மாயக்கண்ணாடியும் 4 மெஜிக்களும்

பொருட்காட்சியில் மாயக்கண்ணாடி பார்த்திருப்போம்
 அதைப்போல இந்த மாயக்கண்ணாடியில் உருவத்தை 
வேண்டிய அளவு மிக அழகுப்படுத்தலாம்.ஒருவரை அழகுப்
படுத்தி பழிவாங்க வேண்டுமானால் இந்த சாப்ட்வேரினைபயன்படுத்திவிதவிதமாகஅழகுபடுத்தி
பயன்படுத்தலாம்.முதலில் இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம்
 செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட 
விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உள்ள Warping கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு தாத்தா ஒருவர்படம் வரும். இதி்ல் கீழ்புறம் பார்த்தீர்களேயானால் ஒரு அம்புக்குறியிருக்கும். அதை கிளிக்செய்து உங்கள் கம்யூட்டரில் இருந்து -கிளிப் ஆர்ட்டிலிருந்து -வீடியோவில் இருந்து என ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது படத்ததில் வேண்டிய இடத்தில் கர்சரைவைத்து உங்கள் விருப்பபடி அதை இழுங்கள். படம் கர்சர் செல்லும் திசையில் ரப்பர் மாதிரி செல்வதை கவனியுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.




வேறு யாருடையதாவது போட்டால் அவர்களுக்கு மனம் சஞ்சலப்படும் என்று எனது படம் போட்டுள்ளேன். வேண்டிய அளவு அழகுபடுத்திவிட்டு இப்போது வலது மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக்செய்யுங்கள்.உங்கள் பைலை புகைப்படமாகவோ - வீடியோ பைலாகவோ சேமிக்கலாம். நான் வீடியோ பைலை சேமித்ததை கீழே காணலாம்.

அடுத்துள்ளது Morphing.இதில இரண்டு உருவங்களை ஒன்றிலிருந்து ஒன்று வருவது மாதிரி செட்செய்திடலாம். இரண்டு படங்களை திறந்து கொள்ளுங்கள். ஒரு படத்தில் மஞ்சள் புள்ளி வையுங்கள். அடுத்த படத்தில் பாருங்கள். அதை முன்புள்ள படத்தில் உள்ளவாறு வையுங்கள். உதாரணத்திற்கு முதல் படத்தில மூக்குக்கு மேல் பு்ள்ளி வைத்தீர்களே யானால் அடுத்த படத்திலும் மூக்குக்கு மேலே புள்ளி வையுங்கள்.அப்போதுதான மாறும் போது சரியாக வரும்.கீழே உள்ள படத்தை பாருங்கள். (இந்த போட்டோமார்பிங் சாப்ட்வேர் என்று தனியாக உள்ளது. அதை பற்றி நான் 100 ஆவது பதிவாக போட்டுள்ளேன். புதியவரகள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்) 

அடுத்துள்ளது Mirrors.இதில் நமது படத்தை கொண்டுவந்துவிட்டவுடன் நான்கு விதமான கண்ணாடிகள் பக்கத்தில இருக்கும். இதில் வேண்டிய கண்ணாடியை தேர்வு செய்து அதில் வேண்டிய அளவு கர்சரை நகர்த்த படம் அகோரவிகாரமாக மாறும். கீழே உள்ள படங்களை பாருங்கள்.

கேலிச்சித்திரங்கள் -கார்ட்டூன்கள் வரைய இதனை பயன்படுத்தலாம். 

கடைசியாக உள்ளது Blending. இதிலும் இரண்டு படங்களை தேர்வு செய்து கொண்டு பின்னர் இதில் உள்ள சிகப்பு வட்டத்தை வேண்டிய இடத்திற்கு நகர்த்துகங்கள். அதைப்போல நடுவில் உள்ள படத்தில் அந்த சிகப்பு வட்டம எந்த இடத்தில் உள்ளதோ அந்த இடத்தில் நடுவில் உள்ள படத்தில் கர்சரால் தேயுங்கள். இப்போது நடுவி்ல் உள்ள படம் மறைந்து உங்களுக்கு பக்கத்தில் உள்ள படம் வரும். செய்துபாருங்கள். வித்தியாசமாக இருக்கும்.
பயன்படு்த்தி பாருங்கள். கருததுக்களை சொல்லுஙகள்.
 பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன.

கருத்துரையிடுக