சென்ற வருடம், நான் நாட்குறிப்பு கணினியில் எழுதலாம் என்று திட்டமிட்டேன். முதலில், MS வேர்டில் எழுத ஆரமித்தேன். ஒரு வாரம் சென்றவுடன் அதை மேலான்மை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. பின் பல்வேறு தளங்களில் தேடி, 3 டிஜிட்டல் டைரி மென்பொருளைக் கண்டுபிடித்து உபயோகித்தேன். அதில் எனக்கு மிகவும் பிடித்து“iDigitalDiary".
இதை உபயோகிப்பது மிகவும் எளிமையாக உள்ளது. இதில் உங்கள் விருப்பம் போல், ஒரு நாளைக்கு எத்தனைப் பக்கம் வேண்டுமென்றாலும் எழுதலாம். இதில் எழுதப்படும் அனைத்து தகவல்களும் “என்கிரிப்ட்” செய்யப்பட்டுக் கணினியில் சேமிக்கப்படுகிறது. மேலும், இந்த மென்பொருளில் உங்கள் நாட்குறிப்பிற்கான கடவுச் சொல் கொடுத்தால் மட்டுமே, திறக்கும். ஆகையால், அனைத்துத் தகவல்களும் மிக பாதுகாப்பாக இருக்கும்.
இன்றிலிருந்து ஆங்கிலத்தில் வலைப்பூ ஒன்று எழுத ஆரம்பித்துள்ளேன். http://techblog.indioss.com - தொடர்ந்து ஆதரவு
தாருங்கள்.
இதே தகவலை ஆங்கிலத்தில் படிக்க,இங்கு செல்லவும்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக