நாம் நமது கணினியில் விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகிய இயங்குதளங்களை வெவ்வேறு பார்ட்டீஷன்களில் பதிந்திருந்தால், கணினியை துவக்கியவுடன் வரும் க்ரப் பூட் மெனுவில் உபுண்டு default ஆக இருக்கும். ஒருவேளை நாம் விண்டோசில் பணிபுரியலாம் எனக்கருதி கணினியை துவக்கி, சிறிது கவனக் குறைவாக இருந்தாலும், உபுண்டு பூட் ஆகிவிடும்.
க்ரப் பூட் லோடரில் விண்டோஸ் இயங்குதளத்தை default ஆக மாற்ற என்ன செய்யலாம்?
உங்கள் கணினியை உபுண்டுவில் பூட் செய்து கொண்டு, டெர்மினல் திரைக்குச் சென்று கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
sudo gedit /boot/grub/menu.lst
(gedit என்பது உபுண்டுவில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டராகும்) இனி திறக்கும் கோப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்லவும்.
## default num
# Set the default entry to the entry number NUM. Numbering starts from 0, and
# the entry number 0 is the default if the command is not used.
#
# You can specify ’saved’ instead of a number. In this case, the default entry
# is the entry saved with the command ’savedefault’.
# WARNING: If you are using dmraid do not change this entry to ’saved’ or your
# array will desync and will not let you boot your system.
default 0
இதில் இறுதியாக உள்ள default 0 என்பதுதான், முக்கியமான பகுதியாகும். இந்த 0 (Zero) வுக்கு பதிலாக பூட் மெனுவில் விண்டோஸ் இருக்கும் வரிசை எண்ணை கொடுக்கவும், (வழக்கமாக 0 விற்கு பதிலாக 4 என மாற்றலாம்.) கோப்பை சேமித்துவிட்டு கணினியை மறுபடி துவக்கவும்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக