இலங்கையில் மக்கள் எதிர்நோக்கும் டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் இப்போது இலங்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாவோன் தொகை நாளுக்கு நாள் அதிகத்துவருவதோடு, இக் காய்ச்சல் காரணமாக உயிழப்போர் தொகையும் படிப்படியாக அதிகத்துக் கொண்டு செல்வது மனவேதனை தருகின்றது எனலாம். டெங்கு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், இவ் வேலைத் திட்டங்கள் பூரண வெற்றியளிக்காததன் காரணமாக மீண்டும் மீண்டும் டெங்கு காய்ச்சல் நாட்டில் தலைதூக்குவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. காலத்துக்குக் காலம் உலக நாடுகளில் பல் வேறுபட்ட நோய்கள் தோன்றி மறைகின்றன.

இந்த வகையில்,மலேயாரியா காய்ச்சல் ஒரு காலத்தில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இதன் காரணமாக உலக நாடுகளில் சில அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இலங்கையும் ஒரு காலத்தில் மலேயா காய்ச்சல் அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



பன்றிக் காய்ச்சல், கொலரா, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் குறித்தும் அண்மைக் காலத்தில் மக்களின் கவனம் திரும்பி இருந்தது. இதனோடு பறவைக் காய்ச்சல் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கும் நாட்டு மக்கள் உள்ளாகி இருந்தனர். இவ்வாறாக காலத்துக்கு காலம் தலைதூக்கும் நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, டெங்கு காய்ச்சலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்பது மிகவும் சிரமமான காயமாக உள்ளது.



வத்தளை சுகாதார வைத்திய அதிகாயின் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 40ஆயிரம் பேர் முதலாவது தடவை டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிர் வாழ்வதாக தெவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மே மாதம் வரை இவ் வருடத்தில் 294பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்த வத்தளைப் பிவில் நான்கு பேர் மரணமடைந் துள்ளதாகவும் புள்ளி விபரங்களின் வாயிலமாக அறிய முடிகின்றது.



இதேவேளை, மேல் மாகாண சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககே கருத்து தெவிக்கை யில், வத்தளை பிரதேச செயலாளர் பிவில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவிவருவதாக வும் இதனை கட்டுப்படுத்த தாம் உய நடவ டிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்பதனையும் வலியுறுத்தி இருக்கின்றார்.



இதேவேளை, இவ் வருடத்தில் தலா ஐந்து மாத காலப்பகுதியில் ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாக்கு உட்பட்ட பிவில் 123 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதாகவும் இனங்காணப்படாதோன்றின் தொகை ஆயிரத்துக்கும் அதிகமாகுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி தொடக்கம் ஜூலை 31ஆம் திகதி வரையான இரு வாரக்காலப் பகுதியில் இப்பிரிவில் டெங்குநோயினை கட்டுப் படுத்துவது குறித்த விழிப்புணர்வு வேலைத் திட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பதுளை பிரதேசத்திலும் டெங்குநோயின் தீவிரம் அதிகத்துள்ளது.

டெங்கினால் பீடிக்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஹாலி எல சிங்கள தேசிய பாடசாலையின் மாணவன் எம்.எம். பசின்து கடந்த திங்கட் கிழமை (12.07.2010) உயிழந்துள்ளமை விச னத்துக்குயதாகும். அத்துடன் பதுளை பொது வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிவில் சிகிச்சை பெற்று வந்த வேளை சிகிச்சை பலனளிக்காது கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிழந்துள்ளமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், பலரும் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கொட்டாவ பகுதியில் நூற்றுக்கு 90சதவீத மான இடங்களில் டெங்குநோயை பரப்பக் கூடிய நுளம்புகள் உருவாவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக கவலை தெவிக்கப்படுகின்றது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு ருக்மணிதேவி மாவத்தையைச் சேர்ந்த மோனாஸ் ஜஹான் (வயது 21) என்ற இளம் யுவதி ஒருவரும் மரணமாகி இருந்தமை கடந்த ஜூன் மாதத்தில் இடம்பெற்ற ஒரு அம்சமாகும்.



பாடசாலை மாணவர்கள், ஆசியர்கள், வைத்தியர்கள், பொது மக்கள் என்று சகல தரப்பினரையும் டெங்குநோய் விட்டுவைக்க வில்லை. டெங்கு ஒழிப்பு தொடர்பாக அண்மை காலத்தில் நாடுபூராகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு வதனையும் அவதானிக்க முடிகின்றது.



நாட்டின் 25 மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மும்ரமாக இடம் பெற்று வருவதுடன் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் டெங்குதொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவதன அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வருட காலத்தில் 14ஆயிரம் பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டெங்குநோயினால் உலகில் இதுவரை 35ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுத்தம் மற்றும் சூழல் காமைத்துவம் இன் மையே டெங்கு நோய் பரவுவதற்கான பிர தான காரணமாகும் என்றும் பலிஹவதன மேலும் தெவிக்கின்றார்.



ஆசியாவில் தாய்லாந்தில் மட்டுமே இருந்த டெங்குநோய் தற்போது இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை என்று ழுழு ஆசிய நாடுகளையும் பாதித்துவருகின்றது. கிராமியப் பகுதி, நகர்ப் பகுதி பிரதேசங்கள் என்றில்லாமல் சகல பிரதேசங்களையும் பாதித்துள்ள இந் நோயை சுற்றுச் சூழல் துப்புரவின் லமே விரட்டியடிக்க டியும் என்பது வெளிப்படை.



டெங்கு ஒழிப்பு தொடர்பாக அரசு விசேட கவனம் செலுத்திவருகின்ற நிலையில் டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை நடைறைப்படுத்துவதில் அலட்சியம் காட்டும் அரச அதிகாரிகள், மக்கள் முன் அம்பலப்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சர் மைத்திபால சிறி சேன தெவித்துள்ளதோடு அமைச்சுகள் திணைக்களங்கள் அரச நிறுவனங்கள் அனைத்தும் டெங்கு ஒழிப்பு விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். டெங்கு ஒழிப்புக்கென இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளும் மாகாணத்துக்கு ஒன்று என்ற  ரீதியில் பகிர்ந்தளிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் துணை விதிகளை உருவாக்கி சுற்றாடலை டெங்கு நுளம்பு உருவாக்கத்துக்கு ஏதுவாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். உதயகுமார் அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தார்.



டெங்கினை ஒழிப்பதற்குரிய மருந்துவகைகளை நியூசிலாந்து கண்டுபிடித்திருப்பதாகவும் தெவிக்கப்படுகின்றது.



டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோ ன் தொகையும் மரணமடைவோன் எண்ணிக்கையும் அதிகத்துக் காணப்படுவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தாய்லாந்தில் இருந்து மருந்தை இறக்குமதி செய்வதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள தாகவும் மிக விரைவில் மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு நாட்டில் உள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சின் செய்திகள் தெவிக்கின்றன.



டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சையளிப்பதற்காகவே தாய்லாந்தில் இருந்து மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இறக்குமதி செய்யப்படவிருக்கின்ற மருந்துப் பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிவு அதிகாகள் தாய்லாந்துக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் சுகாதார அமைச்சின் செய்திகள் தெவிக்கின்றன.



இதேவேளை, டெங்கு தொடர்பாகவும் டெங்கு ஒழிப்பு தொடர்பாகவும் பேசப்படுகின்றதே தவிர முறையான வேலைத் திட்டங்கள் எதுவும் இல்லை என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர்.

காலத்துக்கு காலம் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து பேசுகின்றோம். இதனடிப்படை யில் மழைக் காலத்தில் வெள்ளம் மற்றும் டெங்குநோய் குறித்து பேசுகின்றோம்.

டெங்குநோய் பிரச்சினை இன்று தேசிய மட்ட பிரச்சினையாகி உள்ளது. எனினும் முறையான வேலைத் திட்டங்கள் எதுவும் இல்லை.

மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு நாம் முதலில் நமது வீட்டில் இருந்து இந்த டெங்கு ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிச்சைக்காரனின் காயத்தைப் போல என்றும் டெங்கு ஒழிப்பு பிரச்சினை தீராது. வெறுமனே பேசிக் கொண்டுதான் இருப்போம் என்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெவிக்கின்றார்.



டெங்குநோய் குறித்து வாராந்த பத்திரிகை ஒன்றை வெளியிடும் அளவுக்கு நோய் தொடர்பான செய்திகள் குவிந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளி வரும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு, இலங் கையின் தேசிய மலர் நீலோற்பலம். தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டம். இந்த வகையில் தேசிய நோய் என்ற பெயரை டெங்கு பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் மேலும் கருத்துகள் தெவிக்கப்பட்டு வருகின்றன.



எவ்வாறாயினும்,டெங்கு நாட்டின் நிகழ்காலத்தை மட்டுமன்றி எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி வருகின்ற நிலையில் அரசாங்கம் மட்டுமன்றி, ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து டெங்கு ஒழிப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்துதல் வேண்டும்.

நன்றி வீரகேசரி

கருத்துரையிடுக