21 நவ., 2009
குழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்
அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே 47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள் வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.
கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான் சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.
அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக குழந்தைகள்தினத்தில் வழங்கி மகிழ் செய்யுங்கள்.
தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது.
இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.
முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது. Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இதேபோல ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.
இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி உங்கள் குழந்தைகளின் உற்ச்சாகத்தைப் பாருங்கள்.
குழந்தைகளுக்கு எனது இனிய
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
.
Recommended Articles
- Game
உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்கDec 14, 2009
நம் இணையபக்கத்தில் என்னதான் புதுமை செய்தாலும்சிறிது நேரத்தில் நம் இணையதளத்தை பார்ப்பவர்கள்சோர்ந்து விடக்கூடும். அப்போது அவர்கள் மூளையைRefresh- செய்ய ...
- Game
Barn Buddy விளையாடுவீங்களா???Nov 23, 2009
பார்ண் படி விளையாட்டு இடைமுகம் கொஞ்சநாளாவே பேஸ்புக்கில எங்க பாத்தாலும் Barn Buddy பேச்சுத்தான். யே! நான் இண்டைக்கு 10 கத்தரிக்கா விற்றேன். யே! நான் இ...
- Game
குழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்Nov 21, 2009
#fullpost{display:inline;} அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே 47 ஐயும் கொடுத்...
- Game
மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி)Oct 30, 2009
1. என் பணம் எங்கிருந்து வருகிறது விபரம் அறிய? 2. எங்கு போகின்றது, யாருக்கு போகின்றது என்ற விபரம் அறிய? 3. காலம் கடத்தாமல், அபராதம் இல்லாமல் பில் கட்...
Newer Article
நெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசியமான ஒன்று
Older Article
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய
Tagged In:
Game
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக