வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)

சென்னையில், பி.எஸ். என்.எல்., நிறுவனத்தின் 'ஐபிடிவி' இம்மாத முதல் தேதியில் இருந்து வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்தது.

பொதுமக்கள் தற்போது அனைத்து 'டிவி' சேனல்களையும் கேபிள் அல்லது, 'டிடிஎச்' வழியாக பார்த்து வருகின்றனர். வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இணைப்பு பெற்றிருப்பவர்கள், கம்ப்யூட்டரிலேயே அனைத்து கேபிள் சேனல்களையும் பார்க்கும் வசதியை, சமீபத்தில் பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியது.

'ஐபிடிவி' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சேவைக்கென, தனியான 'டிஷ்' அல்லது ஒயர் இணைப்பு தேவையில்லை.


பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்டு இணைப்புடன் சேர்த்தே வழங்கப்படுகிறது. மைவே என்ற நிறுவனத்துடன், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இணைந்து வழங்கும் இந்தச் சேவையில், சேனல்களைப் பொறுத்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


நான்கு மாதங்களுக்கு முன் பரீட்சார்த்த ரீதியாக இந்த சேவை, விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் இந்த சேவை, வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கேபிள்களில் வழங்கப்படும் அனைத்து சேனல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.


வாடிக்கையாளர்கள் தேவைப்படும் திட்டங்களை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும், மைவே நிறுவனத்தை தொடர்ந்து, 'ஏசிடி' எனும் நிறுவனமும் தற்போது தனது சேவையை பி.எஸ்.என்.எல்., 'ஐபிடிவி' மூலம் வழங்க உள்ளது.


இதனால், திட்டங்களுக்கான கட்டணம் போட்டி அடிப்படையில் குறைய வாய்ப்புள்ளதாக, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த, 'ஐபிடிவி' இந்தியாவில் பல நகரங்களிலும் வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்து, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

கருத்துரையிடுக