வலைப்பதிவில் பிடிஎப் பைலை இணைக்க
நாம் வலைப்பதிவில் எழுதுகின்றோம். ஆனால் அதில் பிடிஎப்
பைலைஇணைத்தால் நமது வாசகர்களுக்கு மேலும்
அதிக தகவல்களை தரலாம்.சரி பிடிஎப் பைலை எப்படி
பதிவில் இணைப்பது என பார்க்கலாம்.
முதலில் உங்களிடம் உள்ள பைலை பிடிஎப் பைலாக
மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.
உங்கள் இ-மெயில் முகவரி கொடுத்து அதில் உறுப்பின
ராகுங்கள்.அடுத்து அதில் உள்ள Publish கிளிக் செய்தபின்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில்
உள்ள Publishing மற்றும் Options Privacy-ல் தேவையான
தை கிளிக் செய்யுங்கள்.அடுத்து Publish கிளிக்செய்து
உங்கள் பிடிஎப் பைல் உள்ள் டிரைவைதேர்ந்தெடுத்து
பைலை பதிவேற்றுங்கள்.
பைலை பதிவேற்றியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஒப்பன் ஆகும். அதில் உங்கள் பிடிஎப் பைலின் category-யை
தேர்வு செய்யு்ங்கள்.
தேவையான விவரங்கள் கொடுத்து சேவ் செய்து
வெளியேறுங்கள்.அடுத்து நீங்கள் பதிவேற்றம் செய்த
புத்தகத்தினை பார்க்கலாம்.
இதன் வலப்புறம் உள்ள ஸ்கோரல் பார் தள்ளுவதன் மூலம்
முழுப்புத்தகத்தையும் நாம் படிக்கலாம். இப்போது வலது
மூலையில் உள்ள EMBED கிளிக் செய்தால் நீங்கள் பதிவேற்றம்
செய்த புத்தகத்தின் EMBED கிடைக்கும். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
உங்கள் பிளாக்கின் இடுகையிடல் திறந்து அதில் உள்ள
HTML ஐத் திருத்து கிளிக் செய்து நீங்கள் காப்பி செய்ததை
இங்கு பேஸ்ட் செய்யுங்கள். சேமித்து வெளியேறுங்கள்.
இப்போது உங்கள் பிடிஎப் பைலானது உங்கள் பதிவில்
இருப்பதை காணலாம்.இதைப்போலவே நான் மர்பி விதிகள்
1000 என்கின்ற பதிவை இணைத்துள்ளேன்.
இந்த தளம் பற்றி இன்னும் ஒன்று சொல்லவிரும்புகின்றேன்.
இந்த தளத்தில் தமிழ் உள்படஏராளமான புத்தகங்கள் உள்ளது.
உங்களுக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவினை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய PSD பைலுக்கான டிசைன்:-
டிசைன் செய்தபின் வந்துள்ளபடம் கீழே:-
வலைப்பதிவில் பிடிஎப் பைலை இணைக்க இதுவரை
கருத்துரையிடுக
கருத்துரையிடுக