பன்றிக்காய்ச்சல்


தென்கொரியாவின் அரச மருத்துவப் பல்கலைக் கழகம் ஒன்று ஸ்வைன் என்று பரவலாக அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தக் கூடிய புதிய தடுப்பு மருந்தொன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இம்மருந்து அமெரிக்காவின் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்புக்களாலும் (CDC) உலக சுகாதார திணைக்களத்தாலும்(WHO) இன்னமும் ஊர்ஜிதப் படுத்தப்படவில்லை.

இத்தடுப்பு மருந்தானது மரபியல் விஞ்ஞானத்தின்(Genetics) மூலம் முன்னேற்றப்பட்ட ஓர் உயிருள்ள வைரஸ் கிருமியைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மருந்து உடலில் செலுத்தப்படும் போது ஸ்வைன் தொற்றை ஏற்படுத்தும் H1N1 வகைக் கிருமிகளுக்கெதிரான நிர்ப்பீடணத்தை (Vaccine) வழங்கி அவற்றின் பெருக்கத்தைத் தடுக்கும்.

ஸ்வைன் தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் உலகளவில் நடைபெறும் போட்டியில் நாமும் எமது எல்லைப் போட்டியாளரைத் தயார் செய்து விட்டோம் என 'சுங்க்னம்' அரச பல்கலைக்கழகக் கல்லூரியின் கால்நடை(veterinary) வைத்திய பீட பேராசிரியர் 'சியோ சங் ஹெயூ' கூறியிருக்கின்றார்.

இத்தகைய புதிய மருந்துகள் யாவும் அங்கீகரிக்கப் பட்ட பின்பும் தரக் கட்டுப்பாடு அளவீடுகளுக்கும் மருத்துவ ஆய்வு கூடங்களில் வெள்ளோட்டத்துக்கும் உட்படுத்தப்பட்டு பின்னர் நாட்டின் உணவு-போதைப்பொருள் தலைமைப் பீடத்தாலும் அனுமதிக்கப்பட்ட பின்பே அமெரிக்காவிலுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் என உலக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 ஸ்வைன் அறிகுறிகள் -

கருத்துரையிடுக