இன்னும் கூகுள் (Google) தான் டாப்பர்

இன்டர்நெட்டில் தேடல் இஞ்சின்கள் அடிக்கடி வந்தாலும் ஒரு சில சர்ச் இஞ்சின்கள் தான் மக்கள் நன்மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மையில் காம் ஸ்கோர் (Com Score) என்னும் நிறுவனம் உலக அளவில் இன்டர்நெட்டில் தேடல் இஞ்சின் பயன்பாடு குறித்து ஆய்வினை எடுத்தது.

ஜூலையில் இன்டர்நெட் தேடல்கள் முந்தைய மாதத்தைக் காட்டிலும் 41% உயர்ந்திருந்தது. நடத்தப்பட்ட தேடல்களின் எண்ணிக்கை 11,300 கோடி. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு தேடல்கள் கூகுள் சர்ச் இஞ்சின் வழியாகவே மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டக் காட்டிலும் இது 58% அதிகமாகும். இரண்டாவது இடத்தில் இருக்கும் யாஹூ, கூகுளைக் காட்டிலும் மிகவும் பின் தங்கியே உள்ளது. இதில் மேற்கொண்ட தேடல்களின் எண்ணிக்கை 890 கோடி.

சீனாவின் பைடு (Baidu) சர்ச் இஞ்சின் மூலம் 800 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை இரண்டும் தொடர்ந்து ஒரே நிலையில் இருந்தன. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ச் இஞ்சின் பிங் (ஆடிணஞ்) வழி தேடல்கள் கணிசமாக உயர்ந்திருந்தன. வளர்ச்சி 41%. ஐரோப்பிய மக்கள் தான் மிக அதிகமாக எண்ணிக்கையில் தேடல்களை நடத்தி உள்ளனர்.

கருத்துரையிடுக