Insert key யின் பயன்பாடு

விசைப் பலகையின் வலது புற்ம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பய்ன்பாடு என்ன என்பதை அறிவீர்களா?
டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில (Word Processor) வேர்ட் ப்ரொஸசர்களில் எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும்..
அல்லா விடின் இடையில் டைப் செய்யும் எழுத்துக்கள் முன்னர் டைப் செய்த எழுத்துக்களை (Overwrite) அழித்து விடும்.. எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும்.
Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும். அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம்.
எம்.எஸ்.வர்ட் தற்போது Insert நிலையிலா அல்லது Overwrite நிலையிலா இருகிறது என்பதை Status Bar இல் காண்பிக்கும். ஸ்டேட்டஸ் பாரில் OVR என இருப்பின் அது Overwrite நிலையில் இருப்பதாகக் கொள்ளுங்கள்.
அத்தோடு Insert கீயை எம்.எஸ்.வர்டில் (Clip Board) க்ளிப் போர்டில் உள்ளதைப் (Paste) பேஸ்ட் செய்வதற்கான ஒரு குறுக்கு விசையாகவும் பயன்படுத்தலாம்.
அதற்கு Tools மெனுவில் Edit டேபைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Use the ‘Ins’ key for paste என்பதைத் தெரிவு செய்து ஓகே சொலுங்கள்.

கருத்துரையிடுக