தமிழில் பிடிஎப் செய்யலாம்…


பிடிஎப்(pdf) என்பது Portable Document File என்பதன் சுருக்கமாகும். இதுவரை தமிழ் இணையதளங்கள் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்தன. இன்றைய நிலையில் யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு மாறிவருகின்றன. அன்று முதல் இன்று வரை தமிழ் இணையதளங்களில் தோன்றும் எழுத்துருச் சிக்கலின் தீர்வுகளில் தனித்தன்மையுடன் விளங்குவது பிடிஎப் என்னும் முறையாகும். அடாப் ரீடர் வாயிலாக இந்த பிடிஎப் கோப்புகளைப் படிக்கமுடியும்.இதற்கென வேறு எழுத்துருக்கள் தேவையில்லை என்பதால் பலராலும் விரும்பத்தக்கதாக பிடிஎப் இன்றுவரை விளங்கி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரு புள்ளிக்குள் அடக்கி வைத்திருப்பதாக இம்முறை விளங்குவது குறிப்பிடத்தக்கது.இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பல்வேறு இணையதளங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.



பல்வேறு இணையதளங்கள் இலவசமாக வேர்டு உள்ளிட்ட தரவுகளை பிடிஎப் முறைக்கு மாற்றித்தருகின்றன. இவ்விணையதளங்களுக்குச் சென்று மாற்ற வேண்டிய தரவுகளை உள்ளிட்டு நம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சில மணித்துளிகளில் நம் மின்னஞ்சலுக்கு நம் பிடிஎப் கோப்புகள் வந்து விடும்.இவ்விணையதளங்களில் மாற்றித்தரப்படும் பிடிஎப் கோப்புகள் ஆங்கில முறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எவ்விதமான சிக்கலுமின்றி உள்ளன.ஆனால் தமிழ்த்தரவுகளை இவ்விணையதளங்களின் வாயிலாக பிடிஎப்பாக மாற்றும் போது தமிழ் எழுத்துருக்கள் சிதைந்து காணப்படும் நிலையே இன்று வரை உள்ளது.மேலும் இணைய இணைப்பில் மட்டுமே பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் நிலை இருந்தது.இதற்கு மாற்றாக இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தமிழ் பிடிஎப் கோப்புகளை நாமே உருவாக்குவதற்காக ஒரு மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. 


இவ்விணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு முதல் பக்கத்தில் கிடைக்கும் Converter, Cute pdf writer என்னும் இரு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவேண்டும்.இணையத்தில் நிறுவிக் கொள்ளவேண்டும் முதலில் கன்வெர்டரையும், பிறகு கியூட் பிடிஎப் ரைட்டரையும பதிவிறக்கவும். மாற்றித் பதிவிறக்கினால் சிக்கல் ஏற்படும். 

நாம் பிடிஎப் செய்யவேண்டிய தமிழ்த் தரவுகளை திறந்துகொள்ளவும் (எம்.எஸ் வேர்டு) (File>Print) பின் அந்தக் கோப்பில் இடது மேல்பக்க மூலைப்பகுதியில் உள்ள பைல் செல்லவும், அதன் கீழ் உள்ள பிரிண்ட் பகுதியைச் சொடுக்கினால் Print Window தோன்றும் அதில் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸ் தோன்றும். அதில் Cute pdf writer ஐத் தெரிவு செய்து பிரிண்ட் கொடுக்கவும். கோப்பு தயாரிக்கப்பட்டு சில நொடிகளில் எங்கு சேமிக்கவேண்டும் என்று தோன்றும். இடத்தைச் சுட்டினால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும்.

எவ்விதமான எழுத்துருச் சிக்கலுமின்றி இணைய இணைப்பே இல்லாமல், இலவசமாகத் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் பிடிஎப் கோப்பினை எந்த இணையதளத்திலும் சிக்கலின்றித் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் படிக்க அடாப் ரீடர் மட்டும் அக்கணினியில் இருக்கவேண்டும்.

கருத்துரையிடுக