Microsoft Office 2007 -ல் Office 2003 -இன் மெனு வடிவை அமைக்க



நீங்கள் மைக்ரோசாப்ட் ஆஃபீஸ்  2007 உபயோகித்துக் கொண்டு இருக்கிறீர்களா? ரிப்பன் மெனுவில் நீங்கள் தேடும் கட்டளை எங்கு உள்ளது என்ற குழப்பம் தீர நெடு நேரமாகலாம். சில சமயங்களில் உங்கள் பாஸ் குறிப்பிட்ட சமயத்திற்குள்ளாக முடித்து தரச்சொல்லி  கொடுத்த வேலையை இந்த ரிப்பன் மெனு குழப்பத்தின் காரணமாக டென்ஷனாகி முடியை பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஒரு வேளை 2007 -ல்  2003 -இன் மெனு வடிவை அமைக்க வழி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறதா?

இதோ உங்களுக்காக.., UBitMenu Add-in.  இது ஒரு புதிய ரிப்பனில் 2003 மெனுவை உங்கள் 2007  அல்லது 2010 பதிப்பில் கொண்டு வரும். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)



இந்த Add-in உங்கள் Word, Excel, மற்றும்  PowerPoint 2007 மற்றும் 2010 -ல் 2003 பதிப்பின் கிளாசிக் மெனுவை நிறுவும். அதுமட்டுமல்லாமல் 2007 -ல் உள்ள அனைத்து புதிய வசதிகளும் அப்படியே இருப்பது இதன் சிறப்பு. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இதில் 2003 -nam மெனுவும் நிறுவப்பட்டுள்ளது, அதோடு 2007- ல் உள்ள PDF ஆக சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.



Power Point -ல் எளிதாக வேலை செய்யுங்கள்.




இந்த UBitMenu நிறுவிய பிறகும் 2007-ல் தரப்பட்டுள்ள Mini Formatting Toolbar வசதி மாறாமல் அப்படியே உள்ளது இதன் சிறப்பு.



இந்த Add-in சொந்த உபயோகத்திற்கு மட்டும் இலவச உரிமத்துடன் தரப்பட்டுள்ளது.




கருத்துரையிடுக