Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

12 ஜன., 2010

கணனிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்களின் பொதி


கணணியை புதியதாக வாங்குபவர்கள் அல்லது கணனியில் புதியதொரு இயங்குதளத்தை (Operating system) நிறுவினால் அததற்கு சில அடிப்படையான மிக மென்பொருட்கள் தேவைப்பாடு அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தேடி எடுத்து நிறுவுவது என்பது மிக ஒரு கடினமான விடயம். அப்படியானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நிறுவுவது என்பது நேரம் விரயமான செயல். அப்படியான மென்பொருட்களை ஒரே மென்பொருளில் எடுத்து நிறுவினால் மிக இலகுவாக இருக்கும் அத்தகைய ஒரு மென்பொருள் பொதி பற்றிய பதிவுதான் இது.


Ninite என்னும் மென்பொருளானது எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் பெறக்கூடியதான ஒரு மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமான ஒரு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இந்த மென்பொருளில் இணைய உலாவிகள் (Web Browsers), தகவல் பரிமாற்ற ஊடகங்கள் (Messaging), காணொளி, ஒலி ஊடகங்கள் (Media Players) , புகைப்பட வடிவமைப்பு மென்பொருட்கள் (Imaging), ஆவணமென்பொருட்கள் (Documents), கணணி பாதுகாப்பு(Security), போன்ற இன்னும் பல மென்பொருட்களை உள்ளடக்கியதாக இந்த மென்பொருள் பொதி காணப்படுகின்றது. மிகவும் பயனுள்ள இலவச மென்பொருள் என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.


மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: Ninite http://www.ninite.com/






1 கருத்து:

  1. தயவு செய்து மற்றவர்கலின் வலைப்பதிவில் இருன்து பிரதி செய்பவற்றை அவ்ர்களின் இணையச்சுட்டியுடன் வழங்குங்கள்.
    இந்த பதிவானது வன்னி தகவல் தொழில்நுட்பத்திற்கு சொந்தமானது.
    http://vannitec.blogspot.com/2010/01/blog-post_11.html

    பதிலளிநீக்கு