ஆயுளை கூட்டும் அதிசய தக்காளி

மனிதனின் ஆரோக்கியத்தை அதிகப்படித்தி அவர்களின் ஆயுளை நீடிக்க முடியும் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தாலிய விவசாயிகள் இந்த வகையான ஒரு வகை தக்காளி கண்டுபிடித்துள்ளார்கள் என்பது குறிப்பித்தக்கது. சதுர வடிவிலான இந்த வகைத் தக்காளி மனிதர்கள் மூப்படைவதை தாமப்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது என இந்த விவசாயிகள் கூறுகின்றார்கள். மனிதனின் உடலை பாதிக்கக்கூடிய செல்லை தடுக்கக்கூடிய வல்லமையான இயற்க்கைச் சத்து இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தாலியில் இருக்கும் எமிலியா ரொமாக்கனா மற்றும் ரெம்பாடிக்கா பிரதேசங்களில் இதனை பயிரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இது மரபணு மாற்ற செய்யப்படாததும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தக்காளியில் லைக்கோபின் சிவப்பு நிற சத்தானது  மற்ற தக்காளியை விட இதில் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இந்த சிவப்பு சிற தக்காளியில் காணப்படும் மனித உடலில் காணப்படும் வேதிப் பொருள் மூப்படையும் வேகம் குறைக்கப்படுகிறது எனலாம். இந்தக் தக்காளியில் காணப்படும் லைக்கோபியின் சிவப்பு நிறப்பதாத்தம் மனிதனுக்கு ஏற்படும் புற்று நோய், இதய நோய் என்பவற்றைத் தடுக்கிறது அல்லது குறைக்கிறது எனலாம். பிரிட்டனில் உள்ள தொடர் அங்காடி ஒன்றும் இந்த வகையான தக்காளியை விற்பனை செய்கின்றது என்பதும் இன்றுமொரு தகவலாகும். தமிழ் இலக்கியத்தில் கரு நெல்லிக்கனி பற்றி குறிப்படப்படுகின்றது அது மனித ஆயுளைக் கூட்டுகின்றது என்ற விடயமும் உள்ளது அத்துடன் ஆதியமானுக்கு ஔவை பாட்டி ஊடாக வழங்கப்பட்டதாகவும் இதிகாச கதைகளில் வருகின்றது எனலாம். ஆனால் இப்போதய தக்காளிக்கும் அத்தகைய மகத்துவம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 
                   ஆரோக்கிய மற்ற ஆயுளை நீடிக்க பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூடிய ஆயுள் சுகத்தை விட சோகத்தையே வழங்கும் என்பது மற்றொரு எடுகோலாகும். மேன்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி முன்னேற்றங்கள், மேன்பட்ட சுகாதார வசதிகள், ஆரோக்கியமான வாழ்வதாரங்கள் உதாரணமாக ஜப்பானில் உள்ள மக்கள் சராசரியாக 81 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள் அத்துடன் பிரேஸில் மக்களின் ஆயுள் காலம் கடந்த 20 ஆண்டுகளில் 10 அண்டுகள் அதிகரிப்பட்டிருக்கிறது முக்கிய விடயமாகும் எனலாம்.  மனிதர்களின் மரபணு மூலம் அவர்களின் ஆயுளை அளவைக் கணிப்பிட  முடியும் என கூறப்படுகின்றது.  அதே சமயம் ஆண்களுடன் பெண்களை ஒப்பிடும் போது 4 அண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பதும் நிறுவிக்கப்பட்ட உண்மையாகும். இத்தகைய ஆயுள் காலம் என்பது சுமானதா அல்லது சுமையானதா என ஆய்வு செய்தவர்கள் இது சுமையானது என எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக  ஆண்களை விட பெண்களே வயது ஆக ஆக கூடுதலான நோய்களுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் கோடிட்டு காட்டுகின்றன.  பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தமான மருத்துவ ஆய்வின் முடிவிலின் படி பெண்களே கூடுதலாக பாதிக்கப்படுகின்றது எனலாம் அதற்காக 64 வயதை அடைந்த பெண்கள் ஆண்களை விட கூடுதலான பாதிப்புக்களாகின்றார்கள் அதாவது உடல் , உளவியியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்திருக்கின்றது எனலாம். 
    அது மாத்திரமல்லாமல் இவர்களின் பாலியல் நுகரும் தன்மையும் பாதிக்கபட்டிருக்கிறது  அத்துடன் ஆண்கள் நுகரும் பாலியல் இன்ப த்தை விட பெண்கள் குறைவாக நுகரும் தன்மையில் உள்ளார்கள் என்பது அடுத்த அதிர்ச்சி தரும் தகவலாகும்.  அதாவது ஆண்கள் பெண்களை விட ஐந்து ஆண்டுகள் கூடுதலாக நுகரும் தன்மையில் உள்ளார் என்று அமெரிக்காவில் நடாத்தப்பட்ட ஆய்வின் பலனாக கண்டரியப்பட்டுள்ளது.  இவ்வாறு நோக்குமாயின் பெண்கள் கூடுதலான ஆயுளுடன் இருந்தாலும் ஆண்களே அவற்றை அனுபவிக்கக் கூடிய ஆளுமையில் வாழ்கிறார்கள் என்பது தான் கண்டறியப்பட்ட உண்மையாகும். 
 
ஆயுளைக் கூட்டுவதற்காக பல்வேறுபட்ட மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டலும் அதற்கு மனிதர்களுடைய உடல்களும் ஒத்துழைக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. இதற்கான மரபணு மாற்றங்கள்  திபெத்தியர்கள்  வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சஞ்சிகைகள் தெரிவிக்கின்றன.  இந்த மரபணு மாற்றத்தின் வேகம் இதுனுடாக செயற்படுவதாக ஆய்வு செய்த அமெரிக்க மற்றும் சீனா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 தற்போது திபத்திய இனத்தவர்கள் என அழைக்கப்படும் சிலர் நாகரீகம் அடைந்த கடல் மட்டத்திலிருந்து மிக உயர்வான பிரதேசங்களில் வாழ்கிறார்கள் இவர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னராகும் . இவர்கள் இந்த உயரத்தில் இருப்பதனால் பொதுவாக கடல் மட்டத்தில் இருக்கும் ஒட்சிசனின் அளவு உயர்நத் பிரதேசத்தல் ஒட்சிசனின் அளவு 40 வீதத்ததை விட குறைவானதாகும்.  ஒட்சினையை நம்பி இருக்கும் மனித வாழ்க்கைக்கு இது உகந்தல்லாதவையாகும். இதனால் களைப்படைவதும் , தலைவலியினால் அவதியுறுவதும் இயல்பானது. இந்தளவு உயரமான பகுதிகளில் நிறை குறைந்த பிள்ளைகள் பிறப்பதும், சிசு இறப்பு வீதம் அதிகமாக காணப்படும் இங்கு விசேட அம்சமாகும் எனலாம். ஆனால் உயரமான பிரதேசத்தில் வசிக்கும் திபத்திய மக்கள் 30 பரினாமங்களை கடந்து வளர்ச்சியடைந்துள்ளனர் மனித கூர்ப்பு கொள்கையில் பரினாம வளர்ச்சி மிக குறுகிய கால எல்லையில் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது ஆச்சரியமான விடயமாகும். எமது மூதாதையர்களாக நோக்கப்படுகின்ற கோம சேவியன்ஸ் மனிதர்களாக கூர்ப்படைய கிட்டத்தட்ட ஒன்னறை லட்சம் வருடங்கள் தேவைப்பட்டன. இந்த திபத்திய இனத்தவர்களிடை ஏற்பட்டுள்ள மரபணு ரீதியான பரினாம வளர்ச்சிக்கட்டங்களில்  அரைவாசிக்கு கூடுதலானவை  மனித உடலில் ஒட்சினைத்தீர்மானிக்கும் மரபணுவிலே இடம் பெற்றுள்ளாதாக சையின் என்ற அறிவியல் சஞ்சிகை தெரிவிக்கின்றது. குறிப்பாக மனித உடலில் உள்ள  ஈபாஸ் - 1 மரபணுவில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.  இதுவே சிவப்பு நிற குருதிக்கலங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உடலில் உள்ள ஏனைய பாகங்களுக்கு ஒட்சிசனைக் கொண்டுசெல்லும்  கோமோ கொலபினின் செறிவை அதிகரிக்கவும் இது பயன்படுகின்றது. ஆய்வின் படி 90வீதமான திபத்தியர்களில் இந்த பரினாம வளர்ச்சி நிகழ்ந்துள்ளது ஆனால் 10 வீதமான ஹான்சினர்களிடம் மட்டுமே இந்த மாற்றத்தை அவதானிக்ககூடியதாகவுள்ளது. திபத்திய இனக்குழுவினர் இந்த கடல்மட்டத்திலிருந்து மிக உயர்வான இடத்தில் வாழப்பழகிக்கொண்டதற்கு அவர்களின் மரபணு ரீதியான இத்தகைய மாற்றமே முக்கிய காரணமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  

தகவல்கள் :BBC தமிழோசை 



 





1 கருத்துகள்

கருத்துரையிடுக