16 டிச., 2009
ஜிமெயில் காண தனி கீ போர்டு
கூகுள் ஜிமெயில் தளத்தில் பல ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது பலருக்கு சிரமமாயுள்ளது என்ற குற்றச் சாட்டு பொதுவாக எழுவது உண்டு.
இந்த சிரமத்தைப் போக்க, கூகுள் ஜிமெயில் தளத்தில் பயன்படுத்த எனத் தனியே கீ போர்ட் ஒன்று உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 19.99 அமெரிக்க டாலர். விரைவில் இந்தியாவிலும் இது வரலாம்.
இது 19 கீகள் கொண்டு நம்பர் கீ பேட் போல அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கீயிலும் ஒரு ஷார்ட் கட் வழி அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு மெசேஜை ஸ்டார் இட்டு அமைப்பது, சர்ச் ஒன்றைத் தொடங்குவது, மெசேஜ் த்ரெட்களுக் கிடையே செல்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த ஷார்ட் கட் கீகள் வழி அமைத்துக் கொடுக்கின்றன.
இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதனை செட் செய்வதற்கு எனத் தனியே டிரைவர் புரோகிராம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஜிமெயில் இணைய தளம் சென்று அதில் ஷார்ட் கட் கீகளை இயக்கும் விருப்பத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.
ஜிமெயில் இணைய தளம் இல்லாத போது, இந்த ஷார்ட் கட் கீகளில் என்ன கீகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்த கீகளாக இவை செயல்படும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், இதனை வடிவமைத்து, உருவாக்கித் தந்தது கூகுள் நிறுவனம் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சார்லி மேசன் என்பவராவார்.
ஏற்கனவே நீங்கள் ஜிமெயில் ஷார்ட் கட் கீகளை நன்கு பயன்படுத்துபவராக இருந்தால் இந்த கீ போர்டு தேவையில்லை. இருப்பினும் விரைவான செயல்பாடு இதன் மூலம் கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இந்த கீ போர்டு உதவியாக இருக்கும்.
ஜிமெயிலில் ஏறத்தாழ 69 கீ போர்டு ஷார்ட் கட் கீகள் இருக்கின்றன என்று எண்ணுகையில் இந்த கீ போர்டு நம் வேலையை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை
Recommended Articles
- Free Call
Google மூலம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளAug 26, 2010
இன்று நாளாந்தம் தொழில்நுட்ப புரட்சி விரிவடைந்து கொண்டு செல்லும் வேகத்திற்கு அதனைப் பயன்படுத்தும் பயனாளார்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் தினறுகின்றன...
- Gmail
ஒரே நேரத்தில் இரண்டு ஜீமெயில் கணக்கை பார்வையிடுவது எப்படி.Jul 28, 2010
மிக இலகுவான வேலையிது . ஒன்றல்ல பத்து ஜீமெயில் ஆனாலும் பத்து Browser களைக் கொண்டு ஒரே நேரத்தில் திறக்க முடியும். Fire Box ல் ஒரு கணக்கையும் In...
- Gmail
உங்கள் பழைய ஈமையில் தொடர்புகளை ஜீமெயிலுக்கு கொண்டுவரJun 26, 2010
யாஹூ, ஹாட்மெயில் போன்ற இலவச இமெயில் புரோகிராம்களைப் பயன்படுத்திப் பின் ஜிமெயிலுக்கு மாறியுள்ளவரா நீங்கள்! அப்படியானால், அதில் உள்ள மெயில்களையும், கா...
- Gmail
ஜிமெயில் நுட்பங்கள் - படங்கள் & பைல்களை நேரடியாக அட்டாச் செய்வதற்கு.Jun 18, 2010
ஜிமெயிலில் பைல்கள் மற்றும் படங்களை Drag & Drop முறையில் இணைக்கும் வசதியை முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற...
Newer Article
புவி சூடாதல் பற்றிய கட்டுரை PDF வடிவில் உங்களுக்காக .
Older Article
Send To மெனுவில் உங்கள் போல்டர்
Tagged In:
Gmail
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக