குழந்தைகள் கணினி விளையாட்டு - உலக கணித தினம் மார்ச் 4ம் தேதி


உலக கணித தினம் 4ம் தேதி மார்ச் மாதம் நடைபெற இருக்கின்றது. இதற்காக ஒர் இணையத்தளம். அதில் பள்ளி குழந்தைகள் கணினி மூலம் கணித விளையாட்டு விளையாடி வெற்றி பெற ஓர் அறிய வாய்ப்பு காத்திருக்கின்றது.

நீங்கள் இதில் பங்கு பெற ரிஜிஸ்டர் செய்யவேண்டும். அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
எவ்வாறு ரிஜிஸ்டர் செய்வது ?
http://www.worldmathday.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று மெனு பாரில் உள்ள ரிஜிஸ்டர் என்ற பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்து பள்ளிக்கூடம் சார்பாக உங்கள் மாணவர்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய ஸ்கூல் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டணை கிளிக் செய்யவும். நீங்கள் தனி நபராக ரிஜிஸ்டர் செய்ய ஹோம் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
clip_image002
பின்னர் உங்களுடைய நாடு, வயது, பெயர், மின் அஞ்சல் முகவரி, மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேட்) விபரத்தை பூர்த்தி செய்யவும் பின்னர் நீங்கள் 13 வயதுக்கு மேற்பட்டவரா அல்லது கீழ் பட்டவரா என்பதை தேர்வு செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும்.
clip_image004
எவ்வாறு லாகின் செய்வது?
பின்னர் நீங்கள் குறிப்பிட்ட மின்அஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விபரத்தை சரிபார்க்க மின்அஞ்சல் வரும். மின்அஞ்சலில் உள்ள கிளிக்ஹியர் என்ற லிங்கை கிளிக் செய்யவும். கணினி http://www.worldmathday.com/ சென்று உங்கள் அக்கௌன்ட்டை ஆக்டிவேட் செய்யும். அவ்வளவுதான் உங்கள் அக்கௌன்ட் ரெடி. உங்கள் கணினி திரையில் உங்களுடைய யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தெரியும். அதைவைத்து clip_image006வளைப்பக்கத்தில் உள்ள சைன் இன் என்ற பட்டனை கிளிக் செய்து யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தந்து நீங்கள் விளையாட வேண்டியது தான்.
கன்ரோல் போடின் பயன்பாடு?
நீங்கள் லாக்கின் செய்தவுடன் உங்களுடைய விபரம். அதாவது, நீங்கள் (முன்பு விளையாடி இருந்தால்) அதிகம் பெற்ற மதிப்பெண், சரியான பதில்கள் எத்தனை, சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு, வேகமாக மற்றும் சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு மற்றும் இதுவரை விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனை என்ற விபரம் தெரியும்.
clip_image008
எவ்வாறு விளையாடுவது?
clip_image010வளைத்தளத்தின் வலது பக்கத்தில் (கீழ் விளக்கப்படம்) உள்ள என்டர் கேம் என்ற அய்கானை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன் கணினி தற்போது உலகின் மற்ற பகுதியில் உள்ள  விளையாட்டு நண்பர்களை தானாக (ரேண்டம் முறையில்) தேர்வு செய்து (நான்கு நபர்கள்) உங்கள் கண் முன் நிறுத்தி உங்களுடன் விளையாட வைக்கும்.
clip_image012
சரியாக ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை கணக்குக்கு சரியாக விடை செய்கின்றீர்கள் என்பது தான் போட்டி…
குறிப்பு- சில சமயம் கணக்கில் கூட்டல், கழித்தல் அல்லது இரண்டும் சேர்ந்து இருக்கும். கவனம் தேவை.
clip_image014
இதில் கவனிக்க வேண்டியது, நீங்கள் மூன்று (3) தவறான விடை தந்தால் விளையாட்டை விட்டு நீக்கப்படுவீர்கள்.
clip_image016
ஆட்டம் முடிந்தவுடன் உங்களுடைய வெற்றி விபரம் தரப்படும் .
நன்றாக இருக்கின்றதே என்று நீங்கள் மீண்டும் விளையாட நினைத்தால் பிளே எகைன் என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
சரி இதனால் என்ன பயன் ?
பரிசு மற்றும் சர்ட்டிபிகேட் வழங்கப்படுகின்றது….. இவை மட்டுமா?
இந்த போட்டியின் மூலம் உங்கள் குழந்தைக்கு மனிதனுக்கே உரித்தான தொடு உணர்ச்சி, பார்வை, கேட்டல் மற்றும் பகுத்தறிவு என அனைத்து பாகங்களும் ஒன்று இணைந்து வேகமாக செயல்படுவதால், இந்த அவசர உலகத்தில் ஈடு கொடுத்து வருங்காலத்தில் வெற்றி பெற இப்பயிற்சி உதவியாக இருக்கும். மேலும் பள்ளி கணக்கு பாடத்தை மிக வேகமாக தப்பு இல்லாமல் செய்ய உதவும், மேலும் கணினியின் மீது ஆர்வம் எற்படும் என்பதில் ஐயமில்லை…
உங்களுக்கு இச்செய்தி பயனுள்ளதாக கருதினால் உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்

கருத்துரையிடுக