நம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எளிய வழி.

நம்ப தோஸ்து அல்லாருக்கும் , இந்த டவுசரோட வணக்கம் பா !!

எனுக்கு ஒரு குசி இன்னான்னா !! நெரியோ பேருக்கு OS மாத்த தெரியும்
போல கீது , நானு இன்னாடான்னா !! அது தெரியாத கீறேன் பா !!
செரி அத்த உடு ,

புட்சா பிளாக்கு ஆரம்பிச்சி கீரவங்களுக்கு !! இந்த மேட்டர் !!

இந்த தபா , ஒரு சின்ன மேட்டர் பா !! நம்ப பிளாக்குல youtube படத்த
வர வெக்கறது எப்பிடி ?

இது நெரியோ பேரு சொல்லி இருப்பங்கோ !! இருந்தாலும் நானும் ஒரு
தபா கூவிக்கிறேன் பா !!

அதே மேரி நமபுளுக்கு புட்சா மேரி கீர, வீடியோவ , நம்ப சைடுல கீர
கெட்ஜெட்ல கூட போட்டுக்கலாம் , சோக்கா இருக்கும் ,

இப்போ அது எப்பிடின்னு பாக்கலாம் , மொத்தல்ல youtube ஓபன் பண்ணி
அதுல உங்களுக்கு புட்சா மேரி கீர ஒரு வீடியோவ ஓபன் பண்ணிக்கோங்க !!

அதும் பக்கத்துல ஒரு சின்ன பொட்டில நாம்ப செலக்ட் பண்ண வீடியோ
பத்தி இருக்கும் அதுக்கு கீய Embed அப்பிடின்னு ஒன்னு இருக்கும் அத்த
அப்பிடியே காப்பி பண்ணி ,

நம்ப பிளாக்குல போடறத்துக்கு newpost இன்னு கீர்த , போய் அதுல
Edit HTML கிளிக் பண்ணி அதுல paste பண்ணிடனும் ,

அப்பால compose இன்னு கீர்த அமுக்கி பாத்தா நம்ப போட்ட வீடியோ
அங்க வந்து இருக்கும் அப்பால ,எதுனா நீங்க எழ்தரா மேரி இருந்தா
எழ்தி வெளியிடலாம் ,

அதே மேரி தான் இந்த வீடியோவ , நம்ப கெட்ஜெட்டுல போடறதுக்கும் ,
இப்போ layout ( தளவமைப்பு) போய் அதுல HTMl /javascript இன்னு கீர்த
ஓபன் பண்ணி இந்த Embed கோடிங்க paste பண்ணிடுங்க ,

அதுல கீர அளவ நம்ப கேட்ஜெட் அளவுக்கு ஏத்த மேரி மாத்திக்கலாம் ,

இங்க ஒரு வீடியோ குத்துக்கீறேன் , படா சோக்கா கீது பா !! இன்னா மேரி
அல்லாம் இந்த தம்பி போட்டு வாங்கு வாங்கு இன்னு வாங்குது அத
நீயும் தான் ரவ பாரேன் !!

கருத்துரையிடுக