How to Backup my Blogger

ஒவ்வொரு பேரும் தங்களுடைய எண்ணங்கள் ஆசைகள், இச்சைகள் அவர்களுடைய அபிப்பிராயங்கள் மற்றும் சிறிய, பெரிய தேவைகளுக்காகவும் தங்களை பலர் அறிந்து வேண்டுமென்றும் தங்களுடைய திறமைகள், ஆளுமைகள் என்பவற்றை பிறரிடம் தெரிவித்து அவர்களின் வாழ்த்துக்கள் அவர்களின் மன எழுச்சிகளை பகிர்ந்து கொண்டு தாங்களும் அதில் சந்தோஷப்படும் அளவுக்கு வுளோக்கர் அதிகமான வாசகர் மத்தியில் பிரபலமடைந்துள்ளது எனலாம். 
இன்றும் நாம் பார்ப்பது இந்த வுளோக்கர் தொடர்பான விடயம் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு சேகரித்த பற்பல தகவல்கள் யாராவது ஒருவரால் அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் இழந்து போனால் அந்தக்கவலை எங்களை நிச்சயமாக ஒரு விடாது தினம் தினம் எங்களை யோசிக்கத் துாண்டும் 

எனவே தான் இன்றைய எனது பதிப்பு இவ்வாறு நடாந்தாலும் எமது வுளோக்கரை நாங்கள் மீட்டுக் கொள்ள முடியும். அதற்கான வேக்கப் தொடர்பாக நாம் இப்போது பார்ப்போம்.
 வாய்ப்பு -1
இந்த சிறிய மென்பொருள் கருவியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு இதனை திறந்து, 
இங்கு தரவிறக்க 
 
  இங்கு காணப்படும்.................
Available Blogs என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Add/Update/Remove blog என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
இனி Log into Blogger to get and add your blogs டேபில் உங்கள் பிளாக்கர் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்யுங்கள். அல்லது OR Manually add or edit a Blogger blog டேபை க்ளிக் செய்யுங்கள். (நான் கீழே உள்ள விளக்கப் படங்களில் இரண்டாவது முறையை கொடுத்துள்ளேன்.) 
 

அடுத்ததாக வழியில்Blog Title/Name, Blogger Blog URL ஆகியவற்றை கொடுங்கள், Blogger Feed URL தெரிந்தால் கொடுங்கள், இல்லையெனில் Get Feed URL பட்டனை அழுத்தி பெற்றுக்கொண்டு, Add/Update Blog பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
 

உங்கள் முன் இனி காட்சியளிப்பது  உங்கள் ப்ளாக் விவரங்களை காட்டும், இதில், உங்கள் வன்தட்டில் எந்த ட்ரைவில் உள்ள ஃபோல்டரில்  சேமிக்க வேண்டும் என்பதை கொடுங்கள். மேலும் பின்னூட்டங்களை சேமிக்க வேண்டுமெனில், Save Comments check box ஐ டிக் செய்யுங்கள். இப்படி சேமிக்கும் இடுகைகளை ஒரே கோப்பில் சேமிக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு இடுகைக்கும் ஒவ்வொரு கோப்பை உருவாக்க வேண்டுமா என்பதை Save posts as format என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலதிக விவரங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டு Backup posts என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 


இப்பொழுது உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இடுகைகளும், பின்னூட்டங்களும் Backup ஆக துவங்கும். இது அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை, எனது பிளாக்கில் 240 க்கு மேற்பட்ட இடுகைகளை Backup எடுக்க ஐந்து நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. 

 
இப்படி பேக்கப் எடுக்கும் பொழுது உங்கள் ஒவ்வொரு இடுகைகளும் ஒவ்வொரு XML கோப்புகளாக உங்கள் கணினியில் சேமிக்கப் படுகிறது. 


இனி என்ன கவலை உங்களுக்கு நீங்கள் வேலையைப்பாருங்கள் இது போனால் என்ன நாங்கள் இது போல் பல உருவாக்க முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு வர வேண்டும்.
வாய்ப்பு - 2
இது போன்று இன்னும் மொரு வேக்கப் செய்வது தொடர்பாக நாங்கள் இப்போது  பார்ப்போம்.
 
இதனை இப்போது எனக்கு நேரம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் அடுத்த பதிவில் நாங்கள் பார்க்கலாம்.
நன்றி 







கருத்துரையிடுக