Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

30 அக்., 2009

Gmail-க்கு கூகிள் கையாளும் மார்க்கெட்டிங் ராஜதந்திரம்!




நீங்க ஜீமெயில் அடிக்கும்போது எழுத்துக்கு நடுவில் லிங்க் insert செய்யலாம். ஆனால் படம் insert செய்ய முடியாது.

அப்போ ஜீமெயிலில் photo அனுப்ப முடியாதா? முடியும். ஆனா attachment-ல் போட்டுதான் அனுப்பனும்.

குறிப்பிட்ட ஜீமெயில் வந்தவங்க, எழுத்துக்கு நடுவில் படம் பார்க்கமுடியாது. கீழே attachment-னு தனியாத்தான் பார்த்துக்கனும்.

எழுத்தோடு எழுத்தா சேர்க்கும் படத்தை, டெக்னிகலா "inline image" என்று சொல்வார்கள்.

இருந்தாலும், ஜீமெயிலில் inline image சேர்க்க சில குறுக்கு வழிகள் இருக்கின்றன. அதைப்பற்றி இப்போது நான் சொல்லத் தேவையில்லை. ஏன்னா, ஜீமெயில் லாப்ஸிலிருந்து இதுக்கு அதிகாரபூர்வ support வந்துடுச்சி.

எடுத்தவுன்னே இந்த வசதி கிடைக்காது. Settings-> Labs tab -> Inserting Images போய் enable செய்து Save Changes கிளிக் செய்யனும்.


இப்போ, Mail போனீங்கன்னா டூல்பாரில் Insert Link ஐகானுக்கு முன்னால் Insert Image ஐகான் வந்துருக்கும்.


உங்கள் கணினியில் இருக்கும் படம்தான் என்று இல்லை. நெட்டில் இருக்கும் எந்த படத்தையும் முகவரி கொடுத்து inline image-ஆ சேர்த்துக்கலாம். முன்னே மாதிரி attachment தேவையில்லை.

வரும் ஜீமெயிலை பார்ப்பவர்கள் எழுத்தோடு எழுத்தா படத்தையும் பார்த்துக்கொள்ளலாம்.

அது சரி. ஏதோ ஒரு விஷயம் நெருடுதே. ஆங்.... கண்டுபிடிச்சிட்டேன்.

ஜீமெயில் வருவதற்கு முன்னாடியே, யாஹூ மெயில் நான் வெச்சிருந்தப்போ, தேவையான படத்தை ஈமெயில் compose-லே copy & paste பண்ணி எனக்கு நானே அனுப்பிவெச்சுப்பேன்.

அப்பவே வேற மெயில்லே இருந்த விஷயத்தை, ஜீமெயில் புது விஷயம் மாதிரி சொல்லுது. ஜீமெயிலுக்கு இது புது விஷயமா இருக்கலாம். வாஸ்தவம்தான்.

இந்த சின்னூண்டு விஷயத்தை, இப்பதான் introduce செய்தோம்னு வெளிப்படையா சொல்லாமல் , அதுக்கொரு lab வெச்சு, அதுலே கண்டுபிடிச்சதுன்னு சொல்றா மாதிரி script எழுதி, சிவாஜி படத்துக்கு கொடுத்தா மாதிரி பில்டப் வேறே. இது ஒரு சரியான மார்க்கெடிங் ராஜதந்திரம் என்றே சொல்லலாம்.

நான் முந்தைய பதிவிலேயே சொல்லி இருந்தேன்.
மக்களின் கவனத்திலிருந்து ஒரு நாள் கூட விலகக்கூடாது என்று வைராக்கியமாய், தினமும் ஏதாவது பரபரப்பான செய்தி வெளியிடுவதை கூகிள் தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ள வேண்டுமா? Professor கூகிள்கிட்டே தாராளமாக கற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக