பாஸ்வேர்ட் திருடித்தரும் கூகிள்


இந்த இடுகையை  போடுவதற்கு முன் ஆய்ந்து பார்த்தேன் இதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை காரணம் சில தளங்களே தங்கள் கடவுச்சொல்லை எந்தவொரு பாதுகாப்பின்றி பொதுவாக்கிவிட்டுள்ளது. அதை லாவகமாக எடுப்பதே தேடுவோரின் வேலை. சில குறிப்பிட்ட கட்டளைகளின் படி தேடினால் கடவுச்சொல் கொண்ட கோப்புகள் கைக்கு வரும். இந்த  முறை கூகுளுக்கு மட்டும் பொருந்துவதில்லை எல்லா தேடுதளங்களுக்கும் பொருந்தும் . ஆனால் கூகிள் தான் அதிகளவில் தேடித்தருவதால் இப்படிச்சொல்லலாம் .


inurl:passlist.txt
inurl:passwd.txt

அதிகமாக .xls  கோப்புகளிருப்பதால் இந்த நிரலி துணைசெய்யும் 
“login: *” “password= *” filetype:xls




என்ற குறிகளை எந்தவொரு தேடுதளத்தில் போட்டாலும் கடவுச்சொல் கொண்ட .xls  வகை கோப்புகள் கிடைக்கும்.



இதில் குறிப்பிட வருவது என்னவென்றால்  எந்தவொரு காரணத்தைக் கொண்டும் உங்கள் கடவுச்சொற்களை எந்தவொரு கோப்பிலும் இட்டுவைக்காதீர்கள். அதையும் இணையத்தில்  லாவகமாக திருடக்கூடும். ஏனெனில் சிலர்  அதிகமான தளங்களில் பயனர் பெயர் வைத்துக்கொண்டு  தங்கள் கடவுச்சொல்லை மறக்காமலிருக்க கோப்புகளில் பதிந்து வைக்ககூடும். அப்படியிருந்தால் அதை அழித்துவிடுங்கள் .

1 கருத்துகள்

கருத்துரையிடுக