Microsoft Office 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்


மைக்ரோசாப்ட் நிறுவனம் Microsoft Office 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும். ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த ஆபீஸ் தொகுப்பில் என்னவெல்லாம் புதியதாக உள்ளன என்று தெரிய பல தளங்கள் உள்ளன. http://www.neowin. net /news/main/09/11/18/microsoftoffice2010topnewfeatures என்ற முகவரியில் உள்ள தளத்தில் சிறப்பான தகவல்கள் உள்ளன.
டெல் தரும் புதிய ஹோம் பி.சி.
இன்ஸ்பிரான் ஒன் 19 (Inspiron One 19) என்ற பெயரில் அண்மையில் டெல் நிறுவனம் ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வீடுகளில், சிறிய அலுவலகங்களில், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் வைத்து இயக்க போதுமான பெர்சனல் கம்ப்யூட்டராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கருப்பு வண்ணத்தில் பளபளக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.18.5 அங்குல டிஸ்பிளேயுடன் மானிட்டர், பெண்டியம் டூயல் கோர் அல்லது கோர் 2 டுயோ ப்ராசசர் (கிராபிக்ஸ் இணைந்து) , 4 ஜிபி டூயல் சேனல் டி.டி.ஆர். 2 மெமரி, 640 ஜிபி ஹார்ட் டிஸ்க், 16 எக்ஸ் டிவிடி ஆப்டிகல் டிரைவ், ஆடியோ 2 வாட் சைட் ஸ்பீக்கர்கள், 8டிண1 மீடியா கார்ட் ரீடர்,1.3 வெப் கேமரா, மைக், 6 யு.எஸ்.பி.போர்ட் ஹெட்போன் மற்றும் மைக் ஜாக், இரண்டு பி.எஸ்.2, பேரலல் மற்றும் சீரியல் போர்ட் ஆகிய, இன்று எதிர்பார்க்கும், அனைத்து வசதிகளும் திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக