மனிதனை கொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் உண்மையா ?


கடந்த சில நாட்களாக உங்களில் பலருக்கு

Death Call's / "Killer Phone Number " Warnings
Hi All,
Its very important news for all of you. Do not pick up calls Under given numbers.
, 9888308001
, 9316048121 91+
, 9876266211
, 9888854137
, 9876715587
These
numbers will come in red color, if the calls comes up from these
numbers. Its with very high wave length, and frequency. If a call is
received on mobile from these numbers, it creates a very high frequency
and it causes brain ham range.
It's not a joke rather, its
TRUE. 27 persons died just on receiving calls from these numbers. Watch
Aaj Tak (NEWS), DD News and IBN 7.
Forward this message to all u'r friends and colleagues, and relatives


என்றொரு sms / email வந்திருக்கும். நமது நண்பர்கள் நம்மீது கொண்ட அக்கறையினால் இதை அனுப்பியிருப்பர்.

இதில்
(7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587) எனும்
கையடக்கத் தொலைபேசி இலக்கங் களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க
வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த
அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High
frequency) கார ணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள் ளாகினர் என்றும், இந்த
அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத்
தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) (email) ஈமெயில் மூலமும்
அனுப்பப்பட்டது.

ஆனால் இது உண்மையா?

இணையத்தில் தேடிப்பார்த்தபோது இந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் அனுப்பப்பட தொடங்கியிருப்பது தெளிவாகுகிறது.


மக்கள் அச்சப்படும் 2007 இல் வெள்ளிக்கிழமை வந்த ஏப்ரல் 13 இல் இது பாகிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



ஆனால் இதுவரை பொறுப்புவாய்ந்த ஊடகங்களில் இது பற்றி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா?


இல்லை என்பதே பதில். ஒரு ஏப்ரல் பூல் க்கு ஆரம்பிக்கப்பட்ட sms இன்றுவரை தொடர்கிறது போல் தெரிகிறது.


ஆயினும்


இதை மறுத்து ஊடகங்களோ, தொலைத்தொடர்பு நிறுவனங்களோ செய்தி வெளியிடவில்லை.


ஏன்?


எல்லாம் காசுதான். இவ்வாறான smsகளை அனுப்புவதன்மூலம்பணம் சம்பாதிக்கப்போவது யார்? அதே தொலைத்தொடர்பு நிறுவனங்கள்தான்.

கருத்துரையிடுக