2 நவ., 2009
வைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்
கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி அழிக்க, புதிதாக, டிஜிட்டல் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.என்ன வியப்பாக இருக்கிறதா, உண்மை தான். கம்ப்யூட்டர் உலகில் எதுவும் சாத்தியம் தான்.
இதுகுறித்து, கணினி அறிவியல் துறை பேராசிரியர் எரின் பல்ப் கூறியதாவது:
சாதாரணமாக, ஒரு இடத்தில் உணவுப் பொருட்களை கண்டறிந்தால், அந்த இடத்தில், எறும்புகள் அனைத்தும், கூட்டாக ஒன்று சேர்ந்து விடும். அதேபோல், ஆபத்து என்றாலும், அந்த இடத்தில் கூட்டமாக சேர்ந்து, தங்கள் எதிரியை அழித்துவிடும் இயல்பு கொண்டது எறும்புகள்.
இந்த டெக்னிக்கை பாதுகாப்புக்காக, கம்ப் யூட்டர் துறையிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.அந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானது தான், டிஜிட்டல் எறும்புகள்.கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் ஏற்படும், அச்சுறுத்தல்களை சமாளிக்க, பல்வேறு வகையான டிஜிட்டல் எறும்புகள் உருவாக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, விஞ் ஞானி கிளென் பிங்க் கூறுகையில்,
"டிஜிட்டல் எறும்புகள், கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் நகர்ந்து செல்லும் போது, டிஜிட்டல் அடையாளங் களை விட்டு செல்லும். இந்த டிஜிட்டல் அடையாளங்கள் மூலம், எறும்புகள் ஒன்றன் பின், மற்றொன்று என பின்பற்றி செல்லும்.
"எறும்புகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அமைப்பு, வழக்கமான பாதுகாப்பு முறையை விட வேகமாக செயல்படும். இவை, புதிய தொற்றுக்களை கண்டறியும் வகையில் முறையான இடைவெளியில், அடிக்கடி மேம்படுத்தப்படும்."இது கம்ப்யூட்டரில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் வகையில், புரோக்கிராம் செய்யப் பட்டது' என்றார்
Recommended Articles
- Virus
எச்சரிக்கை! எச்சரிக்கை! புதிய வைரஸ் எச்சரிக்கை!!!Sept 23, 2010
மனிதனாப் பிறந்தவர்கள் அனைவரும் இறைவனின் படைப்பில் பல வித்தியாசமான நடத்தைகளைப் பண்புகளை கொண்டிருப்பதும் இயல்பு தான். மற்றவரின் துன்பத்தில் சந்தோஷப்படுவ...
- Virus
கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்Jun 20, 2010
குரோம் பிரவுசருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்புபவர்கள், குரோம் எக்ஸ்டன்ஷன் என்ற பெயர...
- Virus
கணினி வைரஸ் என்பதைப்பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள்May 08, 2010
Computer Virus என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதனை நாம் தமிழில் கிருமி நிரல்கள் என்று கூறுகிறோம். இத்தகைய கிருமிநிரல்க...
- Virus
வைரஸை வாசலிலேயே தடுக்கும் விண் பெட்ரோல்Dec 16, 2009
நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செ...
Tagged In:
Virus
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக