இணையத்தளங்களை விரும்பியவாறு பி.டி.எவ் வடிவில் சேமிக்க அல்லது பிரிண்ட் செய்வதற்கு

ஒர் இணையத்தளத்தின் குறிப்பிட்ட பக்கமொன்றை சேமிக்கவும் அல்லது பிரிண்ட் செய்யவேண்டிய சந்தர்ப்பம் வரும்போது அந்த பக்கத்தில் இருக்கும் விளம்பரங்கள் படங்கள் போன்றவற்றை தவிர்த்து விட்டு சேமிக்க விரும்புவீர்கள்.



இதை இலகுவாக செய்வது எப்படி? இதற்கு உதவி செய்கிறது Print what you like எனும் இணையத்தளம். இந்த தளத்தில் குறிப்பிட்ட பக்கத்தை தந்தால் படங்களை விளம்பரங்களை நீக்குவதற்குரிய ஆப்ஸன்களால் அவற்றை நீக்கி விட்டு நீங்கள் விரும்பும் வடிவத்தை மட்டும் பிரிண்ட் செய்ய அல்லது சேமிக்க முடிகிறது.







நீக்கப்படும் படங்கள் உள்ள இடைவெளிகளை அழகாக ஒழுங்கு படுத்தியும் தருவது சிறப்பம்சமாகும்.



இணையத்தள முகவரி http://www.printwhatyoulike.com/

கருத்துரையிடுக