டி.
ஆகஸ்ட் 2009-ல் எடுத்த கணக்குப்படி இணைய உலாவிகளின் (Web Browser) பங்குச் சந்தை விகிதம்
ஓபெரா சுமார் 2%
கூகிள் குரோம் சுமார் 3 %
ஆப்பிள் சஃபாரி சுமார் 4 %
மொஸில்லா
ஃபயர்ஃபாக்ஸ் சுமார் 24%
மைக்ரோசாஃப்ட்
இன்டெர்நெட்
எக்ஸ்ப்ளோரர் சுமார் 67%
கூகிள் குரோம் உலாவியை வெளியிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரே வருஷத்தில் வெர்ஷன் 3-க்கு தூக்கிகிட்டு போயிட்டாங்க. மற்றபடி என்னத்த சொல்ல?
லினக்ஸ், மேக் (Apple Mac) வெர்ஷன் இன்னும் வரவில்லை. ஃபயர்ஃபாக்ஸில் இருக்கும் Add-on/Extension வசதி இன்னும் இதில் வரவில்லை.
ஃபயர்ஃபாக்சுக்கு இணையாக வரவே ரொம்ப நாளாகும் போல இருக்கிறது.
அமிதாப் பச்சனுக்கு Big B-ன்னு செல்லப்பேர்.
அப்போ நம்ம கூகிளுக்கு என்ன செல்லப்பேர் வைக்கலாம்.
Big G
கருத்துரையிடுக
கருத்துரையிடுக