இன்றைய இணையதள வளர்ச்சியில் இணையதள தகவல் திருட்டு என்பது எளிதாக நடைபெறும் ஒன்றாகிவிட்டது. நம் இணையதளத்திலோ, வலைப்பதிவிலோ நாம் வெளியிட்ட தகவல்களை நம் அனுமதியின்றி எடுத்து தங்களுடைய கருத்துக்களைப் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் நம் அனுமதியின்றி பல இணையதளங்கள் நம் கட்டுரைகளை எடுத்து வெளியிடுகின்றன. சென்ற மாதம் கூட என் அனுமதியின்றி கொழும்பிலிருந்து வெளியாகும் தினகரன் என்னும் நாளிதழ் என் கட்டுரையை வெளியிட்டிருந்தது.ஆயினும் கட்டுரையின் கீழே நன்றி முனைவர்.இரா.குணசீலன் என்று குறிப்பிட்டிருந்தது.
இத்தகைய நாகரிகங்களைக் கூடக் கடைபிடிக்காமல் பலர் கருத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனை நாம் அறியும் போது நமக்கு வருத்தமாக இருக்கும். நம் வருத்தத்தைப் புரிந்து கொண்டு (http://copyscape.com//" ),இத்தளம் செயல்படுகிறது. இத்தளத்துக்குச் சென்று நம் இணையதள முகவரியையோ, வலைப்பதிவு முகவரியையோ அளித்தால் சில நொடிகளில் நம் பதிவு எந்தெந்த வலைப்பதிவுகளில், இணையதளங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற விபரங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக