30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்ததின் போது எந்த விதமான தீர்வு திட்டத்தையும் முன் வைக்காத சிங்களத் தலைமை. அதற்காக அவர்கள் கூறிய காரணங்கள் பெருபாண்மை பலத்துடன் நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லை என்பது. இன்று இலங்கையில் சார்வதிகார ஆட்சியை பெருகூட்டும் முயற்சிக்கு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கும் துரஷ்டமான நிலைமைகள் காணப்படும் சூழ்நிலையில் சிறுபாண்மை மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டே கொண்டு இருக்கும் தவிர ஒரு காலமும் அவர்களுக்கு விமோசனம் கிடைக்காது.
இன்று இலங்கை அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 18வது திருத்தம் ஒரு அதிகார வெறிகொண்டு அராஜகத்துடன் ஆளத்துடிக்கும் ஒரு சர்திகார தலைமைக்கு இன்னும் சாதகமான நேரத்தினை எதிர்கட்சி உறுப்பினர்கள்இ மற்றும் சிறுபான்மையினரும் உரமூட்டும் அதிசயம் தான் என்ன?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் இன்று தனது உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் கடந்த சில வார காலமாகவே இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம்18 ஆவது அரசி யலமைப்பு திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இலகுவாக வெற்றிகொள்வோம் என்று ஒருபுறம் சூளுரைத்துள்ள அதேவேளைஇ அதற்கு தமது பலமான எதிர்ப்பினை வெளிப்படுத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில்இ அரசியல் அமைப்பின் 18 ஆவது திருத்தம் அரசியல் அமைப்புக்கு அமைவாகவே கொண்டுவரப்படுவதாகவும் எனவே சர்வஜனவாக்கெடுப்பு நடத்ததேவையில்லை என்றும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அரசாங்கம் கொண்டுவரும் இத்திருத்தம் தொடர்பில் தனது நியாயப்பாட்டை எடுத்துக் கூறிவருகின்றது. அதாவதுஇ உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.க. ஏலவே ஆதரவு தெவித்திருந்தது. அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியும் இணக்கம் தெவித்திருந்தது. எனவேஇ இது திடீரென கொண்டுவரப்பட்ட விடயமல்ல. 18 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் சர்வாதிகாரி போன்று எதேச்சாதிகாரம் கொண்டு நடப்பதை தவிர்ப்பதுடன் மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக் கூறவேண்டியவராக நடப்பார்.
அது மாத்திரமன்றிஇ ஜனாதிபதி பதவியை இரண்டு தடவை வகித்த ஒருவர் மூன்றாவது தடவை அப்பதவியை வகிக்க வேண்டுமென மக்கள் விரும்பினால்இ அரசியலமைப்பு அதற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் அது நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைந்து விடும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளைஇ உறுதிமொழிகளும் மக்கள் ஆணையும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்இ நிறைவேற்று அதிகாரத்தை நீடித்துக்கொள்ளும் அதிகாரங்களை அதிகத்துக் கொள்வதற்குமான தார்மீக உரிமை ஜனாதிபதிக்கோ அவரது அரசாங்கத்துக்கோ கிடை யாது. தவறான அரசியலமைப்பு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் திருத்தத்திற்கு எதிராகவே வாக்களிக்கும். இதற்கான தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெவித்துள்ளார்.
அத்துடன்இ அரசினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியல் திருத்த யோசனை பாராளு மன்றத்தையே அகௌரவப்படுத்துகின்றது. உத்தேச திருத்தச் சட்டத்தின் மூலம் சகல அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொள்வதற்கே ஜனாதிபதி முயற்சிக்கிறார் என்றும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதேவேளைஇ அரசாங்கம் கொண்டுவரும் திருத்தமானது இந்த நாட்டை படுகுழியில் தள்ளுவதற்கு வழிவகுக்கும் என ஐ.தே.க. மேலும் கண்டனம் தெவித்திருந்ததுடன்இ இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என கோக்கையையும் விடுத்திருந்தது.
இந்நிலையில்இ ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை வெகுவாகக் கண்டித்துள்ளார். அரசாங்கம் கொண்டுவர உள்ள 18 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் 17 ஆவது அரசியலமைப்பு திருத் தங்களை இல்லாதொழித்துள்ளதுடன்இ எதிர்காலத்தில் நாட்டில் நீதி நியாயம் எதனையும் எதிர்பார்க்க முடியாத நிலைமையை தோற்றுவித்துள்ளது. யுத்தத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியையும் அகௌரவப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
இவற்றுக்கு மத்தியில் சிறுபான்மை அரசியல் கட்சிகள் இது தொடர்பான எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அரசுடன் இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகள் அரசின் நடவடிக்கைகளுக்கு சாதகமான போக்கை கொண்டுள்ள அதேவேளைஇ அரசாங்கத்துடன் இணையும் நோக்கத்துடன் இருக்கும் கட்சிகள் இதற்கு சாதகமான அணு குறையை கடைப்பிடிக்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த மட்டில் அரசின் உத்தேச திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் என அக்கட்சியின் உயர்பீடம் அண்மையில் தெவித்திருந்தது. இதற்கமைய அதன் எட்டு உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இவற்றுக்கு மத்தியில்இ 18 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெவித்திருக்கிறார். கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
18 ஆவது திருத்தமானதுஇ 17 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்திருப்பது மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அதிகாரப்பகிர்வு மற்றும் அரசியல் திருத்தத்தையும் இல்லாது செய்துள்ளது. எனவேஇ 13 ஆவது திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தவர்கள் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதுடன்இ 18 ஆவது திருத்தம் குறித்து எமது கட்சியின் உயர் குழு விரிவாக ஆராய்ந்ததில் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு சாதகமாக இல்லை. அனைத்தும் விரோதமாகவே இருக்கின்றன என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.
இவ்வாறானதோர் பின்னணியில் அரசாங்கம் 18 ஆவது திருத்தச் சட்டத்தை சபையில் நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பது அவசியமாகும். அந்த வகையில்இ எதிர்த்தரப்பிலிருந்து ஏலவே கட்சிதாவிய மற்றும் அர சுக்கு ஆதரவளிப்போர் என பத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
தேர்தலில் அரசாங்கம் 144 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. இந்நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரபா கணேசனும்இதொழிலாளர் தேசிய ன்னணியின் திகாம்பரம் அரசுடன் இணைந்துகொண்ட நிலையில் ஆளுந்தரப்பின் பலம் 146 ஆக அதிகத்துள்ளது. இந்நிலையில்இ ஆளுந்தரப்பிலுள்ள இடதுசாகளான வாசுதேவ நாணயக்காரஇ திஸ்ஸ விதாரணஇ டியூ குணசேகர போன்றோர் இவ் யோசனைக்கு முழுமையான ஆதரவை தெவிக்காத போதிலும்இ அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான எட்டுப் பேரும் ஐ.தே.க வின் கண்டி மாவட்ட எம்.பி. யான ஏ.ஆர்.எம்.ஏ. காதரும் அத்துடன் இவ் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஐ.தே.க. விலுள்ள லக்ஷ்மன் செனவிரத்னஇ ஏர்ல் குணசேகரஇ மனுஷ நாண யக்காரஇ நில்வள விஜயசிங்க ஆகிய நால்வரும் இந்த திருத்ததுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எந்தவகையில் பார்த்தாலும் அரசாங்கம் தனது யோசனைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளும் பலத்தைஇ அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட மற்றும் கட்சி மாறிய எதிர்க்கட்சி உறுப்பினர்க ளே வழங்கியுள்ளனர். அந்தவகையில் எதிர்க்கட்சிகள் மிகவும் பல வீனமான நிலையிலுள்ளன என்பது வெளிப்படையானது. இந்த நிலையில்இஅரசியலமைப்பு திருத்தம் உட்பட தனது திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்ல சாதகமான சூழ்நிலையையே அரசு கொண்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் ஓர் பதிவாக மட்டுமே இருக்கப் போகின்றன என்பது ஒருசாரான் கருத்தாகவுள்ளது.
எந்தவகையில் பார்த்தாலும் அரசாங்கம் தனது யோசனைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளும் பலத்தைஇ அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட மற்றும் கட்சி மாறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களே வழங்கியுள்ளனர். அந்தவகையில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமான நிலையிலுள்ளன என்பது வெளிப்படையானது.இந்த நிலையில்இஅரசியலமைப்பு திருத்தம் உட்பட தனது திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்ல சாதகமான சூழ்நிலையையே அரசு கொண்டுள்ளது. இவ்வாறானபின்னணியில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் ஓர் பதிவாக மட்டுமே இருக்கப் போகின்றன என்பது ஒருசாரான் கருத்தாகவுள்ளது.
நன்றி வீரகேசரி
கருத்துரையிடுக
கருத்துரையிடுக