பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம்? எளிய வழி


நண்பர்களே வேலை பளு காரணமாக  இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சரி ஒரு பதிவு போட்டு விடுவோம் என்று இன்று உடனே வந்து விட்டேன்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் விண்டோஸ் 7 இன்னும் முழுமையாக வெளியிடவில்லை அதற்குள் விண்டோஸ் 8 ன் வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.  2012 மத்தியில் வெளிவரும் என்று தகவல்.

விஎல்சி மீடியா ப்ளேயரின் புதிய பதிப்பு 1.0 வெளிவந்து விட்டது.  இதில் நிறைய குறைகள் களையப்பட்டு வெளிவந்துள்ளது. தரவிறக்கி நிறுவி செயல்படுத்தி பாருங்கள்.  விஎல்சி தரவிறக்க சுட்டி
விஎல்சி இணையத்தளம் சுட்டி


பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவ்களை இந்த முறையில் பார்மெட் செய்து பாருங்கள் கட்டாயம் கைமேல் பலன் கிடைக்கும். 

முதலில் ஸ்டார்ட் மெனு  Start Menu கிளிக் செய்யுங்கள்.

ரன் Run தேர்வு செய்யுங்கள்.  அந்த பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.

பிறகு   Format/x J: என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.  இதில் J:  என்பது உங்கள் யுஎஸ்பி ட்ரைவின் எழுத்தாகும்.

கருத்துரையிடுக