தமிழில் பதிவுகள் எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.மேலும் பல நண்பர்கள் இனிய தமிழில் பதிவு எழுத முன்வர வேண்டும் .மேலும் பல புதுமையான படைப்புக்கள் படைத்து இணையத்திலும், தமிழினை இனிக்கச் செய்வோம்.
வலைபதிவர்களுக்கான சிறு சிறு குறிப்புகளை இந்த தொடர் பதிவில் எழுதுகிறேன்.பதிவு எழுதும் நண்பர்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறேன்.உங்களுக்கு பதிவில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.முடிந்தவரை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.நன்றி.
தினம் தினம் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் கூகுளின் மற்றுமோர் சேவை,Blogger-இன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர்.
இந்த சேவையை பெற :
- உங்கள் பிளாக்கர் கணக்கில் உள் நுழையுங்கள்.
- Settings கிளிக் செய்யுங்கள்.கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.
மேம்படுத்தப்பட்ட எடிட்டரின் புதிய வசதிகள்:
1.Preview: நீங்கள் இப்போது வலைத்தளத்தில் எப்படி உங்கள் பதிவு தோன்றுமோ.. அப்படியே பார்க்கலாம்.
2.Increase Height :எடிட்டரின் உயரத்தை அதிகபடுத்தலாம்.எடிட்டரின் கீழ் வலது மூலையில் மௌசால் இழுத்து உயரத்தை கூட்டலாம்.அகலத்தை கூட்ட முடியாது.
3.Post Options : பழைய எடிட்டரில் ,நீங்கள் பதிவை எழுத ஆரம்பித்த நேரமே பதிவிடும் போதும் தெரியும்.அதை நாம்தான் மாற்ற வேண்டும் .இது மாற்றி அமைக்கபட்டுள்ளது.
4.அழகிய டூல்பார்:
5.Add muliple Images :
இப்போது பதிவிற்கு வேண்டிய படங்களை அனைத்தையும் தேர்வு செய்து விட்டு .வேண்டிய இடத்தில் இடம் பெறச் செய்யலாம். 6.Image Bubble:படங்களை அளவினை இங்கேயே மாற்றலாம்.படத்தினை டபுள் கிளிக் செய்தால் போதும் ,வேண்டிய அளவினை தேர்வு செய்யலாம்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக