Google Talk-ல் நாம் ஆன்லைனில் இருக்கும் போது ஒரு நண்பரிடம் பேச வேண்டி இருக்கும்.
ஆனால் அந்ந நண்பரோ, மற்றவர் தன்னை தொந்தரவு செய்யாமல் இருக்க Invisible ஆக இருப்பார்.
அவர் Invisible ஆக இருக்கிறாரா, இல்லையா என கண்டுபிடிக்க நான் பயன்படுத்தும் உத்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்,
ஆஃப்லைனில் இருக்கும் உங்கள் நண்பரின் சாட் விண்டோவை திறந்து படத்தில் உள்ளவாறு Go off the record தேர்வு செய்யவும்.
இப்பொழுது அவருக்கு ஒரு Instant Message அனுப்பவும்.
அவர் உண்மையிலேயே ஆப்லைனில் இருந்தால் .......@gmail.com is offline and can't receive messages right now. என்ற செய்தி சிவப்பு நிறத்தில் வரும். அவர் திரும்பவும் ஆன்லைனில் வரும்போது Off the record ஆன இருப்பதால் நீங்கள் அனுப்பும் Message அவருக்கு தெரியாது.
ஆனால் அவர் invisible ஆக இருந்தால் இவ்வாறு எந்த செய்தியும் வராது.
Invisible ஆக இருந்தாலும், அவரை தொந்தரவு செய்து அவரின் வசவுக்கு ஆளாகாமல் இருந்தால் சரி!
2 கருத்துகள்
மிகவும் உபயோகமான தகவல் நன்றி நண்பரே
பதிலளிநீக்குdont copy other website's content to your blog.
பதிலளிநீக்குகருத்துரையிடுக