ஒரு ஊரில் உள்ள பெரிய பண்னையில் ஒரு குதிரையும், ஒரு கழுதையும் வாழ்ந்து வந்தன. அந்தப்பண்னை முதலாளி இவை இரண்டையும் மிக நேசித்தார். குதிரையை போரின் போது பயன்படுத்துவதற்காகவும், கழுதையை பண்னையில் வேலை செய்யவும் வளர்த்தார். கழுதையும் குதிரையும் நல்ல நண்பர்களாக இருந்தன. ஆனால் கழுதைக்கு எப்பொழுதும் குதிரை மேல் பொறாமை. ஏனென்றால் பண்னை முதலாளி கழுதையை விட குதிரையை நன்றாக கவனித்தார். நல்ல உணவளிப்பார். இக்கவனிப்புகள் கழுதை எவ்வளவுதான் கஸ்டப்பட்டு உழைத்தாலும் அதற்கு கிடைத்ததில்லை. "முதலாளி என்னிடம் நேர்மையாக இல்லை. நான் ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறேன். நான் மட்டும் கடுமையாகவும் உழைக்கிறேன். ஆனால் குதிரை அதன் லாயத்தி ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும். ஒவ்வொரு நாளும் குதிரையையே நன்றாக பார்க்கிறார் ஆனால் என்னை பார்ப்பதில்லை. நான் நினைக்கிறேன் முதலாளிக்கு என் மேல் பாசம் இல்லை போலும்." என்று கழுதை தனக்குள்ளே எண்ணிக்கொண்டது. அப்படி எண்ணிக்கொண்டு இருக்கையில் குதிரை அதனருகே வந்து "என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறாய் நண்பனே?" என்றது. அதற்கு கழுதை "நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன், எங்கள் முதலாளி உன்மேல்தான் அதிக அக்கறையும் பாசமும் வைத்திருக்கிறார். சிலநேரம் முதலாளி உன்னை நடத்தும்விதம் கண்டு பொறாமை கொள்வேன். என்று கூறியது. குதிரை இதைகேட்டு விட்டு மௌனமாக சென்றது. பின் ஒருநாள் அவ் நாட்டில் போர் வெடித்தது. எதிரிகள் அந்த நாட்டை தாக்கினார்கள். இந்தப் பண்னை முதலாளி தன் நாட்டுப் படையில் சேர்ந்தார். அவர் தன் குதிரையை ஓட்டிக்கொண்டு போர்க்கு புறப்பட்டுச் சென்றார். குதிரைமேல் அமர்ந்து முதலாளி போவதைக் கண்ட கழுதைக்கு அப்போதுதான் குதிரையின் வேலை புரிந்தது. அதன்பின்தான் குதிரையும், நாடு சமாதானம் அடைவதற்கு பாடுபடுகிறது, என்பது கழுதைக்கு தெரியவந்தது. "அவர்கள் இருவரும் பாதுகாப்பக வீடு திரும்ப வேண்டும்" என்று கூறிக்கொண்டது கழுதை. சில நாட்களுக்கு பின், குதிரையுடன் முதலாளி போரில் இருந்து திரும்பி வந்தார். குதிரையின் உடலில் பலத்த காயங்களைக் கண்ட கழுதைக்கு குதிரையை பார்க்க பாவமாக இருந்தது. "என்னை மன்னித்துவிடு நண்பா,உன் வேலை எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டேன். நான் உன்மேல் பொறாமை கொண்டதற்கு என்னை மன்னித்துவிடு" என்று கழுதை கூறியது. அன்றிலிருந்து கழுதை பொறாமையை விட்டொழிந்தது. மீண்டும் கழுதையும் குதிரையும் நல்ல நண்பர்கள் ஆகின, அத்துடன் ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருந்தன. நீதி: பொறாமை நட்புக்கு தீங்கு. |
கருத்துரையிடுக
கருத்துரையிடுக